Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை என்னைப் பழிப்பதே வேலையா? கருணாநிதி காட்டம்!

Featured Replies

[size=4]சென்னை, ஆக., 22 : கருணாநிதியின் இன்றைய கேள்வி-பதில் அறிக்கையில், தினமணியில் வெளியான பழ.நெடுமாறனின் கட்டுரை குறித்துக் குறிப்பிட்டு அதற்கு பதில் எழுதியுள்ளார். [/size]

[size=4]கருணாநிதி வழக்கம் போல் அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளிக்கும் கேள்வி-பதில் அறிக்கையில், [/size]

[size=4]இலங்கையில் விடுதலைப் போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது, கருணாநிதி அதைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை என்று நெடுமாறன் “தினமணி”யில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறாரே? என்ற கேள்வி கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலாக கருணாநிதி எழுதியிருப்பது... [/size]

[size=4]“இலங்கையில் சிங்கள ராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்பதாகக் குற்றஞ்சாட்டி நக்கலும் நையாண்டியுமாக ஆரம்ப காலத்திலிருந்தே நெடுமாறன் கூறி வருகிறார். இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்ஷே போர் தொடுத்து விட்டார் என்றதும் தன்னுடைய கப்பல் படையை கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப் படை இலங்கைப் போய்ச் சேருவதற்குள் நான் தடுத்து நிறுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போலவும் பாவம்... நெடுமாறன் கைபிசைந்து கொண்டு நம்மையும் தாறுமாறாகவும் தரக் குறைவாகவும் தாக்குகிறார். [/size]

[size=4]ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும். ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எரிச்சலைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமோ, நினைப்போ கிடையாது. அவர்களுடைய நேரமும் நினைப்பும் திமுகவைம் அதன் தலைவராகிய என்னையும், “பால காண்டம்” முதல் “யுத்த காண்டம்” வரை பழிப்பதும், இழித்துப் பேசுவதும் தவிர, வேறு எதையும் கற்றதுமில்லை; கடைப்பிடித்ததுமில்லை. [/size]

[size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் மோதல் நடந்தபோது நெடுமாறன் கூற்றுப்படி நானாவது வாய் திறக்காமல் சும்மாயிருந்தேன் என்பது உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால் தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினாரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா..! நெடுமாறனுக்கு அது நினைவிலே இருக்கிறதா? [/size]

[size=4]அதுமாத்திரமல்ல; இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், “போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று சொன்னாரே ஜெயலலிதா; அதாவது நெடுமாறனுக்கு ஞாபகம் இருக்கிறதா? வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்பதைப் போல; மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து, “டெசோ” மாநாட்டில் தனி ஈழம் பற்றிய தீர்மானம் கூடாது என்று சொன்னதைப் போலவும் அதை நான் ஏற்றுக் கொண்டதைப் போலவும் கலப்படமற்ற ஒரு பொய்யை நெடுமாறன் குறிப்பிட்டிருக்கிறார். [/size]

[size=4]சென்னைக்கு பெரும்பாலும் வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்கும் வழக்கமுடைய ப.சிதம்பரம், அப்படித்தான் அன்றைக்கும் என்னைச் சந்தித்தார். “டெசோ” மாநாடு பற்றியோ அதில் நிறைவேற்றும் தீர்மானங்கள் பற்றியோ அவர் என்னிடம் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் - “அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியனவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்து வரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைகளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவமும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.” [/size]

[size=4]இந்தத் தீர்மானத்தில் வாழ்வாதாரம் பற்றி மாத்திரமல்ல; உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்பதை உள்ளமென ஒன்று இருப்போர் அறிவர். உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருப்போருக்கு அது தெரிவதற்கு நியாயமில்லை. [/size]

[size=4]ஈழம் என்ற சொல்லையே மாநாட்டுத் தலைப்பிலே பயன்படுத்தக் கூடாது என்று மத்தியிலே ஒரு அதிகாரி ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று ஏடுகள் எல்லாம் பெரிதுபடுத்தி, உடனடியாக வன்மையாக அதனை நாம் கண்டித்து, ஈழம் என்பது இன்று நேற்று வந்த சொல் அல்ல; “ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்” என்று “பட்டினப்பாலை” யிலேயே இடம்பெற்ற சொல் அது என்பதை எடுத்து விளக்கி கடிந்து கொண்ட பிறகு, மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே பிறப்பித்த ஆணையை திருத்தம் செய்து வெளியிடப்பட்டது என்பதை இந்த எத்தர்கள் உணர மாட்டார்கள். [/size]

[size=4]- இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி காட்டத்துடன் விமர்சித்துள்ளார். [/size]

http://www.dinamani....=164&SEO==

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]coma_open.gif ///ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும்./// [/size]

[size=4]கருணாநிதியின் இந்த கூற்று சரியானதே. இதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. வெளிநாட்டு விவகாரங்களை மத்திய அரசுதான் மேற்கொள்ளவேண்டும். மாநில அரசு அல்ல. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! [/size]

[size=4]ஆனால் இலங்கையில் மோசமான நிலையில் தமிழர்கள் இருந்தபோது. இவரின் கட்சி மத்தியிலும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. அப்போது மத்திய அரசுக்கு இறுக்கம் கொடுத்து அதனை ஐ.நா.சபை வரை கொண்டுசெல்ல அறியுரித்தி இருக்கலாம்.இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்டு இருக்கலாம். அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவதாக கூறியிருக்கலாம். தனது எம்.பி.கள் ராஜினாமா கடிதத்தை இவர் ஏன் வங்கிவைத்துக்கொண்டு நாடகமாடினார். குடும்பத்தில் [/size]உள்ளவர்களை காப்பற்ற என்னவல்லாம் நாடகம் நடத்த வேண்டுமோ அத்தனையும் செய்கிறார்!!! coma_close.gif

