Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை உணவு பொருட்களும் சிறுநீரக வருத்தமும் இறப்புக்களும்

Featured Replies

[size=5]As many as 400,000 people in the north-central region may be suffering from kidney disease, said doctors taking part in the release of the report. They added that in the past two decades, as many as 22,000 people may have died as a result.[/size]

[size=4]நாலு இலட்சம் மக்களை வைத்து செய்த ஆய்வின் படி வடக்கு வடமத்திய மாகாணங்களில் அளவுக்கு அதிகமாக கிருமி நாசினிகளை பாவிப்பது சிறுநீரக வருத்தங்களையும் இறப்புக்களையும் தருவதாக ஐ.நா. கூறுகின்றது ![/size]

Sri-Lanka-paddies-photo-hi-res.jpg

[size=5]The report states that: “Exposure to a combination of factors that are toxic to the kidneys (rather than one single factor) seems to cause this kidney disease. Toxic factors identified up to now include nephrotoxic agrochemicals, arsenic and cadmium.”[/size]

http://www.ipsnews.net/2012/08/study-links-kidney-disease-in-sri-lankas-farm-belt-to-agrochemicals/

  • தொடங்கியவர்

[size=5]இலங்கை பொருட்களை புறக்கணிக்க மேலே உள்ளதும் ஒரு காரணம் ஆகின்றது [/size]

185073_353051814770188_1505404260_n.jpg

  • தொடங்கியவர்

[size=1][size=4]சிறுநீரக வருத்தங்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பெற ஒரு தளம்[/size] : [/size][size=6]http://ukidney.com/[/size]

[size=4]உங்கள் கேள்விகளை கூட இதில் கேட்கலாம் ![/size]

  • தொடங்கியவர்

[size=4]பல நாடுகளில் உரம் கலக்காத உணவுப்பொருட்களை உற்பத்தியாக்கும் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.[/size]

[size=4]0701040301003.png[/size]

39184775.png

  • கருத்துக்கள உறவுகள்

பகிரப்படவேண்டிய பதிவு. நன்றி

இலங்கை உணவுப்பொருட்களை புறக்கணிப்பிற்கான காரணங்களும் நிறையவே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

விகடன் குழுமத்தின் இன்னுமொரு பதிப்பு பசுமைவிகடன், மாதாந்தம் வெளியிடப்படும் இயற்கைவிவசாயம் சம்பந்தமான சஞ்சிகையை புலத்தின் விவசாயிகள் அனைவர்க்கும் அறிமுகப்படுத்துவதன்மூலம் இப்படையான சீரழிவுகளைத் தவிக்கலாம் மட்டுமன்றி இயற்கையாகத் பயிர்சிய்கை மேற்கொண்டு விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழவகைகட்கு மேலைநாடுகளில் தற்போது அதிக ஆதரவு பெருகிவருகின்றது. பெரிய அங்காடிகளில் அவற்றிற்கென்றே பிறிதான காட்சியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இயற்கை வேளாண்மையை நம்மவர் மத்தியில் ஊக்குவித்தோமானால் எமதுபொருட்களுக்குச் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம். மற்றும் இயற்கை விவசாயம் என்பது சிக்கலான கம்பசூத்திரமல்ல. எம்முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட பயிர்ச்செய்கை முறைகள ஒழுங்குபடுத்தபட்டதும் விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டதுமான வழிமுறைகளே.

  • தொடங்கியவர்

[size=5]சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை; உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பேராசிரியர் ஜயலத் கவலை[/size]

[size=5][size=4]இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் 15-70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. [/size][/size]

[size=4]இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம் பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கும் மேற்பட்டோரே இந்த நோயின் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகியுள்ளனமை தெரியவருகின்றது.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக் அவர் மேலும் தெரிவித்ததாவது: [/size]

[size=4]இந்த நோயின் தொற்றின் வேகத்தையும், நிலையையும் அறிந்துகொண்ட களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர் கள், முன்னணி மருத்துவ குழுக்களினால் இந்த நோயின் தாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் பலர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சிறுநீரக நோய் குறித்து சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராக கடமைபுரிந்து, தற்போது சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் உள்ளக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக செயற்படும் இலங்கை விசேட வைத்தியர் பேராசிரியர் சாந்தி மென்டிஸ் வேண்டுகோளுக் கிணங்க, உலக சுகாதார அமைப்பினால் இந்த சிறுநீரக நோய் தொடர்பிலான 3 அறிக்கைகளை ஆராய்ச்சியின் பின்னர் முன்வைத்திருந்தது.

இதன் முதலாவது அறிக்கை 2011 ஜுன் மாதத்திலும், இரண்டாவது அறிக்கை 2011 ஒக்டோபர் மாதத்திலும், மூன்றாவது அறிக்கை 2012 பெப்ரவரி மாதத்திலும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. மருத்துவச் சபை ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் குறித்த அறிக்கைகளில் உலக சுகாதார அமைப்பானது இந்நோயை எவ்வாறு இனங்காண்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டிருந்தது.

