Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்ந்து போகாத் தீ

Featured Replies

[size=4]முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே விஜயன் இட்டதீ எங்கும் மூளவே[/size]

[size=2]

[size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே.

விஜயராஜும் அப்படிப்பட்ட ஒரு துயரேந்திதான். இந்தத் துயரேந்தி 3 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் தன் இனத்தவர்கள் சாக்குழிக்குள் தள்ளப்பட்டதை எண்ணி கடைசிவரை பொருமிக்கொண்டே இருந்தான். "இன வெறியர்களுக்கு இங்கிடமில்லை'' என்று உறுமவும் செய்தான்.

முத்துக்குமார், செங்கொடி வரிசையில் தீயை தன் ஆயுதமாக எடுத்தான். ஒரு நெருப்பை இன்னொரு நெருப்பு தின்னமுடியாது. விஜயராஜின் இலட்சியத் தீயை பொசுக்க பெற்றோல் நெருப்புக்கு ஆற்றலில்லை. அரைகுறையோடு அவனை விட்டுத் தூர ஓடிப்போனது.

உடல் எங்கும் வெந்து தணிந்த விழுப்புண்களோடு, பக்கத்தில் சாவு சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தபோதும், உரத்துச் சொன்னான், "என் உயிர் ஆயுதம் இன வெறிப் போர் புரிந்த மஹிந்தவை திருப்பி அனுப்பும். அவர்களுக்கு இங்கு இடமில்லை.''

ஐம்பூதங்களிலும் அதி கூடிய அழிவை நிகழ்த்தக் கூடியது அக்கினிதான். கண் இமைக்கும் பொழுதிலேயே எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டுத்தான் அது ஓயும். இந்துக்களின் முழுமுதற் கடவுளரின் அழித்தல் தொழிலை அக்கினிக் கையே குறிக்கிறது.

அழித்தலின் குறிகாட்டியான அக்கினியே ஆக்கத்துக்கும் முதற் காரணி. கல்லை உரச புறப்பட்ட முதற் பொறிதான் மனிதனை செவ்வாய் வரையும் விண்கலம் அனுப்ப வைத்திருக்கிறது. தீயை ஆயுதமாகப் பிரயோகிக்கும் பழக்கம் தொன்றுதொட்டே எல்லா நாகரிகங்களினதும் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்து வைத்திருக்கிறது.

தமிழ் இனத்தின் பத்தினித் தெய்வம் எனப்படும் கண்ணகி கூட தன் கோபத்தின் ஆயுதமாக அக்கினியையே கையில் எடுத்தாள்; மதுரையை எரித்தாள். அந்தப் பேரழிவுதான் கோவலன் மீதான களங்கத்தைப் போக்கியதோடு, அவளின் கற்பின் வெம்மையையும் உலகறியச் செய்தது.

இலங்கை நோக்கிய படையெடுப்புக்கு முன்னர் தூதனாக வந்த அனுமனின் வாலில் இராவணன் மூட்டிவிட்ட சிறுபொறிதான் இலங்கைத் தீவின் பெரும் பகுதியைத் தீக்குளிக்க வைத்தது. அதன் தழும்புகள் இன்றைக்கும் "சீதஎலிய' பகுதியில் ஆறாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

அனுமன் தூதனாக வந்து போன பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் 1987 இல் மீண்டுமொரு படையெடுப்பு இந்தியாவிலிருந்து. அப்போது எந்த ராவணனும் எந்தச் சீதையையும் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை.

ஆனாலும் சிறைப்பட்டிருந்த தமிழர்களை மீட்பதாகக் கூறி வந்திறங்கியது இந்தியப் படை. உடலெங்கும் புறாக்களின் இறகுகளை பிடுங்கி அவற்றில் இருந்த ரத்தத் திட்டுகளோடு இறக்கைகளை கட்டிக்கொண்டு அமைதித் தூதுவர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனம் செய்து கொண்டார்கள்.

இறகுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆயுதங்களையும், சூனியப் பேய்களையும் இனங்கண்டுகொண்ட மறவர் படை, பேயை ஓட்ட தீயைக் கையில் எடுத்தது.

இது பசித் தீ. ஏந்தியவன் பார்த்தீபன். பன்னிரு நாள்கள் நல்லூர் பற்றி எரிந்தது. வெம்மை தாள முடியாமல் சமாதானச் சூனியக்காரர்களின் புன்னகை ஏந்திய போலி முக மூடிகள் உருகத் தொடங்கின. பார்த்தீபனின் பசித் தீ வேள்வியின் முடிவோடு மூண்டது போர்த் தீ.

அக்கினிக் குஞ்சுகளை கண்டுபிடிக்க, அவர்கள் ஒளிந்திருந்த பொந்துக்குள் புகுந்த படை வெந்துபோனது. நொந்துபோய் சொந்த நாட்டுக்கே ஓடிப்போனது.

