Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக சைவத்தமிழ் மாநாடும் - சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானமும்

Featured Replies

[size=2]16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமைஅன்றுசுவர்ணபூமிஎன்றழைக்கப்படுகின்றசுவிட்சர்லாந்தில்பேர்ண்நகரில்அமைந்துள்ளஅருள்ஞானமிகுஞானம்பிகைஉடனாயஞானலிங்கேச்சுரர்திருக்கோவிலில்தீர்த்தத்திருவிழாவினைத்தொடர்ந்துசைவத்தமிழ்மாநாடும்அதனைத்தொடர்ந்துமாநாட்டில்செந்தமிழ்வழிபாட்டுப்பிரகடனம்எனும்வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தபிரகடனம்சைவஉலகத்தமிழ்அறிஞர்களிடையேசெய்யப்பட்டது.

அன்றுமுதலாவதுநிகழ்வாகசமயக்குரவர்சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான்எனநால்வரையும்ஞானலிங்கேச்சுரர்ஆலயக்குருமார்கள்முரளிஐயா, விக்னேஸ்ஐயா, கிரிஐயா, சுரேஸ்ஐயாஆகியநான்குகுருமார்களும்நாயன்மார்களைகாவிவரஞானலிங்கேச்சுரர்அடியவர்களும், உலகசைவப்பேரவைத்தொண்டர்களும்பூமாரிபொழியசசிஐயா, கிளிஐயாவெள்ளித்தாம்பாளத்தில்அருட்பெரும்செல்வர்நம்பியாண்டார்நம்பிதொகுத்தளித்தசெந்தமிழ்த்திருமறைத்திருமுறைகளைத்தாங்கிவரஆரம்பமானது.

நால்வரும்திருமுறைகளும்மேடையில்எழுந்தருள, சிவருசிதர்மலிங்கம்சசிக்குமார்தேவாரம்பாடிமாநாட்டினைஆரம்பித்துநிகழ்ச்சித்தொகுப்பினைதிருநிறை. சாமிக்கண்ணுதினேஸ்குமார்அவர்களிடம்கையளித்தார். மாநாட்டுவரவேற்புரையினைஅருட்திரு. யோகன்ஐயா, ஞானலிங்கேஸ்வரர்திருத்தொண்டர்ஆலோசகர்ஆற்றினார். அவர்தனதுஉரையில்இந்நிகழ்வானதுஇறைவன்ஏற்பாடாகும்எனும்பொருட்படஆற்றிகூடியிருக்கும்திருக்கூட்டத்தையும்சைவத்தமிழ்அறிஞர்பெருமக்களையும்சைவநெறிக்கூடத்தின்பெயராலும்உலகசைவப்பேரவையின்பெயராலும்வரவேற்றார்.

சைவத்தமிழ்த்திருக்கோவில்களில்கருவறையில்செந்தமிழ்த்திருமறைவழிபாட்டின்தேவைதொடர்பாககீழ்காணும்விழாபங்காளர்கள்சிறப்புரைகள்ஆற்றினர்.

திருநிறை. யோகிராம்சுந்தர்,

யோகாசனஆசிரியர் (யோகி), இலண்டன்

திருநிறை. வினாசித்தம்பிதில்லையம்லம்,

ஆலோசகர்ஞானலிங்கேச்சுரர்ஆலயத்திருத்தொண்டர்சபை

திருநிறை. இளங்கோஏரம்பமூர்த்தி,

தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம்சிவபணிநிலையம்

திருநிறை. காட்முற்ஹஸ்,

சர்வமதபீடத்தின்தலைவர், சுவிஸ்

திருநிறை. சுப்பிரமணியம்உதயபாரதிலிங்கம்,

சுவிஸ்தமிழ்ஆசிரியர்சங்கத்தலைவர்

திருமதி. சசிகலாஇராஜமனோகரன்,

வைத்தியகலாநிதி, இலண்டன்

திருநிறை. கனகசாபாபதிசக்திதாசன்,

கவிஞர், டென்மார்க்

திருநிறை. சின்னத்துரைசிறீறஞ்சன்,

உச்சிமுருகன்கோவில்நிறுவனர், இலண்டன்

திருநிறை. செல்லத்துரைமனோகரன், உலகசைவப்பேரவை

செயலாளர், இலண்டன்

திருநிறை. செல்லத்துரைதேவராஜா

உபதலைவர், ஸ்ரீகல்யாணசுப்பிரமணியர்தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ்

