Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்திரு விஜயராஜ் அவர்களோடு முடியட்டும் இந்த தீக்குளிப்பு...! போதும்...போதும்..! தமிழர்களின் இந்த சாத்வீகமான போராட்டம்..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

உயர்திரு விஜயராஜ் அவர்களோடு முடியட்டும் இந்த தீக்குளிப்பு...! போதும்...போதும்..! தமிழர்களின் இந்த சாத்வீகமான போராட்டம்..?! ஈழதேசம் செய்தி..!

சாத்வீகமான போராட்டம், தன்னையே அழித்துக் கொள்வது, அதன் மூலம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பது என்ற போராட்ட அமைதியின் உச்சம் தான் இந்த தீக்குளிப்பு..! உண்ணா நோன்பு இருந்து இறப்பதை தாண்டிய, அதிஉச்ச அமைதி வழி போராட்டத்தின் இறுதி தான் இந்த தீக்குளிப்பு போராட்டம் என்று கருதலாம். 1947 - க்கு முன்பு இந்த தீக்குளிப்பு போராட்டம் நடந்திருந்தால் அஞ்சி நடு நடுங்கி பிரிட்டிஷ் ராணியார் குடும்பம் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள் என்று கூட யோசிக்க முடிகிறது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அவர்களின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சேலம் பழைய பேரூந்து நிலையம் அருகே உள்ள தனது ஆட்டோ நிலையத்திற்கு சென்று, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உள்ளார். போதும்..போதும்..! முத்துக்குமார் தொடங்கி செங்கொடி என்று முடிவு பெற்ற, அமைதியின் அதிஉச்ச போராட்டமான இந்த தீக்குளிப்பை நிகழ்த்தி உள்ளார் உயர்திரு விஜயராஜ் அவர்கள். உயர்திரு விஜயராஜ் அவர்களுடன் முடிவுக்கு வர வேண்டும் இந்த தீக்குளிப்பு. அதற்கு மாற்றாக, தங்களின் எதிர்ப்பை, அதன் கொள்கைகளை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு, சமுக தொண்டாற்ற வேண்டும். தனது அரசியல் சித்தாந்தங்களை கொண்ட கட்சியில் முழுமையாக இணைந்து அரசியல் பணி செய்யலாம். தன் வாழ் நாளை ஒரு நொடிப்பொழுதில் இழப்பதற்குப் பதில், இந்த கொள்கைகளை சித்தாந்தங்களை கொண்ட கட்சியில் முழு நேர பணியாளர்களாக பணியாற்றலாம்.

ஏனெனில், தமிழர்களின் இந்த தீக்குளிப்புதான் இந்தியா முழுதும் பரவி, ஆந்திராவில் மற்றும் ஏனைய மாநிலங்களில் தொடர்கிறது. தற்பொழுது திபெத்திய இனங்களில் கூட பரவி விட்டன. தமிழர்களின் இந்த போராட்டம் யாருக்கு எதிரானது.? காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர், இவர்கள் இருவரையும் மிக கெட்டியாக தாங்கிப் பிடிக்கும் போலி கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானது. தங்களின் அதி உயர் அமைதியான போராட்டத்திற்கு மிக சிறிதளவும் தகுதி இல்லாதவர்கள் இந்த மூன்று கட்சியினரும். இவர்களின் அரசுகளும் மிக மிக மூர்க்கத்தனமானவர்கள், கொடிய அரக்க தன்மை கொண்ட அரசை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் இவர்கள். நீதி, தர்மம், அறநெறி, மனிதகுல செயற்பாடுகள் ஏதுமற்றவர்கள். எனவே அரசியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு என்று போராட வேண்டிய தருணம் இது. தீக்குளித்த இவ்வளவு பேரும் அமைப்புகளில் தங்களது கொள்கைகளை கொண்ட கட்சியில் இணைந்து செயற்பட்டால் எவ்வளவு முன்னேற்றத்தை கண்டிருக்கலாம். அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.

போதும்...போதும்..இந்த தீக்குளிப்பு..! இனிமேலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ சிறிது கூட நேரம் அவகாசம் இல்லாத, ஒதுக்காத அரசுகள் தான் இன்று உள்ளன. எனவே இவற்றைப் புரிந்து கொண்டு, தனது வாழ்நாளை பயனுள்ளதாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது ஈழதேசம் இணையம்.

மாயாண்டிக்கருப்பு

[size=5]இவ்வாறான சாத்வீக போராட்டங்கள் தொடரட்டும் [/size]

262980_436662969709196_1586053058_n.jpg

[size=2]S[size=4]enior journalist Rajesh Sundaram launches online signature campaign against Sri Lankan President Mahinda Rajapaksa’s Indian visit, even as Puducherry responds to bandh call of Naam Thamilar[/size][/size]

[size=5]http://www.theweekendleader.com/Causes/1324/echoes-of-war.html[/size]

[size=5]இவ்வாறான சாத்வீக போராட்டங்கள் தொடரட்டும் [/size]

262980_436662969709196_1586053058_n.jpg

[size=2]S[size=4]enior journalist Rajesh Sundaram launches online signature campaign against Sri Lankan President Mahinda Rajapaksa’s Indian visit, even as Puducherry responds to bandh call of Naam Thamilar[/size][/size]

[size=5]http://www.theweeken...oes-of-war.html[/size]

தலைவர்கள் இப்படி போராட்டங்களை தொடக்கினால் மக்கள் தங்கள் ஆத்திரங்களை வெளிவிட இலகுவான வழிகள் கிடைக்கும். 146,000 தமிழ் மக்களை ஒரு களத்தில் கொன்ற இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்த மத்திதரசு இன்று அந்த கொலையாளிகளை வரவளைத்து கௌரவிப்பது என்பது மக்களால் பொறுதுகொள்ள முடியாதது.

[size=5]To: cm@mp.nic.in

Cc: pstocmbpl@gmail.com, janwadeashok@yahoo.co.in[/size]

[size=5]Subject: In the name of Viyaraj, please cancel the visit of Sri Lankan President [/size]

[size=4][size=3][size=5]September 16, 2012[/size][/size][/size]

[size=4][size=3][size=5]Shri Shivraj Singh Chouhan[/size][/size][/size]

[size=4][size=3][size=5]Chief Minister, Government of Madhya Pradesh,

Vallabh Bhawan,

Bhopal[/size][/size][/size]

[size=4][size=3][size=5]Dear Hon'ble Chief Minister;[/size][/size][/size]

[size=5]Today, Mr. Viyaraj did self immolated, protesting the upcoming visit by Sri Lankan President Mahinda Rajabakse. The voice of Viyaraj and others must be heard in a democratic society like India. [/size]

[size=4][size=5]I urge Your Government to cancel the visit and uphold values of Human Rights.[/size][/size]

[size=4][size=4]Truly,[/size][/size]

[size=4][size=3][size=5]cc: Sh. Ashok Janwade, Dy Secretary to CM[/size][/size][/size][size=4] [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.