Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜ.நாவின் அழுத்தம் அரசு மீது போதாது; இலங்கை வந்த குழுவிடம் கூட்டமைப்பு முறையீடு.

Featured Replies

ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தமிழர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகள் இங்கே அதிகரித்துள்ளன. ஐ.நா. தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் அழுத்தம் போதாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக் காட்டியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஒரு வாரகாலம் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு வடஅமெரிக்க பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியான ஹன்னி மெஹாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் அடங்கிய 4 பேர் கொண்ட குழு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுக் கொழும்பில் சந்தித்துப் பேசியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரால் தொடர்ந்தும் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஆதாரங்களுடன் எடுத்து விளக்கியது.

தமிழர் பிரதேசங்களில் இராணு முகாம்கள் அமைப்பதற்கும் அவற்றுடன் இணைந்ததாக அவர்களது குடியிருப்புகள் அமைப்பதற்கும் என பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாமல் அகதிகளாக உள்ளனர். ஆனால் மறுபுறத்தில் இராணுவம் தமது குடியிருப்புக்களை அமைத்து தமிழர் இனப் பரம்பலை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது என்பதையும் அவர் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

தமிழர் பகுதிகளில் காணிப் பிரச்சினை பெரும் பூதாகரமாக எழுந்துள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு இலங்கை அரசினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது எனவும் சம்பந்தன் ஐ.நா. குழுவினரிடம் கூறினார்.

இலங்கை அரசு தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. எமக்கும், அரசுக்குமிடையிலான பேச்சுக்கள் ஒரு வருடமாக நடந்து ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இல்லை. அரசு அபிவிருத்தியைச் செய்தால் எல்லாப் பிரச்சினையும் சரியாகிவிடும் என்ற நினைக்கின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு பின்னடிக்கிறது. காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்கு குழு நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்ட நிலையில் அரசு காணாமற் போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கின்றது என்பதையும் சம்பந்தன் இந்தப் பேச்சில் எடுத்துரைத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே, தமிழர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறை அதிகரித்திருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் போதாமல் உள்ளது. அது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பில் சம்பந்தன் வலியுறத்தினார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை ஐ.நா. குழுவுக்க எழுத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

http://thaaitamil.com/?p=32815

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு,அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு, குறுக்கே நிற்பவர்கள்,நீங்கள் தானே!

நீங்களும், இந்தியாவும், முண்டு கொடுக்கும் வரையும், எவராலும், இலங்கை மீது அழுத்தத்தைப் பூரணமாகப் பிரயோகிக்க முடியாது!

பாலுக்குள் தண்ணீர் கலப்பது போல, தமிழினத்தை, முழுத் தண்ணீராக்கும், வரை,தமிழ்த் தலைமைகள் ஓய்ந்து விடப் போவதில்லை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.