By மு.நாட்ராயன்

8/22/2012 7:28:00 PM

[size=4]பாலகாண்டத்தில் உங்களது சொத்து எவ்வளவு ....யுத்தகாண்டத்தின்போது கூடியதா குறைந்ததா ....போரை நிறுத்த கடிதமும் ...பிள்ளைகளின் பதவிக்காக பயணமும் மேற்கொண்ட உங்கள் தமிழின உணர்வு மெய் சிலிர்க்கவைக்கிறது .அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமிடையே கலக்கம் ஏற்படுத்தியது நெடுமாறன்தான் என்று சொல்லாமல் இருப்பதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தும் என்றென்றும் ![/size]

[size=4]By abarajithan[/size]

[size=4]8/22/2012 8:38:00 PM ..[/size]

[size=4]திரு தானை தலைவர் தமிழினக் காவலர் கருணாநிதி அவர்கள் இந்த கேள்வியும் நானே பதிலும் நானே என்று தான் எழுதும் கட்டுரையிலும் சொதப்பி இருக்கிறார்.[/size]

[size=4]நிற்க இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்துக்கு ஆயுத மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது என்பது சாதாரண பாமரனும் உலக நாடுகளும் எல்லோரும் அறிந்ததே திரு தா .த,த .கா கருணாநிதி மத்திய அரசை ராணுவ உதவியை நிறுத்தும்படி நிர்ப்பந்திக்க வாய்ப்பு இருந்தும் அதை செய்ய வில்லை அதை தான் திரு நெடுமாறன் கூறுகிறார்.[/size]

[size=4]By கருணாநிதி அடிவருடி[/size]

[size=4]ஜெயலலிதாவிடமாவது மாற்றம் என்ற ஒன்று வந்துள்ளது. நல்லது. ஏனெனில் மாறிக்கொண்டேயிருப்பது உலகம். மாற்றம்தான் மனிதனை நிலைநிறுத்தும். [/size]

[size=4]ஆனால் என்றென்றைக்கும் மாறாமல் தனது சுயநலத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு மண்டியிட்டுக் கிடக்கும் உமக்கு அதைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. நீ குனிய, குனியத்தான் காங்கிரஸ்காரன் குட்டுகிறான் என்பதையும் நீ உணர்ந்தபாடில்லை. எதிர்து முனகினால் இன்னும் கொட்டுவானோ என்கிற உனது பயமும் போகவில்லை. நீ ஒரு தெனாலிராமன் பூனை. உனக்கு உன்னையே காப்பாற்றிக்கொள்ளத் தெரியாது. நீ போய் எங்கே ஈழத்தைக் காப்பாற்றப் போகின்றாய்?.[/size]

[size=4]உனது வார்த்தைகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. பாவம் நாங்கள். உனது பின்னால் கொஞ்காலம் திரிந்ததற்கு இன்று எங்களையே நொந்துகொண்டு உள்ளோம். [/size]

[size=4]By kumaran. cheyyar[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை மீட்டுத் தந்த கருணை வள்ளல் கருணாநிதிக்கு

ஈழத்தைப் பற்றிக் கதைத்தாலே ஆட்சியில் இருப்பவரை இழுக்காமல்

இருக்க முடியாது

[size=4]"ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும்"[/size]

இதன் படி மத்திய மாநில அரசுகளின் வரம்புகளைத் தான் அறிந்தவர்தான் என்பதும், நெடுமாறன்தான் அறியாதவர் என்பதும் கருணாநிதியின் விளக்கம்.

அது அப்படி இருக்க ஏன் எப்படி மத்திய அரசு இரண்டுமுறை கருணநிதியை பதவி இறக்கியது என்பதின் உண்மையை ஒத்துகொள்ள தயாராக இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். காங்கிரசின் மத்திய அரசு அதிகார வரம்பை மீறுகிறது அல்லது கருணாநிதி தனக்கு அதிகார வரம்பை பற்றி விளக்கம் இருபத்தாக கூறுவது பிழை. ஒருதடவை அல்ல இரண்டுதடவைகள். பதவி நீக்கப்பட்டர். உண்மையானது மூன்றாம் முறை காங்கிரஸ், கனி மொழி விடையத்தில் கருணாநிதியை பதவி இறக்க முயலும் போதுதான் உண்ணாவிரதம் இருந்தவர். அததாவது 2G யை காரணம் காட்டி பதவி போய் இருந்தால் மீண்டும் ஒருமுறை உண்ணா விரத்தத்தை வைத்து ஈழத்தமிழருக்காக பதவி போனதாக கூறியிருந்திருப்பார்.

கருணாநிதிக்கு மத்திய மானில அரசியல் அமைப்புச் சட்டங்கள் விளங்குமளவுக்கு, ஊழல், குற்றவியல் சட்டங்கள் விளங்க மாட்டேங்கிறது. இதனால் தான் திரும்ப திரும்ப இன்னொரு ஊழல் கட்சியான காங்கிரசிடம் மாட்டிக்கொள்கிறார். பாம்பின் காலை பாம்பறியும் என்று இவரைத்தானே தமிழ் நாட்டில் கங்கிரசு பதவி நீக்குகிறது. மதவெறியர் மோடியை காங்கிரசால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது கருணாநிதியின் கண்களுக்கு தெரியவில்லை. அவர் தமக்கு வேண்டியபடி இந்துக்களுக்கு உதவி செய்கிறார். ஆனல் கருணாநிதிக்கு தமிழருக்கு உதவ ஒரு வழியும் தென்படவில்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.