Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு !

[Friday, 2012-08-24 22:24:46]

us-240812-ruthrakumar-757-150.jpg

- மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகுமா !

- களத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் !

- மகிந்த ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் விசாரணைக்கு வந்துள்ள வழக்கு !

வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23-08-2012) இடம்பெற்றுள்ளது.

சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் (துரைசிங்கம்) அவர்களது மனைவி வக்சலாதேவியினால், சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்று, அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளது.

இதனையே வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச (Docket# 11-CIV-6634) இலக்க வழக்காக கொண்டுள்ளப்படுகின்றது.

சிறிலங்கா அரசுத் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, இராஜதந்திர சிறப்புரிமையின் பிரகாரம், மகிந்த ராஜபக்சவினை அமெரிக்க நீதி மன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக இராஜதந்தர விலக்கினை சுட்டிக்காட்டி பரிந்துரையினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.

செப்ரெம்பர் மாதம் , நியூ யோர்கில் உள்ள ஐ.நாவின் பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்ச அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள வழக்கு விசாரணையானது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரையின் பிரகாரம், ஒரு நாட்டின் அரச தலைவருக்குரிய இராஜதந்திர சிறப்புரிமையினை பாதுகாப்பு கவசமாக கொண்டு குறித்த வழக்கினை தள்ளுபடி செய்வதா என்பதேயாகும்.

இந்த வழக்கு விசாரணையில் நீதியினைக் கோரிநிற்கும் மனுதாரர் வக்சலாதேவியின் சார்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

மனுதாரருக்கு ஆதரவாக பரிந்துரை மனுதாக்கல் செய்திருந்த 'ஸ்பீக்கியூமன்ரைட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வழக்கறிஞர் அலிஅபெட் பெய்டொன் அவாகளும் ஆஜராகியிருந்தார்.

உருவாகிவரும் புதிய சர்வதேச சட்டப்பிரகாரம், சித்திரவதை, இனவழிப்பு, மானிடத்திற்கெதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் போன்ற நடத்தைகளுக்கு, இராஜதந்திர சிறப்பு விலக்கானது எதிர்நிலையாக இருப்பதனால், இந்த புதிய வழமைகளை மேவி தனக்கென சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லாத இராஜாங்க திணைக்களம் பழைய வழமைகளில் தங்கி பாதுகாப்பு கவச பரிந்துரைகளை நீதிமன்றில் பரிந்துத்தாக்கல் செய்யமுடியதென வழக்கறிஞர் வி.உருத்திரகுhரன் அவர்கள் வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கினை நீதிபதி நயோமி ரீஸ்புக்வால்ட் அவர்கள் தலைமையேற்று நடத்தியிருந்தார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினை உப வழக்கறிஞர் அமி. ஏ. பாசிலோ அவர்கள் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

அமெரிக்க கொங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரைக்கும் தகுதியை இல்லாமல் செய்யும் சட்டங்கள் ஒன்றையும் இயற்றவில்லை என நீதிபதி அவர்கள் தனது அபிப்பிராயத்தில் சுட்டியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச சட்டங்களுக்கும், அமெரிக்க சட்டங்களுக்கும் எதிராக சித்திரவதை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் ஆகியன புரிந்தமை தொடர்பில் தனக்கான நீதியினைக் கோரியினைக் கோரி இந்த வழக்கினை வக்சலாதேவி அவர்கள் தொடுத்துள்ளார்.

நாதம் ஊடகசேவை

http://seithy.com/breifNews.php?newsID=65702&category=TamilNews&language=tamil

[size=6]US Court of Appeals to hear Rajapakse war-crimes case[/size]

[size=5]United States Court of Appeals for the District of Columbia Circuit issued the briefing schedule Monday for the appeal against the dismissal of the war-crimes case against Sri Lanka's President Mahinda Rajapakse. The appeal was filed by three Tamil plaintiffs/ appellants against Rajapakse for complicity in extrajudicial killings of plaintiffs relatives in violation of the Torture Victims Protection Act (TVPA). The case, first filed at the lower court, was dismissed in February 2012 by Judge Kotelly after the U.S. State Department intervened to assert that, as a sitting head of state, Rajapakse was immune from litigation. [/size]

