Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்கும்பான் கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கி வரும் சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கி வரும் சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களினதாவென சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நேற்றுக் காலை இதே இடத்தில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு ஆணின் சடலம் இன்று காலையும் கரையொதுங்கியிருந்தது.

நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் அது மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம் கரையொதுங்கியிருக்கின்றது. இந்தச் சடலமும் முற்றாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சடலத்தின் தலைப்பகுதி முற்றாக உருக்குலைந்துள்ளது, மேலும் சடலத்தில் கறுப்பு நிறத்திலான உள்ளாடையொன்று காணப்படுகின்றது.

இச்சடலத்தையும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மீட்டுள்ளதோடு, சடலங்கள்; குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரையொதுங்கியுள்ள சடலங்கள் எவையும் இது வரையிலும் அடையாளங் காணப்பட்டிருக்கவில்லை.குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் எவரும் உள்ளுரில் காணாமல் போயிராத நிலையில் முதலில் இந்திய மீனவர்களினுடையதாவென கேள்வி எழுந்திருந்தது.ஆயினும் இந்திய மீனவர்கள் தரப்பிலிருந்தும் காணாமல் போனமை தொடர்பாக தெளிவான பதில்கள் கிட்டியிருக்கவில்லை.இந்நிலையில் இச்சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களினதாவென தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83037/language/ta-IN/article.aspx

காணாமல் போன தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம்…

பொருளாதார நலன்கள், சுயநலங்கள் கருதி திருட்டுத் தனமாக நாட்டை விட்டு ஓடும் இழிந்த கலாச்சாரம் இருக்கும் வரை தமிழ் மக்களை இவ்வாறான படுகொலைகளில் இருந்து காக்க முடியாது.

திருட்டுத் தனமாக நாட்டை விட்டு ஓடும் பேர்வழிகள் அதன் தன்மை காரணமாக நண்பர்கள், உறவினர்களுக்கு கூட தெரியாமல் திடீரென அல்லது எதோ ஒரு பொய் சொல்லிவிட்டு காணாமால் போய்விடுவர். இதனால் அவர்களைப் பற்றி நீண்டகாலம் யாரும் கவலைப்படுவதில்லை. இவ்வாறு மரணமானவர்கள் / படுகொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும். இது தமிழினப் படுகொலை செய்யும் சிங்கள பயங்கரவாத இயந்திரத்துக்கு பெரும் வாய்ப்பாக அமைகிறது.

இந்தச் சூழ்நிலைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நியாயம் கூறலாம். போராட்டத்தில் நேரடியாக கணிசமாக / வெளிப்படையாக பங்குபற்றிய ஒருசிலரைத் தவிர, ஏனையோர் கூறும் எதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை.

பொருளாதார நலன்கள், சுயநலங்கள் கருதி திருட்டுத் தனமாக நாட்டை விட்டு ஓடும் கலாச்சாரத்தை ஆதரிக்கும் எவரும், உண்மையில் தாயகப் பற்றுடையவர்கள் என்று கருதவே முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.