Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடிகளைச் சுருட்டும் பாதுகாப்பு தரப்பும் அவுஸ்ரேலியக் கனவால் சிறைக் கம்பிகளை எண்ணும் அப்பாவிகளும்

Featured Replies

அம்பலமாகும் உண்மைகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Aus%20Board1_CI.jpg

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்புவதென்ற பேரில் நடந்து வரும் மிகப்பெரும் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறிப்பாக ஆட்களை கடத்தும் முகவர்களுடன் அவ்வப்பகுதி பொலிஸார் மற்றும் கடற்படையினர் நிழலாக தொடர்புபட்டுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

வடமராட்சி வடக்கு கடற்பரப்பில் நேற்று (23.09.12) அதிகாலை 46 பேர் இதே போன்று அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட வேளை அகப்பட வைக்கப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. கடத்தல்காரர்கள் ஆளொருவரிடமிருந்து தலா மூன்று இலட்சம் வரையில் கட்டணம் அறவிட்டுள்ளனர். இவ்வாறாக பயணிக்கும் படகொன்றை அவர்கள் சுமார் 25 இலட்சம் வரையில் செலவழித்து கொள்வனவு செய்கின்றனர். அத்துடன் சுமார் பத்து இலட்சம் வரையான பெறுமதியுடைய உணவுப் பொருட்களையும்; கொள்வனவு செய்கின்றனர். எவ்வாறு இருப்பினும் அவர்களுக்கான நிகர இலாபம் சுமார் எண்பது இலட்சத்திற்கும் அதிகமாகும்.

எனினும் அண்மைக் காலமாக படகுகள் சிக்கி கொள்கின்ற சம்பவத்தில் காட்டிக் கொடுப்புகளே காரணமெனக் கூறப்படுகின்றது. ஏற்பாட்டாளர்களே திட்டமிட்ட வகையில் படகை மாட்டிவிடுமிடத்து சுமார் ஒரு கோடி வரையில் நிகரலாபம் மிஞ்சி விடுவதாக கூறப்படுகின்றது. பணத்தை செலுத்தி அவுஸ்திரேலியா செல்லும் கனவுடன் இருப்பவர்களுக்கு இறுதியில் சிறை வாழ்க்கையே மிஞ்சியும் விடுகின்றது.

வடமராட்சி வடக்கு பொலிகண்டி கடற்பரப்பில் நேற்று அதிகாலை 46 பேருடன் புறப்பட்ட படகொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் பருத்தித்துறையிலேயே அகப்பட்டுள்ளது. புறப்பட்டு சில நிமிடங்களினில் சொல்லி வைத்தாற்போல் இக்கைது நடந்துள்ளது.

எனினும் கதையின் மெய்யை புரிந்து கொண்ட நீதித்துறை ஓட்டிகள் மற்றும் முகவர்களை மட்டும் இலக்கு வைக்க தொடங்கியதையடுத்து நிலைவரம் தற்போது மாற்றமடைந்துள்ளது. பயணிகளை பிணையில் விடுவித்து விடுவதுடன் சூத்திரதாரிகளை கைது செய்ய பணிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்தே கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதியின் பணிப்பின் பேரில் இன்று (24.09.12) பொலிகண்டி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் முகவர்களாக இருந்தவர்களென கூறி சிலரை பிடித்துள்ளனர்.

ஆயினும் அவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் அப்பாவிகளென குடுமபத்தவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. தாம் தப்பிக்க பொலிஸார் மற்றும் கடற்படையினர் தம்மோடு இணைந்திருந்த இடைத்தரகர்களை சிக்க வைப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன உள்ளுரில் எவரும் படகுகளை வழங்காமையினால் அவை தெற்கிலிருந்து தருவிப்பதாக கூறப்படுகினறது. ஆனாலும் படகுகளையும் பாதுகாத்து மீட்டெடுக்க ஏதுவாகவே தெற்கிலிருந்து தருவிக்கப்டுவதும் தற்போது அம்பலாகியுள்ளது.

http://www.globaltamilnews.net

[size=4]யாராவது முடிந்தால் அவுசில் உள்ள, குறிப்பாக குடிவரவாளர்களை பற்றி எழுதும் பத்திரிகையாளர்களுக்கு, இவை பற்றி சில ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்:[/size][size=1]

[size=4]- சிங்கள இராணுவத்திற்கும் கடத்தலுக்கும் இடையே உள்ள தொடர்பு [/size][/size][size=1]

[size=4]- அரசியல்வாதிகளின் அனுசரணை [/size][/size][size=1]

[size=4]- ....[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.