Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் ,குழந்தைகளை உடனடியாக ஏற்க மறுக்கிறது நௌரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nauru-tents.jpg

[size=4]பெண்களையும், குழந்தைகளையும் தற்போது தமது நாட்டுக்கள் குடியமர்த்த முடியாது என்று நௌரு வெளிவிவகார அமைச்சர் கீரன் கெகே தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த சிறிலங்கா அகதிகளை நௌருவில் தற்காலிகமாக குடியெற்றி வருகிறது அவுஸ்ரேலிய அரசாங்கம்.

இரண்டு கட்டங்களாக சிறிலங்காவைச் சேர்ந்த 66 அகதிகள் கிறிஸ்மஸ்தீவில் இருந்து சுமார் 7000 கி.மீ தொலைவில் உள்ள நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நௌருவில் சுமார் 1500 அகதிகளை குடியேற்ற அவுஸ்ரேலியா திட்டமிட்டுள்ளது.

ஆனால் அங்கு அகதிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. தற்காலிக கூடாரங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நௌரு, பெண்களையும் சிறுவர்களையும் இப்போது ஏற்றுக் கொள்ளாது என்று அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களுக்குத் தனியான கட்டட வசதிகள் செய்யப்பட்ட பின்னரே அவர்களை நௌரு ஏற்றுக் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரண்டாவது கட்டமாக சிறிலங்காவைச் சேர்ந்த 36 அகதிகளை நௌருவுக்கு அனுப்பியுள்ளது அவுஸ்ரேலியா.

இந்தநிலையில், கிறிஸ்மஸ்தீவில் உள்ள 14 பேர் தாம் நௌருவுக்குச் செல்ல விரும்பாததால், சிறிலங்காவுக்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதனை அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஏற்கவே நிராகரிக்கவோ மறுத்து விட்டார்.

இதற்கிடையே, 600 அகதிகளை குடியேற்றவுள்ள பபுவா நியுகினியாவின் மனஸ் தீவில் அகதிகளுக்கான கூடாரங்களை அமைப்பதற்காக நேற்று 4 விமானங்களில் 100 அவுஸ்ரேலிய படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120919107011[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நவுரு அரசுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது!

அவர்களுக்குத் தேவை, அவுஸ்திரேலிய அரசின் பணம் மட்டுமே!

அதை, அதிகமாகப் பெறுவதற்காகத் தான், இந்தப் பெண்கள், குழந்தைகள், என்ற முத்தாய்ப்புக் கதைகளை, அது அவிழ்த்து விடுகின்றது!

[size=4]இந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை அவுஸ் வாழ் தமிழர்கள் இனம்கண்டு ஆதரவு தர வேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.