Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.எஸ்.கபாடிய வழங்கிய தீர்ப்பால் ஸ்வீட் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் பெருச்சாளிகள்..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

எஸ்.எஸ்.கபாடிய வழங்கிய தீர்ப்பால் ஸ்வீட் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் பெருச்சாளிகள்..?! ஈழதேசம் செய்தி..!

தான் ஓய்வு பெரும் முதல் நாள் பரபரப்பான தீர்ப்பு வழங்கி, காங்கிரஸ் கட்சியினரை பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ளார் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா என்று கருதலாம். அதாவது அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், 2 G வழக்கில் சொல்லுவதைப் போல ஏல முறையையை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சுரங்கம் மற்றும் இயற்கை வளங்களை மக்கள் பயன்பெறும் வகையில் அரசே எந்த வகையில் விற்பனை செய்யலாம் என்பதை முடிவு எடுத்துக் கொள்ளலாம், ஏல முறையில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தமோ, வழிகாட்டுதலோ தேவையில்லை என்று.

இந்த தீர்ப்பை தான் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் முதல் லோக்கல் ஒன்றிய காங்கிரஸ் தலைவர்கள் வரை ஆகோ..ஒகோ..! இதுவல்லவா வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று தாங்களே தங்களது முதுகில் தட்டிக் கொண்டு சபாஷ் போடுகிறார்கள்...! இனிப்பு மற்றும் பட்டாசு கொளுத்தி கொண்டாடி வருகிறார்கள்.

மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால், அரசுக்கு வருமான இழப்பு ஒன்றும் பெரிதல்ல என்று கூறியிருக்கிறார் எஸ்.எஸ்.கபாடியா என்ற உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி. மேலோட்டமாக பார்த்தால் சரியாத்தானே சொல்லி இருக்கிறார் என்று தோன்றும். பிறகு ஏன் இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ஊழல் ஒன்று தான் கொள்கை என்றும் ஊழலுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஏன் பாராட்டுகிறார்கள்.? நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில் சுமார் அல்ல சரியான மதிப்பீட்டில், 1,85,000 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற கணக்கு தப்பாகி விடும். பொய்யாகிவிடும்.

எப்படி என்றால், நிலக்கரி சுரங்கத்தை மிக மிக குறைந்த அளவில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதின் மூலம், மின்சாரத்திற்கு விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது காங்கிரஸ் அரசு. அதாவது நிலக்கரி சுரங்கத்தை அதிக விலைக்கு விற்றால், அதிக விலை கொடுத்து வாங்கும் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தாயரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு நிலக்கரியை சப்ளை செய்வார்களாம், மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமும் மின்சாரத்தை, மின்சாரத்தின் விலையை யூனிட் ஒன்றுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்து விடுவார்களாம். மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிலக்கரி சுரங்கத்தை பத்து பைசா இருபது பைசாவுக்கு கொடுப்பதின் மூலம் பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறிவிடலாம் அல்லவா..?

பொது மக்கள் நலன் முக்கியமா..? அரசுக்கு வருமானம் முக்கியமா..? என்று எதிர்க் கேள்வியை எழுப்பினால் எந்தப் பயலாவது பதில் சொல்ல முடியுமா என்ன..?. இதைத்தானே 2 G வழக்கில் அ.ராசா சொன்னார். அ.ராசாவின் இந்த பதிலுக்கு தி.மு.க, தலைவர் மு.கருணாநிதி பொழிப்புரை வழங்கினார். காய்கறி விற்கும் கங்கம்மாள்,மீன் விற்கும் மீனாம்பாள் போன்றவர்கள் எல்லாம் கைப்பேசி பயன்படுத்துகிறார்கள் என்றால் என்ன சின்ன விசயமா..? குறைந்த விலையில் முதலில் வருபவருக்கு முதலில் என்று கொடுத்ததின் விளைவு தானே பொது மக்கள் பயன்பெறுகிறார்கள்..? என்ற வாதமும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு என்ற முறையிலும் எப்படி பார்த்தாலும் பொது மக்கள் தானே பயன் பெறுகிறார்கள் என்று சொல்ல வருகிறார்கள் காங்கிரஸ் அரசின் பெருச்சாளிகள். இதற்கு அரசியல் சாசன சட்ட விளக்கம் கொடுத்துள்ளார் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா அவர்கள்.

தான் ஓய்வு பெரும் கடைசி நாளில் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார் ஏன்..? தெலுங்கு படத்தில் தீர்ப்பை இப்படிதான் வழங்க வேண்டும் என்று நீதிபதி வீட்டில் உள்ளவர்களை மிரட்டுவார்களே...? அவர்கள் வீட்டில் உள்ள குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவார்களே அது போன்று இருக்குமோ..? இல்லையென்றால் ' குடிக்காமாலே ஒருவன் இருந்து விட்டு கடைசி நாளில் வயிறு முட்ட குடித்தானாம் ' என்பது போல புலம்புகிறார்கள் கார்ப்பரேட் செய்தியாளர்கள் இவ்வாறு. இவ்வளவு காலம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை எல்லாம் வழங்கிய கபாடியாவா..? இந்த தீர்ப்பை வழங்கியது என்று. இது அவருக்கு நேர்ந்த ஒரு கரும்புள்ளி என்கிறார்கள்.

நமக்கு என்னமோ தெலுங்குப்பட ஞாபகம் தான் வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.