Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்மானம் என்றால் என்னவென்றாவது தெரியுமா? – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி!

Featured Replies

முதல்வர் ஜெயலலிதா நேற்று ஸ்ரீரங்கத்தில் கருணாநிதியை கண்டித்து பேசியதற்கு இன்று கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,””திருவரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பற்றிய செய்திகளைக் கூறுவதைவிட, என்னையும், ஏனைய எதிர்க்கட்சியினரையும் கடுமையாகத் தாக்குவதில்தான் அக்கறை காட்டியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை;

நமது முதல் அமைச்சருக்கு வாயைத் திறந்தாலே, மற்றவர்களைத் திட்டுகின்ற வார்த்தைகள் தான் வருகிறதே தவிர, நல்ல

வார்த்தைகளே வருவதில்லை. அவருடைய சொந்தத் தொகுதிக்குச் சென்று, அரசு நல்வாழ்வுத் திட்டங்களை வழங்குகின்ற விழா நடைபெறுகிறது. அங்கே நான் எப்படி ஞாபகத்திற்கு வந்தேன்?

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D1.jpg

என்னைத் திட்டுவதற்காக ஒரு விழாவா? அதுவும் அரசு செலவிலா? பாவம், அவர்தான் என்ன செய்வார்? அவர் கலந்து கொள்வது ஒன்று சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவாக இருக்கும்; இல்லாவிட்டால் அவர் சென்று தங்குகின்ற எஸ்டேட் அருகிலே உள்ள வங்கியிலே ஏதாவது ஒரு ஏ.டி.எம். மையம் திறக்கின்ற விழாவாக இருக்க வேண்டும். மற்ற திறப்பு விழாக்கள், அது எவ்வளவு பெரிய பாலமாக இருந்தாலும், கட்டிடமாக இருந்தாலும் தலைமைச் செயலகத்தில் இருந்த படியே “”"”வீடியோ கான்பரன்ஸ்”" மூலமாகத் திறந்து வைத்து விடுவார்.

“”"”இலங்கையில் தமிழினம் அழியக் காரண மாக இருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்”" என்று சாடியிருக்கிறார். தன்மானம் பற்றி யார் பேசுவது என்றே இல்லையா? யார் பேசினாலும் இவர் பேசலாமா? இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன் என்று தற்பெருமை பாடியிருக்கிறார் ஜெயலலிதா! பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக இந்த ஒரு தீர்மானத்தை மட்டுமா ஜெயலலிதா துணிச்ச லோடு நிறைவேற்றினார்?

16-4-2002 அன்று இதே ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவரே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து “”"”மெஜாரிட்டி”" யோடு நிறைவேற்றினாரே, அது மறந்து விட்டதா? என்ன தீர்மானம் அது? இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் தீர்மானமா? இதோ அந்தத் தீர்மானம் –

“”"”இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப் பதற்கு மத்தியஅரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று

இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று, நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்”

“இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் இந்தத் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்திலே முன் மொழிந்தவர், தன்மானம் (?) மிகுந்த இந்த ஜெயலலிதா அல்லவா?

இலங்கையிலே சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பாட்டங் களும், கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், இதே ஜெயலலிதா என்ன சொன்னார்?

“”"”இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் –

போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத் தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்கள்”"

என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா; என்னைப் பார்த்து தன் மானத்தை இழந்தவன் என்று சொல்லலாமா?

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குவதைப் பற்றியும் முதல் அமைச்சர் திருவரங்கத்தில் பேசியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான், இதே அ.தி.மு.க. அரசின் காவல் துறை, கூடங்குளத்தில் போராடிய அந்தோனி ஜான் என்ற ஒரு மீனவரைக் கொன்று, அவருடைய குடும்பத்தை நடுத்தெருவிலே நிறுத்தியிருக்கிறதே,அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது 4-11-2007 தேதிய “”"”முரசொலி”"யில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

“”"”எப்போதும் சிரித்திடும் முகம்

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ;

இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில்

பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! 3

உரமாய்த் தன்னையும் உரிமைப்

போருக்கென உதவிய

உத்தம வாலிபன் – உயிரனையான் –

உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம்

உளமெலாம்

தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு

சென்றாய்?”"

