Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் 1 லீற்றர் நீர் 1 ரூபா குடி நீருக்கும் மக்கள் தவிப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]முழங்காவில் குழாய் கிணற்றில் இருந்து கடற்படை முகாம் நீச்சல் தடாகம் உள்ளிட்ட படையினரின் தேவைக்கு நாளாந்தம் 200000 லீற்றர் நீர் பறிப்பு[/size][/size]

[size=3][size=4]தற்போது கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர் குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.[/size]

[size=4]குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது மக்கள் தங்களது அன்றாட அனைத்து நீர்த்தேவைகளுக்காகவும் நீரினை பணம் கொடுத்தே பெற்று வருகின்றனர்.[/size]

[size=4]பூநகரி பிரதேச சபையினரும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது எல்லா பிரதேசங்களையும் சென்றடையவில்லை என்பதோடு மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் போதுமானதாகவும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்[/size]

[size=4]இது இவ்வாறு இருக்க முழங்காவில் பிரதேசத்திலும் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் முழங்காவில் பிரதேசததில் உள்ள ஒரு குழாய் கிணற்றிலிருந்தும் கடற்படையினர் நாளாந்தம் இரண்டு இலட்சம் லீற்றருக்கு மேலதிகமாக பாரிய நீர்த்தாங்கிகள் மூலம் முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதான கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்கின்றனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினரால் பெறப்படும் நீர் நாளாந்தம் இராணுவத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை முகாமிலுள்ள நிச்சல் தடாகத்தினை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்[/size]

[size=4]இதனால் நிலத்தடி நீர் விரைவாக குறைவடைவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் ஏற்கெனவே முழங்காவில் பிரதேசத்தினை சுற்றியுள்ள பிரதேசங்களின் நீர் நிலைகள் இவ்வாறு உவர் நீராக மாறியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவிக்கும் நிலையில் குளிப்பதற்கு நாளாந்தம் பெருமளவு நீர் எடுத்துச்செல்லப்படுவது நியாயமற்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=6]அருகி வரும் நிலத்தடி நீர் வளம்[/size]

[size=4]தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாடு, புத்தளம் போன்ற பகுதிகள் தமது நீர்த்தேவைக்கு முற்று முழுதாக நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் நிலை இருக்கிறது. நிலத்தடி நீர் தேக்கம் உருவாவது இயற்கையாக, பொதுவாக வருடாந்தம் பெய்யும் மழை மண் ஊடு வழிந்தோடி நிலத்தின் கீழ் சேமிக்கப்படும். நன்னீர் உவர் நீரிலும் அடர்த்தி குறைந்ததால் கீழே உள்ள உவர் நீரில் நன்னீர் மிதந்தபடி இருப்பதுடன், வருடம் வருடம் பெய்யும் மழை நீர் நிலத்தின் ஊடு கீழே சென்று உவர் நீர் மட்டம் மேலே எழாத வாறு தடுக்கிறது. [/size]

[size=4] [/size]

[size=4]ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரித்த விவசாய பாவனை காரணமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு இயற்கையாக வருடாந்தம் மண்ணினுள் சென்று நிலத்தடி நீரை புதுப்பிக்கும் அளவிலும் அதிகமாக இருப்பதால் நிலத்தடியில் இருக்கும் நன்னீரின் அளவு குறைவடைவதுடன், கீழே இருக்கும் உவர் நீர் மேல் எழுந்து கிணற்று நீரை உவர் நீரக்குகிறது. இப்படி பட்ட அனுபவம் யாழ்குடா நாட்டில் அதிகம். இதனால் பல ஊர்களில் நன்னீர் தேடி அலையும் நிலையில் மக்கள்.[/size]

[size=4]தொடர்ந்து வாசிக்க (நன்றி குளக்காட்டான் )[/size]

[size=4] [/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106201[/size]

வன்னியில் கடும் வரட்சியி நிலவுகின்றது இதனால் மிகவும் சிரமமான நினையில் மக்கள் பணம் கொடுத்து குடி நீரைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டக பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்காக அலைந்து திரிவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இவ் வரட்சியின் முழுமையான தாக்கத்திற்கு உட்பட்டு குடிநீரைப்பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான நீரினை பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர்.

அதாவது பூநகரிப் பகுதியில் ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபா கொடுத்துப் பெற்று வருகின்றனர். பிரதேச சபையினர் நீர் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதிலும் அப்பிரதேச மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நீர் விநியோகம் இடம்பெறவில்லை.

இதேவேளை முழங்காவில் பிரதேசத்திலும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்ற நிலையிலும் அங்குள்ள கிணற்றில் இருந்து நாளாந்தம் 2000 லீற்றருக்கு அதிகமான நீரினை இராணுவத்தினர் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர் எனவும் இது அந்த பிரதேசத்தில் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான கடற்படை முகாமிலுள்ள நீர்த்தடாகத் தேவைக்காகவும் இராணுவத்தின் இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

http://thaaitamil.com/?p=29640

செயற்கை விவசாயிதிற்கு தான் நிறைய நீர் தேவை.

எமது விவசாயிகளுக்கு உரத்தை அள்ளிகொட்ட அறிவுரை கூறும் செயற்கை உர விற்பனையாளர்களும் அவர்களின் கையில் இருக்கும் விவசாய ஸ்ரீ லங்கா அதிகாரியும் ஒரு பிரச்சினை.

யாழ் நிலத்தடி நீரில் உரம் மற்றும் கிருமிநாசி தொகை வளர்ந்த நாடுகளிலும் பார்க்க இருபது மடங்கு கூட என்றார்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நாம் செய்த இயற்கை விவசாயத்தை திரும்ப கொண்டுவரவேண்டும்.

மக்களாக சேர்ந்து குளங்கள், கேணிகளை புனரமைக்கவேண்டும்.

பத்து ஏக்கர் நிலத்திற்கு அரை ஏக்கர் குளம் கட்டவேண்டும். மற்றும் நிறைய மரங்கள் நடவேண்டும்.

இல்லாவிட்டால் வருங்கால எத்தியோபியா தான்.

[size=6]Study Links Kidney Disease in Sri Lanka’s Farm Belt to Agrochemicals[/size]

[size=5]A new report links the high prevalence of chronic kidney disease in Sri Lanka’s main agricultural production regions with the presence of heavy metals in the water, caused by fertiliser and pesticide use.[/size]

[size=5]Over the past two decades, dozens of studies have been conducted on the large number of kidney patients in Sri Lanka’s agro-rich north-central region. However, none had conclusively identified a clear cause.[/size]

[size=5]But on Aug. 14, a group of Sri Lankan doctors released a report that they said was compiled as part of an ongoing joint research project by the Sri Lankan government and the World Health Organisation (WHO).[/size]

[size=5]The report states that: “Exposure to a combination of factors that are toxic to the kidneys (rather than one single factor) seems to cause this kidney disease. Toxic factors identified up to now include nephrotoxic agrochemicals, arsenic and cadmium.”[/size]

[size=6][size=4][size=5]As many as 400,000 people in the north-central region may be suffering from kidney disease, said doctors taking part in the release of the report. They added that in the past two decades, as many as 22,000 people may have died as a result.[/size][/size][/size]

http://www.ipsnews.net/2012/08/study-links-kidney-disease-in-sri-lankas-farm-belt-to-agrochemicals/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.