Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்த போராளிகளின் உடல் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க இராணுவமும், நிர்வாணமாக்கி பார்த்து ரசித்த இலங்கை இராணுவமும்

Featured Replies

ஆப்கானிஸ்தானில் மரணித்த தலிபான் போராளிகளின் உடல்கள் மீது சிறுநீரை கழித்து இழிவான செயலில் ஈடுபட்ட இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இறந்த உடல்களின் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் இழிவான செயல்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.

அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாய் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து, ஜோசப் வி.சாம்ப்ளின், எட்வார்ட் டபிள்யூ டெப்டோலா ஆகிய ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

2011 ஜூலை மாதம் 27-ஆம் தேதி ஹெல்மந்த் மாகாணத்தில் இந்த அநாகரீக சம்பவம் அரங்கேறியது. ஆனால் 2012 ஜனவரி மாதம் தான் இந்த வீடியோ இணையதளத்தில் பரவ துவங்கியது என்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மீது பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இறந்த உடல்களை இழிவுப்படுத்தும் நேட்டோ ராணுவத்தினரின் அநாகரீக செயல்கள் இதற்கு முன்னரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன.

இது இவ்வாறு நிற்க..., இலங்கை இராணுவத்தினர் 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உக்கிர தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட போராளிகளை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சுட்டுக் கொன்று அவர்களை ரசித்து வீடியோ எடுத்து இணையத்தளங்களில் பரவ விட்டிருந்தனர்.

இறந்த பெண் போராளிகளின் நிர்வாண உடல் மீது சப்பாத்துக் கால்களால் மிதித்தும், எச்சில் துப்பியும், பாலுறுப்புக்களை நெருப்புகட்டையால் சுட்டும் ரசித்த அதைக் காணொளியாக்கி வெளியிட்டனர் இலங்கை இராணுவத்தினர்.

இதைப் பார்த்த ஒவ்வொரு தமிழனும் சர்வதேச ரீதியாக திரண்டெழுந்த போது எந்த நாடுமே கண்டுகொள்ளாமல் விட்டிருந்ததே. எந்தவொரு நாடாவது இராணுவத்தின் மீதும் இலங்கை அரசின் மீதும் வழக்கு பதிவை மேற்கொண்டதா? இல்லை அந்நாஅட்டு அரசுதான் அவ் இராணுவத்தினருக்கு தண்டனை எதுவும் வழங்கியதா?

ஆறு மாத காலப்பகுதிக்கு பின் அமெரிக்க இராணுவத்தினர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானதும் கொதித்தெழுந்த அந்நாட்டு ஜனாதிபதி அவ் இராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தது பெருமைக்குரியது.

ஆனால் தமிழீழ புலிப் பெண் போராளிகளின் மரணித்த உடல்களை நிர்வாணமாக்கி தம் காம பசியைப் புசித்த இராணுவத்தினரின் வீடியோக்கள் உடனே இணையத்தளத்தில் இராணுவத்தினரே பரப்பியும் அதைத் தட்டிக் கேட்க நம் தமிழீழ தேசிய தலைவர் இல்லாதபோதிலும், அவர்வழி நடக்கும் ஒவ்வொரு தமிழனும் இதயம் வெடித்து கண்ணீர் மல்க நியாயம் கேட்டானே... அதை யாருமே கண்டுகொள்ளவில்லையே.

அன்று கிடைக்காத நீதியும் நியாயமும் வெள்ளைமாளிகையில் கிடைக்குமா என்ன? எப்போது அமெரிக்கா அலரிமாளிகையில் ஈழத் தமிழருக்காக எச்சரிக்கையோடு உயர்த்தி குரல்கொடுக்குதோ அன்று தான் ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நிம்மதி பிறக்கும்.

அமெரிக்க இராணுவமே இப்படி நடந்துகொண்டதை பார்த்திருக்கும் அமெரிக்காவிடம் தமிழீழ பெண்போராளிகளின் உடலங்களை நிர்வாணமாக்கி ரசித்த இலங்கை இராணுவம் பற்றி முறையிட்டால் நீதி கிடைத்திடுமா?

தமிழனுக்காக ஐ.நா.சபையோ, மனித உரிமை கண்காணிப்பகமோ, சர்வதேசமோ, எந்த தமிழ் அரசியல்வாதிகளோ யார் வந்து நீதி கேட்டாலும்... நம் தலைவன் தமிழீழ தேசிய தலைவன் நீதி கேட்பது போல இருக்குமா என்ன? அதனால் தான் பல சிரமத்தின் மத்தியிலும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் நீதி கிடைக்காமல் நீடித்துக்கொண்டே போகின்றது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி போன்று நமது தலைவரும் வழக்குப் பதிவு செய்திருந்தால்.. ஒருவேளை நமக்கும் நியாயம் கிடைத்திருக்கலாம்.

என்றாவது ஒருநாள் எமக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும்...

நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. - என்ற தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையோடும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.