திருநிறை. பொன்னம்பலம்முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டுஇயக்க

தலைவர்சுவிஸ், குமரிநாடுஇணையம்,

வள்ளுவன்பாடசாலைநிறுவனர்

திருநிறை. கந்தையாஇராஜமனோகரன்,

பொறியியலாளர், கவிஞர், இலண்டன்

திருநிறை. இரா. சசிதரசர்மா,

அருள்மிகுதுர்க்கைஅம்மன்ஆலயம், லுட்சேர்ன்

திருமதி. வசந்தாதேவிபிரேமச்சந்திரன்,

உலகசைவப்பேரவை, இலண்டன்

திருநிறை. சுந்தரம்பிள்ளைசிவச்சந்திரன் (தொண்டர்),

அறங்காவலர்நாகபூசணிஅம்மன்ஆலயம், இலண்டன்

செந்தமிழ்த்திருமறைவாழிபாட்டுத்தீர்மானம் 'சிவருசிதர்மலிங்கம்சசிக்குமார்", ஞானலிங்கேச்சுரர்ஆலயக்குருவால்முன்மொழியப்பட்டது.

'உலகெங்கும்உள்ளசைவத்திருக்கோயில்களின்கருவறையில்சென்றதுபோகஇனிசெந்தமிழ்த்திருமறைவழிபாடேநடைபெறவேண்டும்" இதற்குஉலகத்தமிழ்அறிஞர்கள்யாவரும்கூடிநின்றுஉறுதிமேற்கொண்டுஆவனசெய்யவேண்டும்என்றுதீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கும்தீர்மானப்பிரகடனத்திற்கும்செந்தமிழ்வேள்விச்சதுரர்மு. பெ. சத்தியவேல்முருகனார்தலமைதாங்கியிருந்தார். மாநாட்டுநிறைவுத்தீர்மானத்தினைசைவமாநாட்டின்பெயரால்சைவநெறிக்கூடத்தின்திருநெறியதமிழ்நாயகம் "சிவருசி" . சசிக்குமார்அவர்கள்வாசித்தளித்தார்.

மேலும்ஞானலிங்கேஸ்வரர்ஆலயத்தின்பெயர்இன்றுமுதல்தீர்மானத்திற்கமைவாகதமிழ்படுத்தப்பட்டு "அருள்ஞானமிகுஞானாம்பிகைஉடனாயஞானலிங்கேச்சுரர்திருக்கோவில்" எனவழங்கப்படும்எனும்அறிவிப்பினையும்தெரிவித்தார்.

வழிமொழிவினைதிருநிறை. சின்னராசாஇராதாகிருஸ்ணன், சைவத்தமிழ்ச்சங்கம்சுவிஸ், கூடியிருந்தஅடியவர்களின்பெயரால்வழிமொழிந்தார். [/size]

AJP_0519.JPG?psid=1

AJP_0871.JPG?psid=1

AJP_0520.JPG?psid=1

AJP_0521.JPG?psid=1

AJP_0522.JPG?psid=1

AJP_0524.JPG?psid=1

AJP_0523.JPG?psid=1

AJP_0525.JPG?psid=1

AJP_0527.JPG?psid=1

AJP_0526.JPG?psid=1

AJP_0528.JPG?psid=1

AJP_0529.JPG?psid=1

AJP_0530.JPG?psid=1

AJP_0531.JPG?psid=1

AJP_0532.JPG?psid=1

AJP_0533.JPG?psid=1

AJP_0534.JPG?psid=1

AJP_0536.JPG?psid=1

AJP_0535.JPG?psid=1

AJP_0537.JPG?psid=1

www.info@saivanerikoodam.ch

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

கருவறையில் செந்தமிழ் : சுவிட்சர்லாந்து உலக சைவத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்.

