Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான செயல்திட்டம் உள்ளது! ஆனால் செயற்பாடு இல்லை!

Featured Replies

இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளில் இன்னும் அந்த நாட்டின் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை என்று நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களுக்கு நெருக்கடிகளுக்கான குழு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட நல்லிணக்க ஆiணைக்குழு அறிக்கை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதில் உள்ள விடயங்கள் அமுல்செய்யப்படவில்லை.

இது இலங்கை அரசாங்கத்தின் தீவிரமான கவனயீனத்தை காட்டுகிறது என்றும் நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் படையினரின் மீறல்கள் உட்பட்ட விடயங்களை விசாரணை செய்ய இன்னும் சுயாதீனமான அமைப்பு ஒன்று நிறுவப்படவில்லை.

இதற்கு மத்தியில் கடந்த 6 மாதங்களுக்குள் இலங்கையில் காணாமல் போதல் உட்பட்ட மனித உரிமைமீறல் விடயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வடக்குகிழக்கில் இராணுவ பிரசனத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இன்னும் அங்கு படையினர் பொதுமக்களின் நிர்வாகங்களில் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சு நடத்த பின்னடித்து வருகிறது.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரதிநிதிகள், இலங்கையின் நல்லிணக்க திட்டங்களுக்கு வலியுறுத்தல் விடுக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வலியுறுத்தலை விடுக்கவேண்டும் என்று நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலவர மேம்பாட்டை கவனிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகளை இலங்கை அனுமதிக்கவேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக மேலதிகப்பிரதிநிதிகள் இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் நடைமுறையை கவனிக்க அனுப்பப்படவேண்டும் போன்ற செயற்பாடுகளை தற்போது கூடியுள்ள மனித உரிமைகள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

http://thaaitamil.com/?p=33642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.