காலம் சுழன்றுகொண்டே இருந்தது. தோற்ற அவமான நெருப்பு பாரதத்தின் மனதில் கனன்றுகொண்டே இருந்தது. ஈழத் தமிழரை கருவறுக்க தருணம் பார்த்துக் காத்திருந்தது. பேரூழிக் காலத்தில், போர் அரக்கர்களுடன் கை கோர்த்தது. கடலோர சதுப்பு நிலத்துக்குள் தமிழர்களின் உரிமைத் தீயை குழி தோண்டிப் புதைத்தது.

இலட்சியத் தீ ஒரு மனிதனின் மரணத்தோடோ காலத்தின் மறக்கடிப்போடோ அழியக்கூடியதல்ல. அது பரவிக் கொண்டே போனது. ஈழத்தின் வடக்கு கிழக்கில் மாத்திரமே எரிந்துகொண்டிருந்த பெரு நெருப்பு புலம் பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் முளாசி எரியத் தொடங்கியது. குடத்திலிட்ட விளக்கு குன்றின் மேல் தீபமானது.

எந்த நாட்டுக்குள்ளும் குடும்ப ஆட்சிக்காரர்கள் கால் வைக்க முடியாதபடி எல்லா நிலங்களும் இந்தப் பெரு நெருப்பால் தகிக்கத் தொடங்கின. இராக் கால திருடர்கள் போல முக்காடிட்டு அதிகாரத்தவர்கள் சென்றாலும் கூட முகர்ந்து மோப்பம் பிடித்து சட்டென எரியத் தொடங்கும் ஆர்ப்பாட்ட நெருப்புகள் பற்றிய கனவுகளே அடிக்கடி மஹிந்தரின் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கின.

""பரதேசம் போனால் தானே பற்றியெரிவார்களின் பிரச்சினை பேசாமல் ஒரு நடை பாரதத்துக்கு போய்விட்டு வருவோம்'' சாஞ்சிக்கு செல்ல நினைத்தவரை வாசலிலேயே தடுத்தது விஜயராஜ் என்ற மனித நெருப்பு. இவனின் பெயரும் சிங்களத்தில் மூதாதையரின் பெயர்தான். இவனின் சாவு நியாயப்படுத்தப்பட முடியாததுதான். எனினும் இவனின் உயிராயுதம் தட்டிக்கழிக்கப்படக் கூடியதுமல்ல. தன்னால் ஒரு சர்வாதிகாரத்தின் வருகையை நிறுத்த என்ன செய்ய முடியுமோ அதை தனக்குத் தெரிந்த வழியில் செய்ய முயற்சித்தான் விஜயராஜ். தீ மென்று துப்பிய அவனை வெந்த இறைச்சியாக அள்ளிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார்கள்.

இதற்கு முன்னரும் தீ ஆயுதங்களாக உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் வெந்து மடிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த, "மன நலம் பாதிக்கப்பட்டவர்'', "காதலில் தோல்வி'', ""பணத்துக்காக உயிரை விட்டவன்'' என்ற பட்டங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அவ்வாறு முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தீயாலான தியாகங்கள் மீது வீணர்களால் போர்த்தப்பட்ட கரும்புள்ளிகள் தன் மீதும் தனது போராட்டத்தின் குறிக்கோள் மீதும் குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் விஜயராஜ் குறியாக இருந்தான்.

வைத்தியர்கள் தடுத்தும் கூட அதை பொருட்படுத்தாமல், தன்னுடைய போராட்டத்தின் நோக்கத்தை ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லிவிட்டே உயிரைத் துறந்தான்.

இனியும் நிறையத் தேசங்கள் இருக்கின்றன. அங்கும் அதிகாரத்தின் பயணங்கள் நிகழும் போதெல்லாம் அவர்களின் பாதங்களைச் சுட்டெரிக்க ஆயிரமாயிரம் சூரியன்களின் வலவோடு போராட்ட நெருப்புகள் காத்திருக்கின்றன. அதற்காக தீக் குளிப்பது மட்டும் தான் எதிர்ப்பாகாது. இலட்சியத் தீயை மனதில் கொண்டு ஒன்றிணைந்து குரல் எழுப்புதல் கூட தீக் குளிப்பை விட சர்வ வல்லமை பொருந்திய ஆயுதமாக மாறிவிடலாம். எகிப்து, டுனிசியா நாடுகளில் எரிந்த கலவரத் தீ போன்று இங்கும் எழுந்தால் அதிகாரம் பொசுங்கிப் போய்விடும்.

