80, 90களில் நடந்த தென் தமிழீழக் கரூரங்கள் தொடர்பான போர்க்கால இலக்கியப் பாடல்கள்
பாடல்: காற்றில் ஏறிவரும்
இறுவட்டு: வெல்லும் வரை செல்வோம்
இசை: இசைப்பிரியன்
பாடலாசிரியர்: உதயலட்சுமி
பாடியவர்: மேரி
வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்
பாடல் வரிகள்:
காற்றில் ஏறிவரும் எங்கள் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.
கண்ணீர்க் கடலோடும் வாழ்க்கைப் படகைப் பாருங்கள்.
படுவான்கரையின் சிவப்பு நிறம் - அதுவே எங்கள் வாழ்வின் நிறம்.
எழுவான் கதிர்கள் மேனி தொடும் - இனியெம் வாழ்வு மேலுயரும்.
வாவியில் பாடும் மீன்களுக்கு எங்கள் மேனியை தீனாய்ப் போட்டனர்!
கூப்பிய கைகளை வெட்டி எறிந்து பிள்ளைகள் உயிரைக் குடித்தனர்!
மகிழடித்தீவின் மரங்களைக் கேளும் - உயிர் விலை என்ன, கூறிவிடும்!
கொக்கட்டிச்சோலை மணல் வெளி எங்கும் குருதியே கோலம் கீறியது.
இருவிழி நிறையக் கனவுகளோடு எழுவாய் எழுவாயம்மா நீ!
பூபதித் தாயின் பூமியில் பிறந்தாய், புயல்களின் வடிவம் அன்றோ நீ!
மலைகளைத் தாவும் காற்றின் வேகம் மனங்களுக்குண்டு கொண்டு எழுவாய் நீ!
எவரோ எழுதும் சிலை நீ இல்லை, அலைகடல் போல எழுவாய் நீ!
கோவில்களோடு தெய்வங்கள் சாக வைத்த நெருப்பு எரியுது!
தேவியர் பாட்டில் தென்றல்கள் மாறி தேய்பிறை வானம் அழுகுது!
வயல்வெளி எங்கும் பயிர்களின் நாற்று வன்முறைத் தீயில் அவிகிறது!
அதிரடிக்காரன் எழுதிய தீர்ப்பே எங்களின் விதியாய் மாறியது!
--> எழுத்துணரியாக்கம்: இனந்தெரியா யாழ் கள உறுப்பினர்
++++++++++++++++++++++++++++
பாடல்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து
இறுவட்டு: ??
இசை: ??
பாடலாசிரியர்: அறியில்லை
பாடியவர்: ??
வெளியீடு: ??
பாடல் வரிகள்:
தென் தமிழீழம் தேய்ந்தழிந்து போகுதே!
தென் தமிழ் மக்கள் தினமும் நூறு சாகிறார்!
தீயில் அவர் வேகுகிறார்,
பசியில் அவர் மாள்கிறார்!
தீராத கொடுமைகளை எதிரி அங்கு இழைக்கிறான்!
மீன்பாடும் மட்டு. நகர், அம்பாறை, திருமலையும்
மிருகவெறிச் சிங்களவர் குடிமனையாய் மாறுதே!
இனமழிக்கும் ராணுவத்தின் வதைமுகாம்கள் வளருதே!
இன்னல் செய்யும் துரோகக் கும்பல் பெருகி அங்கு வளருதே!
நெய்தல் நிலம், வயல்வெளிகள், நதியோரம், காட்டுநிலம்
ஐயகோ எம் தமிழர் ஆண்ட நிலம் யாவுமே!
அன்னியனின் குடிமனைகள் அங்கு நிதம் வளருதே!
இழந்த மண்ணை மீட்பதற்கும் இன்னலுறும் எம்மினத்தைக் காப்பதற்கும்
ஈழமே எழுச்சிகொள்! எழுந்திடு! எழுந்திடு!
இனமழிப்பு நடக்குதே வேங்கையாய் விரைந்திடு!
--> எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன்
*****
By
நன்னிச் சோழன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.