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

சுவர்ண பூமி என்றழைக்கப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் பேர்ண் நகரில் 16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தமிழ் மாநாடும் அதனைத் தொடர்ந்து மாநாட்டில் செந்தமிழ் வழிபாட்டுப் பிரகடனம் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் சைவ உலகத் தமிழ் அறிஞர்களிடையே செய்யப்பட்டது.

நால்வரும் திருமுறைகளும்

அன்று முதலாவது நிகழ்வாக சமயக்குரவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான் என நால்வரையும் ஞானலிங்கேச்சுரர் ஆலயக்குருமார்கள் முரளி ஐயா, விக்னேஸ் ஐயா, கிரி ஐயா, சுரேஸ் ஐயா ஆகிய நான்கு குருமார்களும் நாயன்மார்களை காவிவர ஞானலிங்கேச்சுரர் அடியவர்களும், உலக சைவப்பேரவைத் தொண்டர்களும் பூமாரி பொழிய சசிஐயா, கிளிஐயா வெள்ளித்தாம்பாளத்தில் அருட்பெரும் செல்வர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்த செந்தமிழ்த் திருமறைத் திருமுறைகளைத் தாங்கிவர ஆரம்பமானது.

சைவ அறிஞர்களுக்கு வரவேற்பு.

நால்வரும் திருமுறைகளும் மேடையில் எழுந்தருள, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தேவாரம் பாடி மாநாட்டினை ஆரம்பித்து நிகழ்ச்சித் தொகுப்பினை திருநிறை. சாமிக்கண்ணு தினேஸ்குமார் அவர்களிடம் கையளித்தார். மாநாட்டு வரவேற்புரையினை அருட்திரு. யோகன் ஐயா, ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர் ஆலோசகர் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்நிகழ்வானது இறைவன் ஏற்பாடாகும் எனும் பொருட்பட ஆற்றி கூடியிருக்கும் திருக்கூட்டத்தையும் சைவத்தமிழ் அறிஞர் பெருமக்களையும் சைவநெறிக்கூடத்தின் பெயராலும் உலக சைவப் பேரவையின் பெயராலும் வரவேற்றார்.

சைவத்தமிழ்த்திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டின் தேவை தொடர்பாக யோகிராம் சுந்தர், யோகாசன ஆசிரியர் (யோகி), இலண்டன், வினாசித்தம்பி தில்லையம்லம், ஆலோசகர் ஞானலிங்கேச்சுரர் ஆலயத் திருத்தொண்டர்சபை, இளங்கோ ஏரம்பமூர்த்தி,

தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம் சிவபணிநிலையம், காட்முற் ஹஸ், சர்வமதபீடத்தின் தலைவர், சுவிஸ், சுப்பிரமணியம் உதயபாரதிலிங்கம், சுவிஸ் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர், சசிகலா இராஜமனோகரன், வைத்தியகலாநிதி, இலண்டன், கனகசாபாபதி சக்திதாசன்,

கவிஞர், டென்மார்க், சின்னத்துரை சிறீறஞ்சன், உச்சி முருகன்கோவில் நிறுவனர், இலண்டன், செல்லத்துரை மனோகரன், உலக சைவப்பேரவை செயலாளர், இலண்டன், செல்லத்துரை தேவராஜா உபதலைவர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ், பொன்னம்பலம் முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டு இயக்க தலைவர் சுவிஸ், குமரிநாடு இணையம், வள்ளுவன்பாடசாலை நிறுவனர், கந்தையா இராஜமனோகரன், பொறியியலாளர், கவிஞர், இலண்டன், இரா. சசிதரசர்மா, அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், லுட்சேர்ன், வசந்தாதேவி பிரேமச்சந்திரன், உலக சைவப்பேரவை, இலண்டன், சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் (தொண்டர்), அறங்காவலர் நாகபூசணி அம்மன் ஆலயம், இலண்டன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.