இவ்வாறு; இறந்துபோன ஒருவருக்கு இரங்கல் தெரிவித்ததைக்கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், என் கவிதையைக் கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத்தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் ஜெயலலிதா. அவர் என்னைப் பார்த்து தன்மானத்தை இழந்தவன் என்று கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது?

14.10.2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். 15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதினேன். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்தோம்.

2009ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது – “”"”இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார்”" என்று அறிவித்தவன் நான்.

1956ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு. கழகப் பொதுக்குழுவிலே பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன் மொழிந்தவனே நான்தான்! அந்த ஆண்டிலே பிறந்தார்களோ, பிறக்கவில்லையோ அவர்கள் எல்லாம் நான் இலங்கைத் தமிழர் பிரச்சினை யிலே தன்மானத்தை இழந்து

விட்டேன் என்று புலம்புகிறார்கள் என்றால், அதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

24-8-1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் ஐந்து இலட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தியவன் நான்.

1981ஆம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்ததும், 13-8-1981 அன்று இந்தியப் பிரதமருக்கு “”"”கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது. தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. தமிழ்ப் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு ரயிலை விட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும்”" என்று கேட்டு

தந்தி அனுப்பியவன் நான். இதே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 81ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட நான் இப்போது நாடகம் நடத்துகிறேனாம்.

25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச் சாலைக்குள் நுழைந்து 35 தமிழர்களை படுகொலை செய்த போது – சென்னை மாநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 இலட்சம் பேரைக் கூட்டி மாபெரும் பேரணி நடத்தியவன் நான். மத்திய – மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டிட வேண்டு மென்பதற்காக 10-8-1983

அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர் பதவி களையே ராஜினாமா செய்தவர்கள்.

16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக் காக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23ந்தேதியன்று சந்திரஹாசன்,பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவு ரத்து செய்யப் படாவிட்டால் போராட்டம் தொடருமென்று அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தவனும் அடியேன்தான்.

இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டி 1986ஆம் ஆண்டு மே திங்களில் மதுரையில் “”"”டெசோ”" அமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தியவனும் நான்தான். இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்; அயர்ந்து விடாமல் அடுக்கடுக்கான நடவடிக் கைகளை அவ்வப்போது மேற்கொண்டவன் நான். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தமிழகச் சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் இந்த ஜெயலலிதாதான்! வாழ்க தன்மானம்!

1997ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது, “”"”சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்”" என்று ஜெயலலிதா கண்டன அறிக்கை விடுத்ததை மறந்து விட முடியுமா?

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட “”"”அமைதிப்படை”" இலங்கைத் தமிழர்களையே கொன்று குவித்து விட்டு தாயகம் திரும்பிய நேரத்தில் முதல் அமைச்சராக இருந்த நான் அவர்களை வரவேற்கச் செல்ல மறுத்து விட்டேன். அதைப் பற்றி அப்போது ஜெயலலிதா, “”"”இந்திய அமைதிப் படையை வரவேற்கச் செல்லாதவர்தான் தி.மு.க. தலைவர்

கருணாநிதி”" என்று விமர்சனம் செய்தபோது; “”"”இலங்கைத் தமிழர்களையும் தமிழச்சிகளையும் கொன்று குவித்துவிட்டு திரும்புகிற இந்திய ராணுவத்தை வரவேற்க நான் போகமாட்டேன்”" என்று கூறியவன் நான்!

இலங்கைத் தமிழர்களுக்காக, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது மத்திய அரசை வலியுறுத்தி எதுவுமே செய்யவில்லையாம்! 23-4-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான் – தமிழகச் சட்டப் பேரவையில் – “”"”இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கிடையே

பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்து கிறது”" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவையின்

நடவடிக்கை குறிப்பினை எடுத்துப் பார்த்தாலே நன்கு தெரிந்து கொள்ளலாம்.

தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதோடு நின்று விடவில்லை. 6-10-2008 அன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு – புதுடெல்லியிலே உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக நேரில் அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர் களைக் கொல்வது குறித்து, இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொண்டதை ஜெயலலிதா வசதியாக மறந்து விட்டு அல்லது வேண்டுமென்றே மறைத்து விட்டு தற்போது குற்றஞ்சாட்டுவது சரிதானா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7-12-2006 அன்றும், 23-4-2008 அன்றும், 12-11-2008 அன்றும், 23-1-2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களில் எதுவும், ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றி மகிழ்ந்த;‘இலங்கைக்குப் படையை அனுப்பி, பிரபாகரனை சிறைப்பிடித்துக் கொண்டுவர வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் போன்றதல்ல, தன்னலம் காரணமாக நான் தன்மானத்தை இழந்து விட்டேனாம் – ஜெயலலிதா கூறுகிறார்.