நெருப்பாகி,

நெருப்பாகி,

நெருப்பாகி நிமிர்வோம்.[/size][/size][size=2]

[size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே. விஜயராஜும் அப்படிப்பட்ட ஒரு துயரேந்திதான். இந்தத் துயரேந்தி 3 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் தன் இனத்தவர்கள் சாக்குழிக்குள் தள்ளப்பட்டதை எண்ணி கடைசிவரை பொருமிக்கொண்டே இருந்தான். "இன வெறியர்களுக்கு இங்கிடமில்லை'' என்று உறுமவும் செய்தான்.

முத்துக்குமார், செங்கொடி வரிசையில் தீயை தன் ஆயுதமாக எடுத்தான். ஒரு நெருப்பை இன்னொரு நெருப்பு தின்னமுடியாது. விஜயராஜின் இலட்சியத் தீயை பொசுக்க பெற்றோல் நெருப்புக்கு ஆற்றலில்லை. அரைகுறையோடு அவனை விட்டுத் தூர ஓடிப்போனது.

உடல் எங்கும் வெந்து தணிந்த விழுப்புண்களோடு, பக்கத்தில் சாவு சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தபோதும், உரத்துச் சொன்னான்,

"என் உயிர் ஆயுதம் இன வெறிப் போர் புரிந்த மஹிந்தவை திருப்பி அனுப்பும். அவர்களுக்கு இங்கு இடமில்லை.''

ஐம்பூதங்களிலும் அதி கூடிய அழிவை நிகழ்த்தக் கூடியது அக்கினிதான். கண் இமைக்கும் பொழுதிலேயே எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டுத்தான் அது ஓயும். இந்துக்களின் முழுமுதற் கடவுளரின் அழித்தல் தொழிலை அக்கினிக் கையே குறிக்கிறது.

அழித்தலின் குறிகாட்டியான அக்கினியே ஆக்கத்துக்கும் முதற் காரணி. கல்லை உரச புறப்பட்ட முதற் பொறிதான் மனிதனை செவ்வாய் வரையும் விண்கலம் அனுப்ப வைத்திருக்கிறது. தீயை ஆயுதமாகப் பிரயோகிக்கும் பழக்கம் தொன்றுதொட்டே எல்லா நாகரிகங்களினதும் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்து வைத்திருக்கிறது.

தமிழ் இனத்தின் பத்தினித் தெய்வம் எனப்படும் கண்ணகி கூட தன் கோபத்தின் ஆயுதமாக அக்கினியையே கையில் எடுத்தாள்; மதுரையை எரித்தாள். அந்தப் பேரழிவுதான் கோவலன் மீதான களங்கத்தைப் போக்கியதோடு, அவளின் கற்பின் வெம்மையையும் உலகறியச் செய்தது.

இலங்கை நோக்கிய படையெடுப்புக்கு முன்னர் தூதனாக வந்த அனுமனின் வாலில் இராவணன் மூட்டிவிட்ட சிறுபொறிதான் இலங்கைத் தீவின் பெரும் பகுதியைத் தீக்குளிக்க வைத்தது. அதன் தழும்புகள் இன்றைக்கும் "சீதஎலிய' பகுதியில் ஆறாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

அனுமன் தூதனாக வந்து போன பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் 1987 இல் மீண்டுமொரு படையெடுப்பு இந்தியாவிலிருந்து. அப்போது எந்த ராவணனும் எந்தச் சீதையையும் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை. [/size][/size][size=2]

[size=4]ஆனாலும் சிறைப்பட்டிருந்த தமிழர்களை மீட்பதாகக் கூறி வந்திறங்கியது இந்தியப் படை. உடலெங்கும் புறாக்களின் இறகுகளை பிடுங்கி அவற்றில் இருந்த ரத்தத் திட்டுகளோடு இறக்கைகளை கட்டிக்கொண்டு அமைதித் தூதுவர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனம் செய்து கொண்டார்கள்.

இறகுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆயுதங்களையும், சூனியப் பேய்களையும் இனங்கண்டுகொண்ட மறவர் படை, பேயை ஓட்ட தீயைக் கையில் எடுத்தது.

இது பசித் தீ. ஏந்தியவன் பார்த்தீபன். பன்னிரு நாள்கள் நல்லூர் பற்றி எரிந்தது. வெம்மை தாள முடியாமல் சமாதானச் சூனியக்காரர்களின் புன்னகை ஏந்திய போலி முக மூடிகள் உருகத் தொடங்கின. பார்த்தீபனின் பசித் தீ வேள்வியின் முடிவோடு மூண்டது போர்த் தீ.

