Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களின் நிலை குறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்! ஐ.நாவிடம் நாடு கடந்த தமிழீழ அரசு கோரிக்கை

Featured Replies

August 30th, 2012 அன்று வெளியிடப்பட்டது

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத்தீவில் காணாமல் போயுள்ளவர்களின் நிலை குறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல் போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்கு, ஐநாவின் ஆய்வறிஞர் குழுவினருக்கான, உள்நுழைவு அனுமதியினை, சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவரும் நிலையில், ஐநா ஆய்வுக் குழுவினரிடம் இக்கோரிக்கையினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இலங்கையில் காணாமல்போயுள்ளவர்கள் தொடர்பில், 12 460 முறைப்பாடுகள், காணாமல் போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவினரிடம் உள்ளன.

இது தொடர்பிலான களவிசாரணகளுக்கு, ஐநா முன்வைத்திருந்த பொறி முறைகளை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்ததோடு, ஐநா ஆய்வுக்குழுவினரின் எழுத்துபூர்வமான கேள்விகளுக்கு, பதில் கூறவும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்திடம் மூடிமறைப்பதற்கு ஏதுவும் இல்லையெனில், எதற்காக காணாமல் போனோர் தொடர்பிலான ஐ.நாவின் ஆய்வுக் குழுவினருக்கான உள்நுழைவிற்கு, சிறிலங்கா அனுமதி மறுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள நா.த.அரசாங்கத்தின் இனவழிப்பு, போர்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்ற விசாரணைகளுக்கான அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ் அவர்கள் , காணாமல்போன பல பெண்கள் சிறிலங்கா அரச படையினரது பாலியல் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் , கவலைதருகின்ற வியடமாகவுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான அனைத்துலக விழிப்பு நாளான (ஓகஸ்ற் 30) இன்று, இலங்கை உட்டபட பல்வேறுபட்ட பகுதிகளிலும், விழிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதோடு, பல்வேறுபட்ட மனித உரிமை அமைப்புக்களும் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

காணாமல்போன குடும்பத்தவர்களின் அங்கத்தவர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்திருத்த போதும், ஆணைகுழு அதிகாரிகளின் வாக்கு மூலங்களை மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்ததோடு, காணாமல் போனவர்களது குடும்பத்தவரின் வாக்கு மூலங்களை இருட்டடிப்பு செய்திருந்த விடயத்தினையும் , அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக, ஐநாவின் நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில், சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச காணாமல்போனோர் விழிப்பு நிகழ்வில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐநாவின் நடவடிக்கை குழுவானது காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களை எப்போதுமே அச்சத்துக்குள்ள வைத்திருக்கும் உத்தியாக காணாமல்போதலை சிறிலங்கா அரசு கைக்கொண்டு வரும் நிலையில் , இலங்கைத் தீவில் காணாமல் போயுள்ளவர்களின் உண்மையான விபரத்தினை, சிறிலங்கா அரசாங்கம் வெளியிடவேண்டுமெனவும், நாடுகடந்த தமீழீழ அரசாங்கமானது இந்நாளில் அனைத்துலகத்தின் முன்னால் அறைகூவலாகவும் விடுத்துள்ளது.

http://www.saritham.com/?p=65940

Edited by மல்லையூரான்

[size=6]Sri Lankan Govt Must Answer about Thousands of Disappeared Tamils. UN denied Entry.[/size]

[size="4"]On the International Day of the Disappeared on August 30, Transnational Government of Tamil Eelam (TGTE) called upon the Sri Lankan Government to tell the truth about the thousands of Tamils, including babies, who disappeared.

It is reported that UN Working Group on Involuntary or Enforced Disappearances repeated requests to visit Sri Lanka was denied by the Sri Lankan Government.

"If the Sri Lankan Government has nothing to hide why should they deny UN's visit?" asked Mr. Deluxon Morris, TGTE's Minister for investigation of Genocide, war crimes and crimes against humanity. "Thousands of families are desperately looking for their loved ones who were taken into custody by the Sri Lankan Government forces." [/size]

http://world.einnews.com/pr_news/112384262/sri-lankan-govt-must-answer-about-thousands-of-disappeared-tamils-un-denied-entry

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகமும் ஐ நாவும் தற்சமயம் தங்களுடைய பல்வேறு பிரச்சனைகள்ச் சமாளிக்கமுடியாமல்

திணறிக் கொண்டிருக்கின்றது.

ஒரு அறிக்கையுடன் அவர்கள் கவனம் எங்கள் பிரச்சனைகள் மீது திரும்பாது.

நா க அ மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களின்

கவனத்திற்குக் கொண்டுவந்து அது சம்பந்தமான தீர்வைப்பெற்றுத் தர வலியுறுத்தவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.