Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பல்கலைக்கழக ஊடக பயிற்சிமையம்- மாணவர்மீது தாக்குதல் நடத்தியவரை விரிவுரைக்கு அனுமதிக்கும்நிர்வாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பல்கலைக்கழக ஊடக பயிற்சிமையம்- மாணவர்மீது தாக்குதல் நடத்தியவரை விரிவுரைக்கு அனுமதிக்கும்நிர்வாகம்

12 செப்டம்பர் 2012

விரிவுரை நேரம் வெளியில் அழைத்து தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை இல்லை என்றால் இவர் பின்னிணியில் இருக்கும் அதிகார மையம் எது?

யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் கடும் அதிர்வலைகளை வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை பகல் வேளை யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் பகுதி நேர ஊடகக்கற்கையில் ஈடுபட்டிருந்த யாழ்.தினக்குரலின் ஆசிரியபீடத்தின் அலுவலகச் செய்தியாளர் புனிதரூபன் வின்ஸ்லோ மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ம.பிரதீபன் மீது பயிற்சி மைத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

சம்பவ இடத்திற்கு நேரில் வருகைதந்த எஸ்.சுதர்மன் என அடையாள படுத்தப்படும் நபர் வின்ஸ்லோவை உரையாடுவதற்காக வெளியே வருமாறு அழைத்துள்ளார். அவ்வேளையில் விரிவுரைகளை ஆற்றிக்கொண்டிருந்த ஊடகக்கல்வி விரிவுரையாளர். த.கிருத்திகா அதற்கான அனுமதிகளை வழங்கியிருந்தார்.

இதையடுத்து வின்ஸ்லோ விரிவுரை மண்டத்தில் இருந்து அருகாமையில் உள்ள மற்றொரு மண்டபத்திற்கு செல்ல முயற்பட்டபோது அவர் மீது சகட்டு மேனிக்கு சுதர்மன் தாக்கியுள்ளார். அதேவேளை அங்கு வந்த பிரதீபன் மீதும் அவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சக மாணவர்கள் விரிவுரையாளர் அனைவரும் முன்பாகவும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அனைவரையும் அதிர்;ச்சிக்குள்ளாகியது. பாதுகாப்பு தரப்புடன் தொடர்புபட்ட குழுவொன்றினது உறுப்பினர் என தன்னை தானே அடையாளப்படுத்திக் கொண்டு திரியும் குறித்த இந்நபர் போலியான முகவரியின் கீழ் தங்கியிருப்பதும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

சந்தேக நபர் குறித்த ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் முழு நேரமாக கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேகநபர் சுதர்மனை காப்பாற்றும் வகையில் பொலிஸார் செயற்பட்டு வருவதாக ஊடக அமைப்புக்கள் கடும் சீற்றத்தை வெளியிட்டுள்ளன.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும் இதுவரை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் குறித்த சந்தேக நபர் மீது எடுக்கபட்டிருக்கவில்லை. அத்துடன்; குற்றம் சாட்டப்பட்ட நபர் விரிவுரைகளில் கலந்து கொள்ளவும் நிர்வாகம் தொடர்ந்து அனுமதித்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னுறுத்தி அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாரை வலியுறுத்தியும் துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள் பல்கலைக்கழகத்தை வலிறுத்தியும் போராட்டங்களை முன்னெடுக்க ஊடக அமைப்புக்கள் தற்போது தயாராகி வருகின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82863/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கைத்தொழில் அமைச்சரிடம் முறையிட்டால் உடனடி நடவடிக்கையில் இறங்குவார். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.