இரண்டு முறை இலங்கைத் தமிழர்களுக்காகவே ஆட்சியை இழந்து, ஒரு முறை பேராசிரியரோடு இணைந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்த நான் தன்னலவாதியாம். ஆனால் ஜெயலலிதா பொதுநலவாதியாம்! எனக்கு தன்மானம் கிடையாது என்கிறார். தன்மானம் எங்கே கிடைக்கும்? அது கடையிலே கிடைக்குமா? படிக் கணக்கிலா? மரக்கால் கணக்கிலா? எப்படி கிடைக்கும் என்ற விவரமே புரியாதவர்,

என் தன்மானத்தைப் பழிப்பது; பத்மாசூரன், யார் தலையிலே கையை வைத்தாலும், அவர்கள் எரிந்து போகும் வரம் வாங்கிவிட்டு, பிறகு தன் தலையிலேயே தன் கையை வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படும் கதையாகத் தான் முடியும்!”” என்று நக்கலாக கேட்டுள்ளார் கருணாநிதி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒரு கீரை கடை வைத்தான் என்றால் அதற்கு ஆப்போசிட்டா இன்னோரு தமிழன் இன்னோரு கீரை கடை வைப்பான்.. இது ஒற்றுமைக்கான அழகு ....நவீன பாசையில் சொல்லவேண்டுமென்றால் தொழில் போட்டி.. லீவ் இட்..

டிஸ்கி:

மாறி மாறி சண்டை கோழி மாறி சீறும் இதுகளை எல்லாம் நீங்க நம்பி எமாந்துட வேணாம்.. இதுங்க ரெண்டும் சுத்த தமிழரே கிடையாது.. இதுகளுக்கு அசைமெண்டு டெல்லியில் இருந்து வருது.. உலக தமிழின தலிவரின் மகளுக்கு வோடோபோன் ராஜா வோடு ஒரு இது.. உங்களுக்காக அவங்கள பகைச்சிக்க முடியுமா ரெல் ரெல் மீ...

அம்மா பிஜெபியோடு கூட்டு சேர நிற்கிறா.. கூடங்குளத்தில் எல்லாரையும் கூளம் ஆக்குறா..

டிஸ்கிக்கு டிஸ்கி:

பேப்பர் பேனா இருந்தா கண்ட நாயும் லெட்டர் பேடில் ஒபாமாவுக்கே கடிதம் ..எழுதிட்டு திரியும்.. அவன் பட்டாணி சுண்டலுக்கு வந்திட்டுது நல்ல பேப்பர்ஸ் என்று திரிவான்... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கூபிடிங்களா பாஸ் :D

  • தொடங்கியவர்

புரட்சிகர தமிழ்தேசியன்

உலக தமிழின தலிவரின் மகளுக்கு வோடோபோன் ராஜா வோடு ஒரு இது..

[size=5]அது எதுவுங்கோ... கொஞ்சம் விளக்கமா சொல்லப்படாதா... எங்களை மாதிரி வெளங்கா வெட்டிகளுக்கு :D :D [/size]

டிஸ்கிக்கு டிஸ்கி:

பேப்பர் பேனா இருந்தா கண்ட நாயும் லெட்டர் பேடில் ஒபாமாவுக்கே கடிதம் ..எழுதிட்டு திரியும்.. அவன் பட்டாணி சுண்டலுக்கு வந்திட்டுது நல்ல பேப்பர்ஸ் என்று திரிவான்... :icon_idea: :icon_idea:

[size=5]- அப்போ ஒரு பேப்பர் சாத்திரியும் இதில் அடக்கமோ பாஸ் :D :D [/size]

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தை திரித்து மறித்து எழுதுகிறார்கள்..

ஒரு பேப்பர் சாத்தரியால் நடத்தபடுவது..

உங்கட அக்க போருக்குள் நம்மை ஏன் இழுக்கிறீர்கள் ..

ஆளை விடுங்க சாமி...

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தன்மானம் என்றால் சிங்க கொடி பிடிப்பதும் அடங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.