Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ததொஇ" மீது புராணம்"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகனுக்கு ரோகரா...

ததொஇ என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்!!! இன்றுதான் இப்படியொன்றிருப்பதாக அடியேன் கண்ணுக்குப் பட்டது. அடியேன், கொஞ்சப் புராணம் ...

1) ததொஇ இலண்டன் ஆபீசு!

2) ததொஇ இன் தொழில்நுட்பம்!

3) ததொஇ இன் தென்னிந்திய திரைப்படதுறை கனவுலக மோகம்!

4) ......

.... போன்ற தலைப்புகளில் பாட வேண்டிக் கிடக்குது. என்ன செய்வது புராணத்தைப் பாட அடியேன் ஈழ்பதீஸானின் அருள் வேண்டி நிற்கிறேன்!!!!

அரோகரா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

அடியேன், ஏறக்குறைய "ததொஇ" தொடங்கப்பட்ட காலத்திலேயே கனெக்ஸ்கனை கொடுத்து விட்டேன். நானும் தேசியத்துக்குப் பலம் சேர்ப்பதென்று நின்ற/இருந்த/அம்பிட்ட இடமெல்லாம் "ததொஇ" புராணம் பாடிக் கொண்டிருந்தேன். சில வெற்றிகளும் கிடைத்தது. ஆனால் மதுரைக்கு சோதனை வந்தது போல் ஐரோப்பாவில் "சன்ரீவி" எனும் குடும்பச் சொத்து வந்து சேர்ந்தது.

முதலில் "சன்ரிவி" லண்டன் ஆபிஸிலிருந்து, எனது பெயருக்கு முகவரி இடப்பட்டு கடிதம் வந்தது. என்னவாம்??? ... "ஸ்பெஷல் ஆபராம்"!!! கசக்கிப் போட்டு விட்டேன்!! தொடர்ச்சியாக கிழமைக்கு மூன்று, நாலு வந்து சேர்ந்தது. ம்ம்ம்.. கொஞ்சம் ஆச்சரியம்!!! "எனது பெயர், முகவரி இவர்களுக்கு என்னென்று கிடைத்ததென்றுதான்????

சிலவாரங்கள் தொடர்ச்சியாக வந்ததின் மேல் எனது வீட்டித் தொலைபேசியை நோக்கியும் "கிரேட் ஆபர்" வரத் தொடங்கியது. தொடர்ச்சியாக லண்டனிலுள்ள சன்ரீவி ஆபிஸிலிருந்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான அழைப்பு!! முதலில் வேண்டாமென்றேன்!! பின் தான் யோசித்தேன் "எவ்வாறு எனது தொலைபேசி இலக்கம் இவர்களுக்குக் கிடைத்ததென்று"!!!! அடுத்த அழைப்பு வந்தபோது கேட்டேன் "எவ்வாறு எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் உங்களுக்கு கிடைத்ததென்று"??? .. முதலில் திணறியவர்கள் .. " தொலைபேசி புத்தகத்தில் எடுத்தோம்" என்றார்கள். .. உடனே நானோ " புத்தகத்தில் எனது விவரங்களை வெளியிட நான் அனுமதிக்கவில்லை, மற்றும் அப்புத்தகத்தில் எனது விபரங்கள் ஒன்றும் இல்லவே இல்லை" என்றேன். .. மீண்டும் தடுமாறிய அவர்கள் மாறி மாறி பல காரணங்களை கூறி தொலைபேசி உரையாடலை துண்டித்தார்கள்.

பின்பு வெளியே அறிந்தது/கேட்டதிலிருந்து, சன்ரிவியாரின் ஆபர் அழைப்புகளெல்லாம் ததொஇ கனெக்ஸன் கொடுத்தவர்களுக்குத்தானென்ற

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் இக்கட்டுரையினைப்படித்தால் உமக்கு விளங்கும் எவ்வாறு உங்கள் முகவரியினை சன் தொலைக்காட்சியினர் கண்டுபிடித்தார்கள் என்று அறியலாம். முன்பு தீபம், ரி.ஆர்.ரி வைத்திருந்தவர்களில் முகவரிகளினை இவ்வாறு தான் சன் தொலைக்காட்சியினர் பெற்றனர்.

http://www.orupaper.com/issue7/pages_K__11.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

±í¸¼ ¿¡ðÊÄ ºýãި Ţ𼡠¾Á¢ú §¸ì¸ §Åȸ¾¢ þø¨Ä. ¬¨Ä¢øÄ¡ °ÕìÌ þÖô¨Àô⠺츨à ±ñ¼Á¡¾¢Ã¢ò¾¡ý ¸¨¾. ²ý ¯ó¾ TTN ¸¡ÃáÅÐ ±í¸ÙìÌ ¦¸¡ïºõ ¸Õ¨½ ¸¡ð¼Ä¡§Á?

