Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரசிற்கு வக்காலத்து வாங்குவது ஒரு மௌலவிக்கு அழகா? ஆதம்பாபாவிற்கு மஜீத் பதிலடி!

Featured Replies

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாறை மாவட்ட உலமா சபைத் தலைவர் ஆதம்பாவா மௌலவி கூறியிருப்பதானது காலம் கடந்த ஞானம் என்பதுடன் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாறான செயலுமாகும் எனவும் அகில இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்தால் அது ஜனநாயகத்தின் வெற்றியாகும். அதற்காக யாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரைப் புலிகள் எனக் கூற முடியாது. ஒரு காலத்தில் புலியாக இருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சர்களாக வரவில்லையா? ஆயுதம் தூக்கி அரச படைகளை கொன்றவர் இன்று ஆட்சித் தலைவருக்கே ஆலோசகராக இருப்பது மௌலவிக்குத் தெரியாதா? என்றும் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையவில்லை என்பதை விட பள்ளிவாசல் உடைப்பு, காணிப் பிரச்சினை, சிலை வைத்தல் போன்ற பிரச்சினைகளை அரசுக்கெதிராக குற்றம் சுமத்தி விட்டு அவற்றுக்கான எத்தகைய தீர்வுகளும் கிடைக்காத நிலையில் அரசுக்கு ஆதரவளித்ததைத்தான் நாம் துரோகமென காண்கிறோம்.

தேர்தல் காலத்தில் அரசை கடுமையாக சாடிய மு.கா அரசுடனேயே சேரும் என்பதை மௌலவி ஆதம்பாவா போன்றோர் ஏன் தேர்தல் காலத்தில் சமூகத்துக்கு சொல்லவில்லை எனக் கேட்கிறோம்.

மு.கா. தரப்பினர் மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார்கள் என நன்கு தெரிந்த நிலையிலும் அவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டதன் மூலம் இந்த ஏமாற்றில் மௌலவியான இவருக்கும் பங்குள்ளது என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் வெற்றியின் பின்பும் அரசுடனேயே இருப்பார்கள் என்பது தமக்கு கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை என இறைவன் மீது சத்தியம் செய்து ஆதம்பாவா மௌலவி கூறுவாரா எனக் கேட்கின்றோம்.

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்தால் அது ஜனநாயகத்தின் வெற்றியாகும். அதற்காக யாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரைப் புலிகள் எனக் கூற முடியாது. ஒரு காலத்தில் புலியாக இருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சர்களாக வரவில்லையா? ஆயுதம் தூக்கி அரச படைகளை கொன்றவர் இன்று ஆட்சித் தலைவருக்கே ஆலோசகராக இருப்பது மௌலவிக்குத் தெரியாதா?

அத்துடன் 2002ம் ஆண்டு மு.கா.வினர் பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்ட போது தம்மையும் புலிகள் எனச் சொல்வார்கள் என தெரியவில்லையா? இந்த சந்திப்பை ஏன் மௌலவி கண்டிக்கவில்லை? தமிழ்செல்வன் கொல்லப்பட்டபோது நாடாளுமன்றில் அவருக்காக ரஊப் ஹக்கீம் கண்ணீர் வடித்தபோது புலி என அரச தரப்பினர் கூறுவார்கள் என தெரியாமல்த்தான் அழுதாரா?

அதேபோல் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சில் ஈடுபடும் போது தம்மையும் கூட அழைத்துச் செல்லுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் குழந்தைத்தனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கெஞ்சியபோது தாமும் புலிகள் என முத்திரை குத்தப்படுவோம் என தெரியவில்லையா?

அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் பொம்மை ஆட்சி தேவையில்லை என்றும் பொய் கூறி வாக்குப் பெற்ற கட்சிக்கு வக்காலத்து வாங்கியது ஒரு மௌலவிக்கு சரிதானா? அதுவும் உலமா சபை என்பது கௌரவமான சபையாகும். அதன் பெயரை பாவித்து அரசியல் அறிக்கை விட்டிருப்பது அகில இலங்கை உலமா சபையின் உறுப்பினன் என்ற வகையில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அரசியலில் நான் ஒரு போதும் அகில இலங்கை உலமா சபையின் உறுப்பினர் என்பதையோ கல்முனை உலமா சபையின் உப தலைவர் என்பதையோ பயன்படுத்தியதில்லை. அந்தளவுக்கு நான் உலமா சபையை மதிக்கின்றேன்.

