Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. வாசல் நோக்கி வைகுந்தனின் கவனயீர்ப்பும் பொங்குதமிழ் பேரெழுச்சியும்! – மூன்றாம் நாள்

Featured Replies

பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்னாலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாந்தநேயன் செல்வராசா வைகுந்தன் கடந்த 3 நாட்களாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை Baselல் இருந்து Zurich வரை 95 Kmகளை அவர் கடந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை அவர் Zurichல் இருந்து ஆரம்பித்து மாலை Luzern சென்றடைவார். 18.09.12ல் Luzernல் இருந்து Solothurn சென்றடைவார். பின்னர் 19.09.12ல் Solothurn இருந்து புறப்பட்டு Bern சென்றடைவார். நேற்று கடுமையான உயர்ந்த பகுதிகளின் ஊடாக அவர் சிரமத்தின் மத்தியிலும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், 22.09.2012 அன்று ஐ.நா.வின் முன்றலில் நடைபெற இருக்கும் மாபெரும் பொங்குதமிழுக்கு வலுச்சேர்க்க ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழ் சொந்தங்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டியும் தனது மனிதநேயக் கடமையில் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.

D3-2-1024x680.jpg

தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்துவருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து தன்னகப்படுத்திவருகிறான்.

பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பாரிய திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று சக்திவாய்ந்த போராட்டங்களைச் செய்யவேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு – உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!

ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!

ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும் 22. 09. 2012 ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக! ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக, எங்கள் பூர்வீக நிலம், இனம், மொழி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று மாபெரும் பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வை ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக!

D3-1-1024x701.jpg

தங்கள் நடைமுறைச் சிரமங்களைப் பொருத்தருள்ந்து, காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து சுவிஸ் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

078 662 93 06

076 410 06 76

076 421 13 99

http://thaaitamil.com/?p=32409

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.