Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவை சமாளிக்கும் பொறுப்பு ரவிநாத் ஆரியசிங்கவிடம் – அமைச்சர்கள் குழு செல்லாது

Featured Replies

வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஆராயப்படவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்காவில் இருந்து அமைச்சர்களோ அல்லது மூத்த அதிகாரிகளோ செல்லமாட்டார்கள்.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜெனிவாவில் வரும் நவம்பர் முதலாம் நாள் பூகோள கால மீளாய்வின் போது, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் பாதகமான விடயங்களைத் தவிர்ப்பதற்கு ஆதரவு தேடும் முயற்சிகளில் ரவிநாத் ஆரியசிங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அவர் கடந்த ஐந்து வாரங்களாக ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக சந்தித்துப் பேசி வருகிறார்.

ஐ.நா மனிஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thaaitamil.com/?p=30842

[size=4]வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஆராயப்படவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
[/size]

[size=4]கடந்த முறை தமரா குணநாயகம் ஏமாற்றி விட்டார். அதுமட்டுமல்ல டக்கி, ஹக்கீம் உட்பட்ட பெரிய பட்டாளமே சென்றிருந்தது, எல்லோரும் தோற்றுவிட்டனர். [/size]

[size=1]

[size=4]இந்த முறை கையை கழுவியது போலுள்ளது. ஆனாலும் நாங்கள் நம்பி நடக்கக்கூடாது. [/size][/size]

[size=3]42478.jpg[/size]

[size=4]அறிக்கை தொடர்பில் ஆராய்வு[/size]

[size=4]2012 புரட்டாதி மாதம் 02 ஞாயிற்றுக் கிழமை- பி.ப 02:41[/size]

[size=4]எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையால் சமர்பிக்கப்பட உள்ள அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[/size]

[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவின் தலமையிலான குழுவினரே இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.[/size]

[size=4]இந்த குழுவில் சட்டமா அதிபரின் பிரதிநிதி ஒருவரும் இணைந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.[/size]

[size=4]இந்த அறிக்கைக்கு இணைந்ததான அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கை ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.[/size]

http://hirunews.lk/tamil/42478

[size=4][size=5]மு. க. ஸ்டாலின் ஐ.நா. பயணம். மூனை சந்தித்து டெசோ தீர்மானத்தை கையளிப்பார் [/size][/size]

[size=4][size=5]In an attempt to pressurise the United Nations into acting against Sri Lanka, DMK’s heir-apparent and former deputy chief minister M.K. Stalin is all set to leave for New York on September 20 to meet UN secretary-general Ban Ki-moon and personally handover the resolutions adopted at the Tamil Eelam Supporters’ Organisation (TESO) conference that was held recently in Chennai. On his way back, he is also scheduled to stop at Geneva to hand over the same resolutions to the United Nations high commissioner for Refugees (UNHCR). [/size][/size]

http://www.deccanchronicle.com/channels/nation/north/stalin-leave-new-york-meet-ban-228

இந்த ஆள் தமராவை விட சிறந்தவர் என்றுதான் கொண்டுவந்ததாக ஞாபகம். அது நமக்கு ஆபத்தாக இருக்கலாம். பீரிசு+ சமரசிங்கா,தாமார+ரேணுகா எல்லோரும் நின்றால்த்தான் ஐ.நாவில் இலங்கையைபற்றி தெரியவர ஏதாவது தில்லு முல்லுகள் செய்வார்கள்.

மேலும் பீரிசு, சமரசிங்கா, டக்கி போன்ற பிரதான நடிகர்களின் தொழிலை கெடுத்தால் ஜெனிவா வர ஆயத்தம் செய்த்துகொண்டிருக்கும் துணை நடிகைகளின் தொழிலில் மண் அள்ளீபோட்டதாகபோகிறதே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.