Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளிலிருந்து வந்த கடும் குற்றவாளிகளை கனடாவிலிருந்து மிக விரைவாக நாடு கடத்தும் சட்டம் பாராளுமன்றத்திற்கு வருகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Minister-Jayson-150canada.jpg

[size=4]வெளிநாடுகளிலிருந்து அகதிகளாகவும் குடிவரவாளர்களாகவும் கனடாவிற்கு வந்து இங்கு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டும் கடும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களான பலரை உடனடியாக கனடாவை விட்டு நாடு கடத்தும் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மேற்படி சட்டத்தை கனடிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தருமாறும் கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size]

[size=4]இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "கனடியர்களைப் பாதுகாப்பதற்காக நாம் இந்த நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை. எனவும் இந்த சட்டத்தை அமுல் செய்வதன் மூலம் நாம் பல நல்ல பலன்களைப் பெறமுடியும்.[/size]

[size=4]ஏற்கெனவே கடும் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டு நாடுகடத்தல் உத்தரவைப் பெற்றவர்கள் பலர் கனடாவின் தாராள போக்கு கொண்ட சட்டங்கள் காரணமாக மீள் முறையீடு செய்து (அப்பீல்) காலத்தைக் கடத்திய வண்ணம் கனடாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றார்கள். தொடர்ந்து கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வண்ணம் அப்பாவிகளான கனடியர்களை பயமுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.[/size]

[size=4]கனடாவிற்கு குடிவரவாளர்களாக வெளிநாட்டவர்கள் வருவதை நாம் அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் கடும் குற்றவாளிகளும் சட்டங்களை மீறும் அரச விரோத நடவடிக்கைகளில் குற்றவாளிகளாக காணப்படுகின்றவர்களும் கனடாவிற்கு வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அமைச்சர் கென்னி. கடும் குற்றவாளிகளை மிகவும் விரைவாக நாடு கடத்தும் சட்டத்தின் முக்கிய மூன்று விடயங்கள் பற்றி பின்வருமாறு விபரித்தார்.[/size]

[size=4]மேற்படி சட்டத்தின் மூலம் கனடிய அரசு மிகவும் எளிதாக பயங்கரமான மேற்படி கடம் குற்றவாளிகளை நாடுகடத்தலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட கடும் குற்றவாளிகள் போன்றவர்கள் கனடாவிற்கு ஒருபோதும் வராத வண்ணம் சட்டத்தில் பல விடயங்களை உட்படுத்தல்.[/size]

[size=4]அத்தோடு நியாயமானவர்களும் நேர்மையாளர்களுமான புதிய குடிவரவாளர்களை கனடாவிற்கு அழைக்கும் வகையில் தற்போது உள்ள சில தடைகளை அகற்றுதல். போன்றவை இந்த புதிய சட்டத்தில் அடங்கும்.[/size]

[size=4]மேலும் புதிய சட்டத்தின் மூலம். தங்கள் மீதான நாடு கடத்தல் உத்தரவை நீக்கக் கோரி அவர்கள் குடிவரவுத் திணைக்களத்தின் அப்பீல் செய்யும் பிரிவோடு தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களை மிகவும் குறைவாக வழங்குதல் மிக அவசியம் என்று நான் கருதுகின்றேன்.[/size]

[size=4]இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு மீளவும் கனடாவில் வாழும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படாவிட்டால். இங்;கு தொடர்ந்தும் அவர்களது குற்றச் செயல்கள் தொடராதிருக்க வழியேற்படும்.[/size]

[size=4]என்னைப் பொறுத்தளவில் எந்த வகையான சட்டம் கனடாவிற்கு தேவையென்றால் நேர்மையான குடிவரவாளர்களின் வருகையே கனடாவிற்கு தேவை. அதை விடுத்து இந்த அமைதியான நாட்டில் குழப்பங்களையும் கொடுமைகளையும் செய்யும் வகையில் ஒரு கடும் குற்றவாளி கூட கனடாவிற்கு வருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.[/size]

[size=4]இவ்வாறு கூறிய அமைச்சர் ஜெய்சன் கென்னி மேற்படி சட்ட மூலம் கனடிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை அதை ஆதரித்து நமது கனடிய தேசத்தை கடும் குற்றவாளிகளின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.[/size]

[size=4]-(ரொரென்ரொவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)-[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.