[size=5]The complaint filed in 2011 at the District Court for this case alleged multiple violations of the TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

The appeal will be heard by a panel of three judges, unless the appellants request and if the court grants an en banc hearing. U.S. State Department has filed a motion to submit an amicus brief (an unsolicited legal opinion provided by a third party to assist the court in deciding the matter) on behalf of the appellee Rajapakse.[/size]

http://tamilnet.com/art.html?catid=13&artid=35494

பிரதமர் உருத்திர குமார் ஆஜரான நியூயோர்க்கோட்டின் வழக்குத் தீர்ப்பை நீதிபதி ராஜாங்க அமைச்சுடன் ஆலோசித்துதான் வெளியிடுவார். அதுவரை தீர்ப்பை ஒத்தி வைத்துவிட்டார்.

இவற்றில், ராஜாங்க அமைச்சின் ஆலோசக கம்பனிகளில் ஒன்றின் ஆலோசகர்கள் மகிந்தாவினதும் ஆலோசகர்களாவார். சென்றதடவை இவர்கள் தமது ஆலோசனைப்படி ராஜாங்க அமைச்சு மகிந்தாவை காப்பாற்றாமல் நாட்கள் பிந்தவிட்டதால் அமைச்சின் 160 வருடகால வழமை மீது அயல்நாட்டு தலைவர்கள் வைத்திருந்த நமபிக்கை பழுதாகிவிட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

ஆனால் இந்த அப்பீல் வழக்கு புஸ் காலத்தில் ஆரம்பித்து ஒபாமாவால் கையெழுத்திடப்பட்ட புதிய மனித உரிமைகளை மீறும் சர்வதேச அரசுகள் சம்பந்தப்பட்டது. எனவே பலர் இந்த 160 வருடகால வழமையை பல கோணங்களில் தொடர்ந்து இடித்துதான் பார்ப்பார்கள். ஆனால் நாம்தான் இந்த இரண்டு வழக்குகளின் மூலம் ஆரம்பித்து வைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

Edited by மல்லையூரான்

[size=1]

[size=4]நன்றி மல்லையூரான் தகவல்களுக்கு. [/size][/size]

[size=1]

[size=4]இந்த புதிய மனித சட்டங்களின் பின்னால் சமந்தா பொக்சும் சூசன் ரைசும் இருந்தவர்கள். இதில் சூசன் ரைஸ் அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி, அண்மையில் இந்தியா சென்றவர். மத்திய கிழக்கில் ஒபாமாவின் கொள்கையில் இந்த பெண்களுடன் ஹிலாரியும் இணைந்தே கொள்கைகளை வகுக்கின்றார்கள். இதில் எமக்கும் நன்மை பிறக்கும் என நம்புவோம். [/size][/size]

இவ்வழக்கின் ... ஏன் இந்த வழக்கு போடப்பட்டது? ஏன் ஏனைய அமெரிக்க அமைப்புகளின் ஆலோசனைகள் உதாசீனம் செய்யப்பட்டு அவசர அவசமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? போதிய சட்ட நிபுனர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதா? ... போன்ற பல கேள்விகளுக்கான பதிலை .... ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு .... போன்றவைகளிடன் யாராவது தொடர்பு கொண்டால் உண்மைகள் வெளிவரும்!!!!!!!!!!

நாங்கள் ... இருக்கிறோம்/செயற்படுகிறோம்/... என்ற போலிகளை காட்டும் முயற்சிக்கு மேலாக ... போட்டி மாவீரர் தினம்/போட்டி ஊர்வலங்கள் ... போன்று ... அமெரிக்காவில் இனப்படுகொலையாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட/தொடரப்படப்போகும் பல வழக்குகளை குழப்பி அடிக்கும் நோக்கில் தொடரப்பட்டதே இவ்வழக்கு!!!

... ஆனால் நாமெல்லாவற்றுக்கும் விசிலடித்து பழகியவர்கள் ... இன்று உருத்திரகுமாரருக்கும் அடிக்கிறோம் ... !

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35494

[TamilNet, Friday, 24 August 2012, 03:59 GMT]

... யார் குத்தி அரிசி ஆக்கினாலும் சரி ... ஆனால் உண்மையாக குத்த வேண்டும்! அரிசியையும் குத்த வேண்டும் ....!!!????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.