திருமுறை வழிபாட்டுத் தீர்மானம்.

செந்தமிழ்த் திருமறை வாழிபாட்டுத் தீர்மானம் 'சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்", ஞானலிங்கேச்சுரர் ஆலயக் குருவால் முன்மொழியப்பட்டது. 'உலகெங்கும் உள்ள சைவத் திருக்கோயில்களின் கருவறையில் சென்றது போக இனி செந்தமிழ்த் திருமறை வழிபாடே நடைபெறவேண்டும்" இதற்கு உலகத் தமிழ் அறிஞர்கள் யாவரும் கூடி நின்று உறுதி மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கும் தீர்மானப்பிரகடனத்திற்கும் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார் தலமைதாங்கியிருந்தார். மாநாட்டு நிறைவுத் தீர்மானத்தினை சைவமாநாட்டின் பெயரால் சைவநெறிக்கூடத்தின் திருநெறிய தமிழ்நாயகம் "சிவருசி" த. சசிக்குமார் அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் இன்றுமுதல் தீர்மானத்திற்கமைவாக தமிழ்படுத்தப்பட்டு "அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்" என வழங்கப்படும் எனும் அறிவிப்பினையும் தெரிவித்தார்.

வழிமொழிவினை திருநிறை. சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ், கூடியிருந்த அடியவர்களின் பெயரால் வழிமொழிந்தார். குமரி இணைய நிறுவனர் பொ. முருகவேளும் வழிமொழிவில் இணைந்துகொண்டார் தமிழார்வலர் அனைவரின் பெயராலும். வழிபாட்டு தீர்மானத்தினைப் போற்றி சிறிதரன் திருநாவுக்கரசு, சைவ தமிழ் பண்பாட்டுப்பேரவை, டென்மார்க், வைரமுத்து சண்முகராஜா, ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை, சிவஈஸ்வரன் சிவனுஜன், உயர்கல்வி மாணவர், ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை தொண்டர் ஆகியோர் பேசினர்.

அரியபுத்திரன் நிமலன் நன்றி உரையுடன் வாழ்த்து அனுப்பியிருந்த அனைவரையும் நிரலிட்டு வாசித்தளித்தார். நிறைவில் தலைமை உரை ஏற்று நடாத்திய திரு. மு. பெ. சத்தியவேல் முருகனார் பல பேச்சாளர்களும் சுட்டிக்காட்டிய அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும் முகமாக உரை ஆற்றியதுடன் பேச்சாளரில் ஒருவர் தாய்மொழியில் வழிபாடு அவசியம் ஆனால் 'தமிழ்" தெய்வத் தமிழ் என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தன் கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில் இறைவனிற்கு மொழி மதம் பேதம் கிடையாது ஆனால் இறைவன் கழகம் கண்ட ஒரே மொழி தமிழ். ஆகவே தமிழ் தெய்வத் தமிழாகும். அத்துடன் எப்போதும் தமிழில் வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இருண்ட வரலாற்றுக்காலத்தில் தான் தமிழ் மருவி வடமொழி வழிபாடு புகுந்தது. ஆகவே இத்தீர்மானமும் தமிழ் வழிபாட்டின் மீள் எழுச்சியும் செம் பொன்னப்பலத்து விருப்பாகும் எனும் பொருள்படும்படி நிறைவுரையினை ஆற்றினார்.

அடியார்களின் ஆனந்த கண்ணீர்.

காலை 07.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவுடன் விழா ஆரம்பித்து, நண்பகல் 12.00 மணிக்கு மாநாடு கூடியது இரவு 21.00 மணிக்கு மாநாடு நிறைவுற திருக்கோவில் வழிபாடு இரவு 22.30 மணிக்கு நிறைவடைந்தது. மாநாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை அடியவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பல அடியர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி மெய் உறையச் செய்தது. தினேஸ் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பின் திறன் அடிவயர்களை மிகவும் கவர்ந்தது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.