இந்த நோய் மேலும் பரவுவததை தவிர்க்க தாமதமின்றி இந்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதைப் பார்க்கிலும் அந்த நோயை இல்லாதொழிப்பதே மேல் ஆகும்.

துரதிர்ஷ்டவசமாக உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பின் குறித்த 3 அறிக்கைகளிலும் நோய்த்தடுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோயானது வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவில் பரவிவருகின்றது என்பதை தற்போதுள்ள அரசு தெரிவிக்கவில்லை.

இப்போதாவது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட 3 அறிக்கைகளி லுமுள்ள பரிந்துரைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையில் உள்ள வற்றை தாமதமாகியும் நடைமுறைப்படுத்தாவிட்டால் அப்பாவி மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு வழி கிடையாது. மக்களைக் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு.

விருத்தியாகும் சிறுநீரக நோயை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சிகிச்சை நிலையங்களை திறந்துவைப்பதில் என்ன பயன்? எதிர்காலத்தில் இந்நோய் விருத்தியாகாமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.[/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=593021374630100108[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன் ஆசிரியரால் நங்கூரத்தில் எழுதப் பட்டு, இமை இணையத்திலும் வந்திருக்கும் இந்த் அருமையான கட்டுரையை கீழுள்ள இணைப்பில் வாசியுங்கள். குறிப்பாக வடக்கில் மரக்கறி சாப்பிடுவது விஷத்தைச் சாப்பிடுவது போல ஆகி விட்டது:

http://www.imainet.org/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

நன்றி: இமை இணையம்.

  • தொடங்கியவர்

[size=2][size=5]சிறுநீரகப் பிரச்சினை: அறிக்கைகள் வெளியிடாமை குறித்து ஜயலத் விசனம்[/size][/size]

[size=4]அனுராதபுரம்,பொலனறுவை மாவட்டங்களில் மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரகப் பிரச்சினை குறித்து தேசிய, வெளிநாட்டு விசேட வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் அறிக்கைகள் இதுவரை வெளியிடாமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் எம். பியுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் 15 – 70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம்பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குக் கீழ் பட்டோரே இந்த நோயின் தாக்கத்துக்கு அதிகளவில் உள்ளாகியுள்ளமை தெரியவருகின்றது.

இந்த நோயின் வேகத்தையும், நிலையையும் அறிந்துகொண்ட களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர்கள், முன்னணி மருத்துவக் குழுக்களினால் இந்த நோயின் தாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் பலர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சிறுநீரக நோய் குறித்து சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராகக் கடமைபுரிந்து, தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பில் உள்ளக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக செயற்படும் இலங்கை விசேட வைத்திய நிபுணரான பேராசிரியர் சாந்தி மென்டிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த சிறுநீரக நோய் தொடர்பிலான 3 அறிக்கைகளை பாரிய ஆராய்ச்சியின் பின்னர் உலக சுகாதார அமைப்பு முன்வைத்திருந்தது.

இதில் முதலாவது அறிக்கை 2011 ஜுன் மாதத்திலும், இரண்டாவது அறிக்கை 2011 ஒக்டோபர் மாதத்திலும், மூன்றாவது அறிக்கை 2012 பெப்ரவரி மாதத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவச் சபை ஊடாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. இதன்பிரகாரம் குறித்த அறிக்கைகளில் உலக சுகாதார அமைப்பானது இந்நோயை எவ்வாறு இனங்காண்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய குறிப்புகளைக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நோய் மேலும் பரவுவததைத் தவிர்க்க தாமதமின்றி இந்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதைப் பார்க்கிலும் அந்த நோயை இல்லாதொழிப்பதே மேல் ஆகும். என்னால் நடத்தப்பட்டுவரும் உலக சாதனை படைத்த தொலைக்காட்சி மருத்துவ நிகழ்ச்சி ஊடாக நோய்த்தடுப்பு பற்றியே அதிகளவில் தெரிவிக்கின்றேன்.

துரதிஷ்டவசமாக உள்நாட்டு,வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பின் குறித்த 3 அறிக்கைகளிலும் நோய்த்தடுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோயானது வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவில் பரவிவருகின்றது என்பதை தற்போதுள்ள அரசாங்கம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததில்லை.

எனவே இப்போதாவது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட 3 அறிக்கைகளிலுமுள்ள பரிந்துரைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையில் உள்ளவற்றை தாமதமாகியும் நடைமுறைப்படுத்தாவிட்டால் அப்பாவி மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு வழி கிடையாது. மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.

விருத்தியாகும் சிறுநீரக நோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சிகிச்சை நிலையங்களை திறந்துவைப்பதில் என்ன பலன்? எதிர்காலத்தில் இந்நோய் விருத்தியாகாமலிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தற்காலத்தில் பாரிய ஆட்கொல்லி நோயாகத் தோன்றியுள்ள இந்தப் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=425

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.