ஆனால், ஆதம்பாவா மௌலவி, தனது அரசியல் அறிக்கைக்கு உலமா சபையின் பெயரை பாவித்தது தவறாகும். இந்த வகையில் அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவராக இவரை பிரேரித்தவனும் நானே என்பதால் எனது இரட்டிப்பு கவலையை தெரிவித்துக் கொள்கிறேன் - இப்படி அந்த அறிக்கையில் முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f81bb8d9-0615-41d5-900c-5a54a70c9538

  • தொடங்கியவர்

மு.கா வினது நிலைப்பாட்டை அம்பாறை மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் விளங்கப்படுத்தியுள்ளார். உலமாக கட்சி தலைவர் அது பற்றி தனது ஏமாற்றத்தை தெரிவித்திருக்கிறார். இந்த விளக்கத்தைபற்றி மு.கா. என்ன சொல்கிறதென்பதே பிரதான கேள்வி.

அம்பாறை உலாமா சபைத்தலைவர் கூறியிருப்பது சரியாகில் மு.கா. எதற்காக தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளுக்கு இறங்கியது? மு.கா தன்னை கூட்டமைப்புடன் பேச அழைத்த வெளிநாட்டு தூதரகங்களுக்கும் கூட்டமைப்புடன் கூட்டு சேரமுடியாமைக்கு இதே காரணத்தான் கூறியதா? கக்கீமுக்கு முலையூட்டி மிருகங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் முக்கிய உறுப்பான முள்ளந்தண்டு என்ற உறுப்பு இல்லாமல் தவறிப்போவிட்டாதால் இப்படியான கேணைத்தனமான விளங்களின் பின்னால் தொடர்ந்தும் ஒழிக்கப்போகிறாரா அல்லது மைக்கிரோபோன் ஒன்றுக்கு முன் வந்து இவற்றை மறுக்க போகிறாரா?

மு.கா கூட்டமைப்பை புலிகள் என்று வடுகட்டுவதால் அரசாங்கதிடம் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை கேட்காது தட்டிக்கழித்துவிடலாம் என்றா நினைக்கிறது? அல்லது அரசாங்கத்திற்கு பயந்து முஸ்லீம் மக்களின் உரிமைகளை அரசுக்கு விட்டுகொடுத்து தனது பதவியை காப்பாற்றிகொள்ள, "கூட்டமைப்பு உரிமைகள் கேட்பதால் இவர்கள் புலிகள் என்று பட்டம் கட்ட பார்க்கிறதா". மு.கா. கூட்டமைப்பு புலிகள் என்ற இந்த விளக்கத்தை மறுக்க விரும்பாவிட்டல், "புலிகள் தான் கூட்டமைப்பு" என்று பகிரங்க அறிக்கை விட்டு அதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று கூட்டமைப்பை பகிரங்க விவாததிற்கு அழைக்க வேண்டும். இந்த வெட்ட வெளிச்சமான நரித்தனங்களை நிறுத்த வேண்டும்.

முஸ்லீம்கள், தமிழர், சிங்களவர் எல்லோரும் முன்னிலையில் அரையில் சீலை இல்லாத்தனமாக அடிமை சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, தங்களின் கையால் ஆகாத்தனத்திற்கு, கூட்டமைப்பை புலிகள் என்றழைத்து மு.கா வும் தோழமைகளும் கதையை திருப்புவதை இன்னொரு தேர்தல் வரும்வரை முஸ்லீம் மக்க்கள் பொறுத்துக்கொண்டிருக்க போவதில்லை.

கேவலத்தனமாக தனமாக கக்கீம் தேர்தலில் நடந்ததை பௌசி, அஸ்வார் போன்ற அரசில் இருக்கும் முஸ்லீம்கள் எதிர்த்தார்கள். தேர்தலின் பின்னர் கக்கீம் கேவலமாக நடந்ததை அரசுக்கு வெளியே இருக்கும் முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள். இரண்டு பக்கமுமே கக்கீமின் நடத்தைகளைக்கண்டு கைகொட்டி சிரித்த பின்னர் கக்கீம் ஏன் தான் இரண்டுபக்கமும் எள்ளிநகையாடத்தக்கத்தாக நடந்தார் என்ற கேள்விக்கு ஒரு சின்ன மாவட்ட உலாமத்தலைவரை விளக்கமளிக்க விட்டிவிட்டு பார்த்துக்கொண்டிருபது எல்லாவற்றிக்கும் கிளைமார்க்ஸ்சாக இருக்கிறது..

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.