Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்களாகியும் கண்டது எதுவுமில்லை! அகாஷியிடம் முறைப்பாடு.

Featured Replies

ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி இன்று (24) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் சமாதானத்திற்கும் நல்லிணத்துக்குமான குழுவினரை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஓர் அரசியல் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. வடமாகாண தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. மீள் குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

உயர் பாதுக்காப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை.

LLRC யில் உள்ள பரிந்துரைகள் குறைந்த பட்சம் கூட அமுல்படுத்தப்படவில்லை என சமாதனத்திக்கான நல்லிணக்க குழுவினர் யசூஷி அகாஷியிடம் கூறினர்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக அகாஷி கூறுகையில் நாளை காலை ஜனாதிபதியை சந்திக்கும் போது இது தொடர்பாக கதைப்பதாகவும் நீங்கள் நம்பிக்கையை இழக்காது இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=29865

[size=4]இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்டதைப்போல சமாதானத்தை வெற்றிகொள்வது என்பது இலகுவான விடயமல்ல. தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கவேண்டும். [/size]

[size=5] [/size]

[size=5]தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு கூடிய கவனம் எடுக்கும் என்று யசூசி அகாஷி தெரிவித்தார்.[/size]

[size=5] [/size]

[size=4]இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜப்பானைப் பொறுத்தவரையில் அங்கே ஜப்பானியர்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாடு. அங்கே எல்லாம் ஒரே மாதிரியானதாக இருக்கும். இலங்கை பல இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது. அதனால் அது பலமானதாகவும் வாழ்கையை துடிப்பாக்கக் கூடிய நாடாகவும் இருக்கிறது. இதனை அனைவரும் சரியாக பயன்படுத்தி ஐக்கிய இலங்கையை தோற்றுவிக்க உழைக்கவேண்டும்.

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கும். [size=5]இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காது நம்பிக்கையோடு இருக்கவேண்டும்[/size].

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமைமாறி சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதி திறக்கப்பட்டு எங்கும் எல்லோரும் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.[size=5] பல தடவை கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தியிருந்தால் அவர்கள் நன்மையடைந்திருப்பார்கள்” என்று யசூசி அகாஷி மேலும் அங்கு தெரிவித்தார்.[/size]

இன்று தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும்போது அவரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அகாஷி மேலும் தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/47307-2012-08-24-14-34-16.html[/size]

காலம் காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக தொழில்ப்படும் அக்காசி:[size=4]"காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கும். [/size][size=4][size=5]இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காது நம்பிக்கையோடு இருக்கவேண்டும்[/size].[/size] "

இவர் வக்காலத்து வாங்கும் அரசின் பிரதிநிதி பீரிசு:

மண்டேலாவின் பிரதிநிதி உள்ள தென்னாபிரிக்க குழுவை அனுசரணையாளராக ஏற்கமுடியாது – பீரிஸ் ]

நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியை உள்ளடக்கிய தென்னாபிரிக்க குழுவை, ஒருபோதும் அனுசரணையாளர்களாக சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

............

இந்தக்குழுவை நாம் ஒருபோதும் அனுசரணையாளர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் எமக்கு ஆர்வமில்லை.

வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இரா.சம்பந்தன் உரையாற்றினார். உள்ளூர் ஊடகங்களை அவர் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

வடக்கே செல்லும் வெளிநாட்டுத் தூதுக்குழுவினர் திரும்பி வந்து, இரா.சம்பந்தன் சொல்வது போல, வடக்கு இருண்டு போய்க் கிடக்கிறது என்று சொல்லவில்லை.

சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்துபவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை.

வெளிநாடுகளை நாட விரும்புவதால் உள்நாட்டு செயன்முறை பலமிழந்து போகிறது.

இரா.சம்பந்தனும் வெளிநாடு செல்வதையே தனது தந்திரோபாயமாக வைத்துள்ளார்.

இங்குள்ள பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வரக்கூடிய விருப்பமோ இயலுமையோ வெளிநாடுகளிடம் இல்லை.

அரசியல் தீர்வை தீர்மானிப்பது தாங்கள் அல்ல என்று அவர்கள் திரும்பத் திரும்ப பலமுறை கூறியுள்ளனர்.

எதையுமே இந்த நாட்டில் தான் செய்து முடிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து எதுவும் வரப்போவதில்லை.

வெளிநாடுகளில் இருந்து தீர்வு வரப்போவதாக வெறும் மனக்கோட்டைகளை கட்டுகின்றனர். ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. வெளியிலிருந்து ஒரு தீர்வை கொண்டு வர முடியாது.

அனைத்துலக சமூகம் உள்ளே வந்து நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. அதற்கு இடமும் இல்லை.

உள்நாட்டு பொறிமுறைக்கு ஜெனிவா தீர்மானம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.”என்று அவர் மேலும் கூறியுள்ளார்

http://www.puthinapp...?20120823106852

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.