Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கனவுகளிலிருந்து விடுபடுதலும் .. புதிய உத்திகளின் அவசியமும் — கோபி

Featured Replies

பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுபட்டு இந்திய நாடு உருவானதன் அறுபத்தைந்தாவது வருட நிறைவு இவ்வாரம் கொண்டாடப்பட்டது. இவ்வேளையில் தற்கால இந்தியா பற்றிய பல ஆய்வுகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாயிருந்தன. இந்த ஆய்வுகளில் மோகன்தாஸ் காந்தியின் கனவுத்திட்டமான ‘கிராம சுயராஜ்ஜியம்’இ; அதனிலிருந்து விலகிய சந்தைப்பொருளாதாரத்தை ஒட்டிய நேருவின் கொள்கைகள், இந்திய அரசின் தற்போதைய வல்லாதிக்கக் கனவு, பொருளாதாரம் என பல்வேறு விடயங்களை ஒட்டியிருந்ததைக் அவதானிக்க முடிந்தது. இவற்றுள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை பற்றிய கருத்துகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தியாவிடம் குறித்துச் சொல்லக்கூடியதான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமலிருப்பது இதற்கான காரணமாக அமைந்திருக்கலாம்.

பல்வேறு போதாமைகளுக்கும், குறைபாடுகளுக்கும் மத்தியில் இந்தியாவைப்பற்றி சிறப்பாகச் சொல்லக்கூடிய சில விடயங்களும் உள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை. மக்கள் தொகையில் ஐக்கிய அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமாகக் கொண்டிருக்கும் இந்தியா உலகிலேயே பெரிய சனநாயக நாடு. பன்மொழி பேசும், பல்கலாச்சாரங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, மதச்சார்பற்ற நாடு என்ற தனித்துவம் அதற்கிருக்கிறது. இவை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய கருத்துகளாக உள்ளபோதிலும், இவற்றில் அசாத்தியமான உண்மையிருப்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இருப்பினும், அதன் அண்டைநாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் தனித்துவம் எதுவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. அதாவது இந்தியாவின் பன்மைத்துவ சிறப்பினை பின்பற்றும் எண்ணம் இந்த நாடுகளிடம் காணப்படவில்லை. மாறாக அவற்றிடம் இந்திய ஆதிக்க சக்திகளிடம் காணப்படும் ‘அகன்ற இந்தியா’ என்ற விரிவாக்கக் கொள்கை தொடர்பான அச்சமே காணப்படுகிறது. சிங்களத் தேசியவாதிகள் விடயத்தில் இந்தியா தொடர்பான சந்தேகங்கள் அச்சம் என்பன, தீவில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளில் நிரந்தரமாகவே ஆதிக்கம் செலுத்துகின்றது.

இலங்கைத்தீவில் வாழும் இரு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்தியா தொடர்பாக நேரெதிரான கருத்தினை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் புவியியல் ரீதியாக அண்மித்திருப்பதும், மொழி கலாச்சார, வர்த்தக தொடர்புகள் காரணமாகவும் இந்தியா புறக்கணிக்கமுடியாத ஒரு சக்தி என்பதனை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கு பின்னர் இந்தியா பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டாலும், அவர்களது இந்தியக் கனவு இன்னமும் நீடித்து வருகிறது. இதன் நீடிப்பாக தமிழர் தாயகத்தை இந்தியாவின் இன்னொரு மாநிலமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தை ஒரிருவர் வெளியிட்டு வருகிறார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஒடிவரக்கூடிய ஆபத்பாந்தவனாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் பார்த்த காலம் ஒன்று இருந்தது. இருபத்தைந்து வருடத்திற்கு முன்னர் இந்திய இராணுவத்தை தமிழர் பகுதிகளில் நிலைகொள்ளவைத்தன் மூலம் அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. இப்போது அவர்கள், இந்தியாவை அச்சத்துடன் பார்க்கிறார்கள். தாம் விரும்பாவிட்டாலும் இந்த பூதத்துடன் சமரசம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்தியா எப்படி நடந்து கொண்டாலும், பெரும்பாலான ஈழத்தமிழர்களிடத்தில் அந்நாட்டு மக்களின் மீதும், தலைவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. காலம் காலமாக திணிக்கப்பட்ட கருத்துகளாலும், தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள இந்தியாவை புரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவின் பிரமாண்டமும், வல்லரசுக் கனவுகளும் இக்கருத்துகளுக்கு உரம் சேர்த்திருக்கிறது. இன்னொருபுறத்தில் திட்டமிட்ட ஆனால் நாசுக்கான முறையில் மேற்கொள்ளப்படும் அரசியல் பரப்புரைகள் மூலமும் இக்கருத்து வலிந்து திணிக்ப்படுகிறது.

இலங்கைத் தீவில் தற்போது வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. முன்னணி ஊடகவியலாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் என்போரின் நிலமையும் இவ்வாறானதே. லண்டனிலிருந்து ஒலிக்கும் பிபிசி இன் தமிழோசை இந்திய நலன் சார்ந்தே செயற்படுவதனை அவதானிக்கலாம். விடுதலைப்புலிகளுடன் மிகநெருக்கமாக இருந்த அரசியல் ஆய்வாளரான மு. திருநாவுக்கரசு போன்றவர்களும் இந்திய பரப்புரை வட்டத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.

அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று தமிழ் ஊடகப்பரப்பில் இந்தியாவின் செல்வாக்கினை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. வீரகேசரி; வாரவெளியீட்டின் முதன்மை ஆசிரியர் வடிவேல் தேவராஜ் தனது கட்டுரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார், தமிழ் குடிசார் சமூகத்தின் அறிக்கைகளுக்கு முக்கியத்தும் வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டினை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக்கட்சியில் இணைந்துள்ள முன்னாள் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனை இந்தியத் தூதரகம் வீரகேசரி நிர்வாகத்தின் கவனத்திற்;கு கொண்டுவந்தது. வீரகேசரி நிர்வாகம் தேவராஜ் அவர்களை பத்திரிகையாசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கி வேறுபதவியை வழங்கவிருக்கிறது. (இணையதளங்களில் வந்த இச்செய்தியினை வீரகேசரியுடன் தொடர்புடைய மூத்த ஊடகவியலாளர் ஒருவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்)

இத்தகைய பின்னணியிலிருந்து இந்தியா பற்றிய விஸ்வரூப தோற்றப்பாடு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் மேற்குலக ஊடகங்களில் இந்தியா குறித்து வெளிவரும் ‘உருவாகி வரும் வல்லரசு (நஅநசபiபெ ளரிநச pழறநச)’, ‘புதிய பொருளாதார சக்தி’ போன்ற கருத்துகளும், இந்தியாவின் காலடியில் விழுவதைத் தவிர எமக்கு வேறு மார்க்கமில்லை என்ற எண்ணத்தை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.

விடுதலைப்புலிகள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விபரீதம், இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இராஜிவ் – ஜே.ஆர். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள் இப்போது மேலான வாழ்வை அனுபவித்திருப்பர் என்பதுபோன்ற கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. தோல்வி மனப்பாங்குடன் நிற்கும் மக்களை இலக்கு வைத்து அலங்காரமான வார்த்தைப் பிரயோகங்களுடன், இவைபற்றிய மேலோட்டமான கருத்துகளை வெளியிடுவோர் ஆழமான விவாதங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை அரசியல்தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை அரசியல் அறிஞர்கள், சட்டவல்லுனர்கள் விளக்கினாலும், அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோமே என ஒப்பாரி வைப்போரின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.

இந்தியாவின் பலம் பற்றி பிரமித்துக் கொள்பவர்கள், அதன் பலவீனங்களையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளை ஆயுதரீதியாக அழிப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கிய இந்தியாவால், சிறிலங்காவை தன்வழிக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆகக்குறைந்தது வர்த்தக உறவுகளிலாவது சிறிலங்காவிடம் தமது மேலாதிக்கத்தை காண்பிக்க முடியவில்லை. அதனால் சிறிலங்காவை சீபா (Comprehensive Economic Partnership Agreement—CEPA) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைக்க முடியவில்லை. இது பிராந்திய வல்லாதிக்கம் என வர்ணிக்கப்படுகிற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பல்தேசிய இனங்கள், பல்கலாச்சாரம், பன்மொழி என வேறுபட்ட மக்களை கொண்டிருப்பது என்பவை எவ்வாறு இந்தியாவின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றதோ, அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்குகின்றன. மொழி வாரி மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு அரைகுறையான சமஸ்டி ஆட்சிமுறையே காணப்படுகிறது, அங்கு மத்திய அரசாங்கமே முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறது. இருப்பினும் முழுமையான சமஸ்டி முறையைக் கொண்ட நாடுகளில் காணப்படுவதற்கு மாறாக, இந்தியாவில் தேசிய அளவிலான அரசியற் கட்சிகளினால் முழுநாட்டிலும் செல்வாக்குச் செலுத்தமுடியவில்லை. கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு மாநிலங்கள் மட்டத்தில் தேய்வடைந்து வருகிறது. விழைவு மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேசியக் கட்சிகளினால்; ஆட்சி அமைக்க முடியாதுள்ளது. இது இந்திய ஒருமைப்பாடு தொடர்பான அச்சத்திற்கான காரணம் மட்டுமல்ல, இந்தியாவின் வல்லாதிக்கக் கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது என்பதற்கு சொல்லப்படுகிற காரணமும் கூட. (‘“Ten Reasons Why India Will Not and Should Not Become a Superpower”, Prof. Ramachandra Guha’s lecture at London School of Economics)

இவ்விடத்தில்தான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முக்கியத்துவம் ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படுகிறது. தமிழ்நாடு – ஈழ உறவுகள் அரசியல் தலைவர்களின் குடும்ப நலன்களுக்கு அப்பால் சரியான வழியில் வளர்க்கப்படாமல், பாக்கு நீரிணைக்கு இரண்டு புறமும் உள்ள தமிழர்களால் இந்தியப் பூதத்தினை எதிர்கொள்ள முடியாது.

http://thaaitamil.com/?p=29343

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழ் இணையத்தை நடாத்துபவர்களிற்கு ஒரு வேண்டு கோள் நீங்கள் இணைத்த இந்த கட்டுரையும் இதயசந்திரனுடைய கட்டுரையும் இந்த வார ஒரு பேப்பரில் வெளியானவையாகும். எனவே அதன் மூலத்தை இணைப்பது குறைந்த பட்ச நாகரீகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.