Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொன்னது நீதானா? தேர்தலிற்கு முன்னர் ஹகீம் பேசியவை.

Featured Replies

மஹிந்த ராஜபக்‌ஷவின் பணத்திற்கும், பதவி சலுகைக்கும் முஸ்லிம் மக்களின் வக்கினை விற்றுக்கொண்டிருக்கும் ஹகீம் தேர்தலிற்கு முன்பு உஸ்லிம் மக்களிடம் எவ்வாறு பேசி வாக்குகளைப்பெற்றார்? பெற்றுக்கொண்ட 07 ஆசனங்களும் அரசுக்கெதிராக பேசிப் பெறப்பட்டவையே

.

கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வின் தேர்தல் பிரசார மேடைகளில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய பேச்சுக்கள் அரசுடனான இணைவை ஒரு முறை யோசிக்க வைக்கிறது. அவரின் உரைகளின் பகுதிகள்.

* பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,

அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் எனும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது.

இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்கு காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத்தேர்தலின் மூலம் முடிவு கட்டலாம்.

எனவே சமூகத்தின் இருப்பையும் பலத்தையும் சர்வதேசத்துக்கு காட்டுவோம்.

* காத்தான்குடி தேர்தல் பிரசார கூட்டம்,

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரால் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தோம். கிழக்கில் எங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொத்துவில் அருகம்பே வீதியில்,

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவியில் நான் இருந்தும் எமது கட்சியை மாற்றான் தாய் மகனாகவே அரசாங்கம் கவனித்து வந்தது.

மந்திரி பதவி ஒரு பொருட்டல்ல. அப்பதவி எனக்கு கடிவாளமுமல்ல. முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடை செய்து கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

அரசை விமர்சிக்கிறோம். எல்லையுடன் பேசுகிறோம். அரசு அதனை ஜீரணிக்க வேண்டும். அடாவடித்தனம் அச்சுறுத்தலால் மு.கா.வை அடக்கலாம் என்பது பகற்கனவு.

* சம்மாந்துறை பிரதான வீதி பிரசாரக் கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் அரசு தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடே எமது கட்சியின் வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மு.கா. தனித்துப் போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

* பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் ஆப்பிழுத்த குரங்காக அரசை மாற்றியுள்ளது.

* கிண்ணியா, குறிஞ்சாங்கேணி தேர்தல் பிரசாரம்

பொம்மை ஆட்சியொன்றில் கைகொட்டி வாய்பொத்தி மௌனியாக இருந்து வர எமது கட்சி தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்பது குறித்து நாடே மகிழ்ச்சியடைகிறது. எமது தனித்துவம் காக்கப்படும்.

* வாழைச்சேனை பிரசார கூட்டம்

ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் எங்களை, நாங்கள் இணைந்த காலத்திலிருந்தே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றது.

நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது எமது உறுப்பினர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர்.

ஆளுநர்களாகவும், அரச அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக வடக்கு கிழக்கில் மட்டும் இராணுவ படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏன்?

* நிந்தவூர் பிரசாரக் கூட்டத்தில்

13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தை அரசு மிகவும் மோசமாக கபளீரகம் செய்துள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது போன்று மாகாண சபையை ஜனாதிபதிக்கு கலைக்க முடியாது.

13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசு நினைத்தபடி எதனையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாதென்ற கோட்பாட்டினை அரசு மீறியுள்ளது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக உத்தரவாதம் வழங்கும் இவ்வரசு, கொடுத்த அதிகாரத்தினை மிகவும் மோசமாக பறிக்கும் முகமாக செயற்பட்டுள்ளது.

மு.கா. யாரிடமும் அடமானம் வைக்கப்படுவதற்கோ சரணாகதி அரசியலை செய்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.

* பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்

ஒரு பயங்கரவாதத்தை நிறைவு செய்துள்ள அரசு அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற ஒரு வித்தியாசமான ஜனநாயக பயங்கரவாதத்தை எம் மத்தியில் அரங்கேற்றி வருகிறது.

* ஏறாவூர் காட்டுப்பள்ளி குல்லியத்துதாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்.

மாகாண சபை தேர்தல் அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் நிறைந்ததாக இடம்பெறுமானால் அரசின் மீது தற்போது திரும்பியுள்ள சர்வதேசத்தின் பார்வை மேலும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.

* மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பௌத்த சமூகத்தின் விரோதியாகக் காட்டுவதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இவ் அரசாங்கத்தின் அனுக்கிரகத்தோடு நடக்கும் போது அதனையிட்டு நாம் கவலையடைகிறோம்.

அக்கரைப்பற்று பிரசார மேடையில் முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு போட்டியிடும் நாம் இனிமேலும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க முடியாது. மக்களின் உயிர் நாடியை நாங்கள் தொட்டு விட்டோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

* சாய்ந்தமருது கடற்கரை பிரதேச பிரசாரக் கூட்டம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி காவி உடை தரித்தோரால் நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அடாவடித் தனங்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கிண்ணியா விஷன்’ கேட்போர் கூடப் பிரசாரக் கூட்டத்தில்

மு.கா.தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றது. ஏன் தனித்து போட்டியிட விட்டோம் என கைசேதப்படுகிறார்கள்.

http://thaaitamil.com/?p=32602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.