அக்கினிக் குஞ்சுகளை கண்டுபிடிக்க, அவர்கள் ஒளிந்திருந்த பொந்துக்குள் புகுந்த படை வெந்துபோனது. நொந்துபோய் சொந்த நாட்டுக்கே ஓடிப்போனது. [/size]

[/size][size=2]

[size=4]காலம் சுழன்றுகொண்டே இருந்தது. தோற்ற அவமான நெருப்பு பாரதத்தின் மனதில் கனன்றுகொண்டே இருந்தது. ஈழத் தமிழரை கருவறுக்க தருணம் பார்த்துக் காத்திருந்தது. பேரூழிக் காலத்தில், போர் அரக்கர்களுடன் கை கோர்த்தது. கடலோர சதுப்பு நிலத்துக்குள் தமிழர்களின் உரிமைத் தீயை குழி தோண்டிப் புதைத்தது.

இலட்சியத் தீ ஒரு மனிதனின் மரணத்தோடோ காலத்தின் மறக்கடிப்போடோ அழியக்கூடியதல்ல. அது பரவிக் கொண்டே போனது. ஈழத்தின் வடக்கு கிழக்கில் மாத்திரமே எரிந்துகொண்டிருந்த பெரு நெருப்பு புலம் பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் முளாசி எரியத் தொடங்கியது. குடத்திலிட்ட விளக்கு குன்றின் மேல் தீபமானது.

எந்த நாட்டுக்குள்ளும் குடும்ப ஆட்சிக்காரர்கள் கால் வைக்க முடியாதபடி எல்லா நிலங்களும் இந்தப் பெரு நெருப்பால் தகிக்கத் தொடங்கின. இராக் கால திருடர்கள் போல முக்காடிட்டு அதிகாரத்தவர்கள் சென்றாலும் கூட முகர்ந்து மோப்பம் பிடித்து சட்டென எரியத் தொடங்கும் ஆர்ப்பாட்ட நெருப்புகள் பற்றிய கனவுகளே அடிக்கடி மஹிந்தரின் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கின.

"பரதேசம் போனால் தானே பற்றியெரிவார்களின் பிரச்சினை பேசாமல் ஒரு நடை பாரதத்துக்கு போய்விட்டு வருவோம்'' சாஞ்சிக்கு செல்ல நினைத்தவரை வாசலிலேயே தடுத்தது விஜயராஜ் என்ற மனித நெருப்பு. இவனின் பெயரும் சிங்களத்தில் மூதாதையரின் பெயர்தான். இவனின் சாவு நியாயப்படுத்தப்பட முடியாததுதான். எனினும் இவனின் உயிராயுதம் தட்டிக்கழிக்கப்படக் கூடியதுமல்ல. தன்னால் ஒரு சர்வாதிகாரத்தின் வருகையை நிறுத்த என்ன செய்ய முடியுமோ அதை தனக்குத் தெரிந்த வழியில் செய்ய முயற்சித்தான் விஜயராஜ். தீ மென்று துப்பிய அவனை வெந்த இறைச்சியாக அள்ளிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார்கள்.

இதற்கு முன்னரும் தீ ஆயுதங்களாக உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் வெந்து மடிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த, "மன நலம் பாதிக்கப்பட்டவர்'' , ""காதலில் தோல்வி'', ""பணத்துக்காக உயிரை விட்டவன்'' என்ற பட்டங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன. [/size]

[/size][size=2]

[size=4]அவ்வாறு முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தீயாலான தியாகங்கள் மீது வீணர்களால் போர்த்தப்பட்ட கரும்புள்ளிகள் தன் மீதும் தனது போராட்டத்தின் குறிக்கோள் மீதும் குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் விஜயராஜ் குறியாக இருந்தான்.

வைத்தியர்கள் தடுத்தும் கூட அதை பொருட்படுத்தாமல், தன்னுடைய போராட்டத்தின் நோக்கத்தை ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லிவிட்டே உயிரைத் துறந்தான்.

இனியும் நிறையத் தேசங்கள் இருக்கின்றன. அங்கும் அதிகாரத்தின் பயணங்கள் நிகழும் போதெல்லாம் அவர்களின் பாதங்களைச் சுட்டெரிக்க ஆயிரமாயிரம் சூரியன்களின் வலவோடு போராட்ட நெருப்புகள் காத்திருக்கின்றன. அதற்காக தீக் குளிப்பது மட்டும் தான் எதிர்ப்பாகாது. இலட்சியத் தீயை மனதில் கொண்டு ஒன்றிணைந்து குரல் எழுப்புதல் கூட தீக் குளிப்பை விட சர்வ வல்லமை பொருந்திய ஆயுதமாக மாறிவிடலாம். எகிப்து, டுனிசியா நாடுகளில் எரிந்த கலவரத் தீ போன்று இங்கும் எழுந்தால் அதிகாரம் [/size][/size][size=2]

[size=4]பொசுங்கிப் போய்விடும்.[/size][/size]

[size=2]

[size=4]நெருப்பாகி,

நெருப்பாகி,

நெருப்பாகி நிமிர்வோம்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5274837123199927[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.