  • கருத்துக்கள உறவுகள்

TTN நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இது பற்றி அறிவிக்கலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

கடந்த வாரமோ, அதற்கு முந்தினதிலோ (சரியாக ஞாபகமில்லை) வார இறுதி நாளில், ஆற அமர இருந்து "ததொஇ" இல் "வணக்கம் ஐரோப்பா" எனும் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் "ஜஸ்ரின்" எனும் ஒரு அறிவிப்பாளர் சிறப்பாக செய்து கொண்டிருந்தார். இன்று ஐரோப்பா வானலைகளில் வலம் வரும் அறிவிப்பாளர்களில் "ஜஸ்ரின்" திறமையான, வசீகரமான முன்னனி அறிவிப்பாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "தமிழ்த் திரைப்படங்கள்" சம்பந்தமான உரையாடல் வந்தவுடன், உணர்ச்சிவசப்பட்டு ... "இன்று தமிழ்நாட்டில் சினிமா ஓடுதோ இல்லையோ, அங்கு புலத்திற்காக படம் எடுக்கிறார்கள். எப்படமாயினும் எம்மவர்கள் பார்க்க தயாராக இருப்பதாக அவர்களுக்குத் தெரியும், அதைவிட தமிழ்நாட்டில் 10 ரூபா கொடுத்து படம் பார்க்கிறார்கள், ஆனால் நாமோ இங்கு 100 மடங்கு அதிகமாக கொடுத்துப் பார்க்கிறோம் (10 பவுண்ஸுகள்)!!! ..." ... என்று ஆதங்கப்பட்டார்!!!

உண்மைதான்! நாங்கள் இங்கு புலத்தில் இந்திய கனவுத் தொழிச்சாலை எனும் போதைப்பொருளுக்கு எப்படியெல்லாம் அடிமைப்பட்டுள்ளோம்?!?! ஆமாம், ஜஸ்ரின் கூறியவைகள் உண்மைதான்!!

ஆனால் ....

உந்த "ததொஇ" இல் காலை தொடங்கினால் மாலை முடியும்வரை இந்திய கனவுத் தொழிச்சாலையின் ஆக்கிரமிப்புத்தானே!??? உதே ஜஸ்ரின் மட்டுமல்ல எந்த ஒரு அறிவிப்பாளரும் ஏதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள் என்றால் அது கனவுத்தொழிச்சாலையுடன் தொடர்பாகத்தானிருக்கும்!!! .. "என்ன புதுப்படம் பார்த்தீர்கள்? எப்படி நல்ல படமா? சோதிகாவிற்குப் பதிலாக சிமிரன் செய்திருந்தால் நன்னாக இருந்திருக்கும்! ... " ... ஐயோ இலவச விளம்பரம்!!! உதைத்தான் விடுங்கோ, உதுக்கு மேலே ... "பாடியவர் யார்? டைரக்ரர் யார்? இசையமைத்தவர் யார்? அந்த சிறு காட்சியில் தோன்றியவர் யார்? .." ... வாவ்வ்வ்வ்... என்ன அறிவான கேள்விகள்??? தொலைபேசி எடுக்கும் எம்மவர்களும் பதில் கூற முடியவில்லையாயின், வேதனைகளோடு வேறை செல்கிறார்கள், உதுக்கு மண்டையை உடைத்து பதில் சொல்லும் எம்மவர்கள், நேற்று பள்ளிப் படிப்பின்போது மண்டையை உடைத்திருந்தால் .... எங்கேயோ இருந்திருப்பம்!!! ஐயோ ஈழ்பதீஸானே! யாருக்குச் சொல்லி அழுகிறது????

