Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராக்...! பராக்..! விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி...( PFLT ) தமிழகத்தில் .? சொல்கிறது கியூ பிரிவு..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=3]பராக்...! பராக்..! விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி...( PFLT ) தமிழகத்தில் .? சொல்கிறது கியூ பிரிவு..! ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]

விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பு, இந்த அமைப்பின் நோக்கம் ' தமிழ் நாட்டையும் இலங்கையில் உள்ள ஈழத்தையும் ஒன்றாக இணைத்து தனி நாடு பெறுவதே ' என்று தமிழக உளவுத் துறையின் எஸ்.பி.சம்பத் குமார் இன்று தெரிவித்தார். சட்ட விரோத நடவடிக்கைகள் [/size][size=3]

( தடுப்பு ) தீர்ப்பாயம் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிக்கும் விசாரணை அமைப்பின் நீதிபதி வி.கே.ஜெயின் அவர்களிடம் இவ்வாறு கூறியுள்ளது தமிழ் நாட்டின் கியூ பிரிவு போலீஸ். [/size]

[size=3]

விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் என்று பெரிய தலையணை சைஸ் புத்தகம் இரண்டினை ஆவணமாக சமர்ப்பித்துள்ளது தமிழக அரசு. விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த ஆவணமாம் இந்த இரண்டு பெரிய சைஸ் தொகுப்புகள்.மத்திய உள்துறை இயக்குனர் சுமன் அவர்களிடம் வைக்கோ கேட்ட கேள்விகளில்...அதாவது குறுக்கு விசாரணையில் ஆமாம், தெரியாது, ஞாபகம் இல்லை என்று மட்டுமே பதில் கூறினார். விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பில் ம.தி.மு.க. கட்சி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதில் கூறியுள்ளார் சுமன் அவர்கள். ஆமாம்..தெரியாது...ஞாபகம் இல்லை என்ற பதிலை கேட்ட நீதிபதி ஜெயின் அவர்கள், மனுதாரர் சரியாக ஆவணங்களை படிக்கவில்லை போலும் என்று வேறு கூறியுள்ளார். படிக்காமல் கொள்ளாமல் விசாரணைக்கு கோப்புகளை கொண்டு வந்து பேந்த.. பேந்த... முழிக்கிறார்கள் உள்துறையின் உயர் அதிகாரிகள். [/size]

[size=3]

ரிப்போர்ட் - ஐ யாராவது சிவன் கோயில் மடத்தில் உட்கார்ந்து எழுதி தந்திருப்பார்களோ..? நாளை மற்றும் ஊட்டியில் நடைபெற உள்ள இரண்டு நாள் விசாரணையில் அதாவது தீர்ப்பாயத்தில் எப்படியும் விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு மேலும் ஒரு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து விடுவார்கள். முடிவு எடுத்துவிட்டு ஒரு ஒப்புக்கு விசாரணை நடத்துகிறார்கள். இந்த இரண்டு ஆண்டு கால தடை என்பதே உள்துறைக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே புதிதாக ஒரு பில் கொண்டுவந்து அது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த புதிய மசோதா படி இனி தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்த தீர்ப்பாயம் இரண்டு ஆண்டு என்பதிற்குப் பதில் ஐந்தாண்டுகள் என்று கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறது அந்த மசோதா...! [/size]

[size=3]

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த திக் விஜய் சிங் அவர்கள் இந்தந்த இயக்கங்களை இந்தியாவில் தடை செய்யலாம் என்று ஒரு முன்மொழிதலை கொண்டுவந்தார். அப்பொழுது மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, பிரதமராக வாஜ்பாய் இருந்தார். திக் விஜய் சிங் அவர்களின் அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ்., சிமி மற்றும் ஒரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யலாம் என்ற கூறிய முன் மொழிதலை, பா.ஜ.க.வின் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சிமி மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்து விட்டு, ஆர்.எஸ்.எஸ்.என்ற மதவெறி அமைப்பை சட்டபூர்வ அமைப்பாக அறிவித்தார். அப்பொழுது கொண்டு வந்தார்கள் இந்த இரண்டு வருட தடை நீட்டிப்பு பரிசீலனை. [/size]

[size=3]

நமக்கு வரும் சந்தேகம் எனில், விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் நாட்டில் எங்கு இருக்கிறது..? அதென்ன விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி..? கூலிப்படைகளை வைத்துக் கொண்டு, தடை கொண்டுவர வேண்டும் விடுதலைப் புலிகளுக்கு என்ற நோக்கத்திற்காக, சட்டபூர்வமற்ற வழிகளில் கியூ பிரிவு உளவுத்துறை செயல்படுகிறதா..? என்பதே. [/size]

[size=3]

மேலும் தமிழ் நாட்டையும் சேர்த்து ஈழம் தனி நாடாக அமைந்து விடும் என்ற கியூ பிரிவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்பதே. ஈழம் ஒரு நாடாகவும், தமிழ் நாடு ஒரு நாடாகவும் மாற வாய்ப்புள்ளது என்பதே நமது கருத்து என்று சொன்னார் ஒரு புலம்பெயர் வாசி. என்னமோ....! நல்லது நடந்தால் சரிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். [/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா புலி என்பது எப்போதும் ஈழத் தமிழனைத்தான். அதுதான் கடைசி ஈழத்தமிழன் அழியும் வரை இந்தியா புலி அழிந்தது என்பதை ஒப்புக் கொள்ளாது. அதுதான் புலி அழிந்த பின்பும் புலித்தடை வெளிச்சப்படுத்தும் உண்மை!

இந்தியாவில் புலியை வெறுத்த ஒவ்வொருத்தனும் உண்மையில் வெறுப்பது ஒவ்வொரு ஈழ்த்தமிழனையும்தான். இந்த உண்மை தாமதமாக அறிவோருக்கு ஆதாரமாவது இன்று உலகே கண்ணீர்விடும் படுகொலைக்கு. புலிவெறுப்பர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்த அட்தனைபேரும் மகிந்தாவிற்கு செங்கம்பளம் விரிக்கின்றார்கள் இப்போதும்!

மக்களின் சாவை இரசிக்கின்ற பயங்கரவாதம் இநிதியாவில் அன்றி வேறெங்கேயும் தேட முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.