இங்கு ஐரோப்பாவில் வலம் வரும் தமிழ்நாட்டு குடும்பச்சொத்தில் கூட இவ்வலவு சினிமா வாறதில்லை!! ஏதோ சின்னத்திரையாம் .. அதிலை கிடக்குது!! ஆனால் "ததொஇ" ஈயை பொறுத்த மட்டில் புலத்தில் எந்தத் தொல்லைக்காட்சிகளும் கனவுத்தொழிச்சாலை ஷோக்களில் போட்டி போட்டு முந்த முடியாது!!! அவ்வளவு அகோரம்!!!

தமிழ்த்தேசியத்திற்கு "ததொஇ" ஏதோ செய்யுதுதான்! ஆனால் இந்திய கனவுத்தொழிச்சாலைக்கு செய்ய்வதப் போலல்ல!!!

ம்ம்ம்ம்ம்.....

"நாமும் எமக்கென்று நலியாக் கலையுடையோம்"!!!!!!!!!! ... எழுத்தில் மட்டும்தானா????????

அரோகரா....

சரியா சொன்னியள். பொது அறிவுப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டிகளில் வாறது எல்லாம் சினிமா குப்பைகள்.

கனடா TVI இல் "விவேகம்" என்று ஒரு நல்ல போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிந்தேன். இவர்களும் "ஆடுகளம்" என்று ஒரு நல்ல நிகழ்ச்சி செய்கிறார்கள். அப்படியான நிகழ்ச்சிகளை சில வயதுப்பிரிவு துறைகள் சார்ந்ததாக தனித்துவப்படுத்தி நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்திட்ட ததொஇ இணைப்பினை பெறுங்கள் என்று சொன்னால் சிலர் கேக்கினம் சினிமாப்படங்கள் போடவில்லை. நாடகங்கள் போடவில்லை. அதனால் தான் சூரியத்தொலைக்காட்சி வைத்திருக்கிறோம் என்று. சூரியத்தொலைக்காட்சி காசு கொடுத்து வைத்திருக்கிறவர்கள் யாழில் மாவீரர் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பினை ததொஇ இலவசமாகப் போடவேண்டும் என்று கேக்கினம். சூரியத்தொலைக்காட்சிக்கு காசு கொடுக்கலாம்.ஆனால் மாவீரர் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பினை காசு கொடுக்காமல் இலசமாக வேணுமோ. என்ன கொடுமையப்பா. கெளசல்யனும்,ஜெமினி கனேசனும் ஒரே காலப்பகுதியில் இறந்தார்கள். சூரியத்தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கு எத்தனை பேருக்கு கெளசல்யனின் கொலை தெரிந்திருக்குது?. முதலில் எல்லோரும் ததொஇ இணைப்பினைப் பெறுங்கள். அவர்களுக்கு நிதி தேவை. அதனால் தான் மற்றவர்களையும் கவர சினிமா செய்திகள் போடுகிறார்கள். ததொஇயில் நையாண்டி மேளம், படலைக்கு படலை, தாயகத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் செய்திகள், இது வெல்லும் நேரம் போன்ற தாயக புலம் சம்பந்தமான நிகழ்ச்சிகளினையும் ததொஇ வழங்குகிறார்கள். இவற்றினைப்பார்க்கும்போது ஈழத்தில் நடக்கும் அனியாயங்கள் மக்களுக்கு செல்கின்றன. சூரியத்தொலைக்காட்சி பார்த்ததினால்தான் நடிகை ஒருவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்திய யாழ்கள உறுப்பினர்கள், படையினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் கொல்லப்பட்ட எமது மக்களினைப்பற்றித் தெரியாமல் அஞ்சலி செலுத்தவில்லை.

ஜெயதேவனின் கருத்துக்களினையும் ஏற்றுக்கொள்கிறேன். ததொஇ நிர்வாகிகளுக்கு உங்கள் கருத்தினை தெரியப்படுத்துங்கள்.

மேலே நான் எழுதினதை காணவில்லை? :? :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிமுகவை மத்திய அரசில் இருந்து நீக்கிவிட்டார்கள்

என்று ஒரு செய்தியை TTNஇல் கேட்டேன்... உண்மையா?

இது பற்றி இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.. :roll:

மதிமுகவை மத்திய அரசில் இருந்து நீக்கிவிட்டார்கள்

என்று ஒரு செய்தியை TTNஇல் கேட்டேன்... உண்மையா?

இது பற்றி இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.. :roll:

127lg.jpg

¾.¦¾¡.þ º¢Ä ¿øÄ Å¢¼Âí¸¨Ç ¦ºö¾¡Öõ ÀÄ Å¢¼Âí¸Ç¢ø ¾¢Õó¾§ÅñÊÔûÇÐ.

þÂýÈŨà º¢É¢Á¡ ºõÀó¾Á¡É §À¡ðÊ ¿¢¸ú¸¨Ç ̨ÈòÐ즸¡ñ¼¡ø ¿ýȡ¢ÕìÌõ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னக்குட்டி ஐயா.. செய்தி தவறானது... இதை பாருங்கள்.. :roll:

:arrow: http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Nn%A7Ls&Topic=0

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவில் புலத்தில் வாழும் எம்மவர்கள் தமிழ்தொலைக்காட்சிக்கு ஆதரவு அளியுங்கள். அவர்களால்தான் புலத்தில் உள்ள பலருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுது. சூரியத்தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கு நடிகைகள் இறப்பு மட்டும் தான் தெரிகிறது

  • 2 weeks later...

¾.¦¾¡.þ º¢Ä ¿øÄ Å¢¼Âí¸¨Ç ¦ºö¾¡Öõ ÀÄ Å¢¼Âí¸Ç¢ø ¾¢Õó¾§ÅñÊÔûÇÐ.

þÂýÈŨà º¢É¢Á¡ ºõÀó¾Á¡É §À¡ðÊ ¿¢¸ú¸¨Ç ̨ÈòÐ즸¡ñ¼¡ø ¿ýȡ¢ÕìÌõ

இந்த இடத்தில் அஜீவன் அண்ணா எங்கோ ஒரு இடத்தில் சொன்ன ஒரு விடயம்தான் எனக்கு இப்போது ஞாபம் வருகின்றது. நம்மில் பலருக்கு திரைப்படமோ இல்லை குறும்படமோ எடுக்கவேண்டும் என்று ஆசை. ஆவல் மேலும் தூண்டப்பட்டு கனவில் மிதந்து படம் அப்படி எடுக்கவேண்டும் இப்படி எடுக்க வேண்டும் என எண்ணுபவர்கள், ஏனோ ஒளிபதிவாக்கியை கையில் எடுத்ததும் நாலு காட்சியை பதிவாக்கிய பின்பு அலுத்துகொள்கின்றார்கள். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால். ஒரு விடயத்தை இப்படி செய் அப்படி செய் என சொல்வது சுலபம், செய்வது கடினம்.

பல காலமாக தென்னிந்திய திரைமோகத்தில் இருக்கும் மக்களை. நாம் நினைத்த கணத்தில் அவற்றில் இருந்து விடுவித்து கொண்டு வருவது சுலபமான வேலையுமல்ல. தமிழீழ திரைக்காவியங்களின் வளர்ச்சியின் போக்கிலேயே இவற்றிற்க்கான தீர்வுகள் இருக்கின்றன.

தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் சேவை பெறுமதி வாய்ந்தவை. அதே போன்று ஜெயதேவன் அண்ணனின் கருத்தையும் உள்வாங்கி தவறுகள் இருப்பின் திருத்தி அமைப்பதும் பயன் தரலாம்.

  • 2 months later...

ஆம...

செமத்த

சொன்னீயள்...

எங்க ஆத்துல

சத்தயம

இல்லவே..இல்ல...

தொப்பைய

காட்டிக்கிட்டு

அம்மனிகள்

ஓ..கோ...

ஆக..

எண்ணு...

தமிழை

மறந்து

ஆங்கலத்தில

தமிழிச்சி...

சீ..சீ...

என்ன கேடு...

இத பார்த்திட்டு

சிலதுகள்...

போடும் பாடு

இருக்கே....

தாங்க

முடியல...

அவங்களுக்கு

தமிழ்

சொல்லி

கொடுங்கப்பா....

உச்சரிப்பு

சப்புண்ணு

இருக்கு...

எங்கட த.தொ.க.

அவயல் தமிழ் ஆக்கள்

எல்லே..

கலக்கினம்...

எல்லாம்

இளுசுகள்

நெஞ்சு

நிறையுது....

ஆத்ம திருப்தி...

உண்டியலான்

தமிழே பேசிறான்...??

அவன்

தமிழனே...??

ஒருக்க

தம்பி ராச

தெரிஞ்ச

சொல்லன...

அட..

போன்

அடிக்குது

அப்ப

பிறகு

வாறன்...தாட்டா..

-வன்னி மைந்தன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.