Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - மனோ கணேசன் சரியான திசையில் செல்கிறாரா..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - மனோ கணேசன் சரியான திசையில் செல்கிறாரா..? ஈழதேசம் பார்வையில்..!

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல என்று இன்று மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார் . இந்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர்கள் மீண்டும் தமது தாய்நாடு திரும்பும் சூழல் இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இலங்கை திரும்புவது தொடர்பில் இந்தியாவில் உள்ள இலங்கையர்களது விருப்பங்கள் அறியப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் முதலில் செய்யப்பட வேண்டும். இவைகளை செய்யாமல், இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அணைத்து இலங்கை தமிழர்களுக்கும், இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த கருத்து நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அது இன்று இலங்கையில் தமிழர்களின் ஒட்டு மொத்த ஜனத் தொகையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும். என்றார்.

மேலும் கூறுகையில், உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தப் பட வேண்டும், உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பது எங்களது கொள்கையாகும் என்றார். அதற்கான சூழல் தற்போதைய இலங்கையில் இல்லை. இந்த சூழலை தமிழ் தேசியக் கட்சிகள், இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும்.

புலம் பெயர் மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்புவது, இந்தியாவில் உள்ள அகதிகள் தாயகம் திரும்புவது மூலமாக ஆக, மிகச் சிறுபான்மை இனமாக மாறுவதை தடுக்க முடியும். மேலும் தற்போது இலங்கையில் இருந்து நாளொரு தினமும் ஆஸ்திரேலிய நாட்டிற்கு படகுகளில் செல்லும் தமிழர்கள் ஆஸ்திரேலிய போக முடியாமல் ஆழ்கடலில் தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். தமிழர்களது எண்ணிக்கை குறைவதால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைகிறது. இதன் மூலம் அரசியல் பலம் குறைகிறது என்று கூறியுள்ளார் மனோ கணேசன் அவர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தான் முதன் முதலில் சொன்னார் வெளி உலகிற்கு, யுத்தம் முடிந்த பிறகு தமிழர்கள் அனைவரும் முள்வேலிகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று. அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தனர் முள்வேலி முகாம்களை மகிந்தாவும் மன்மோகன் சிங் அரசும். தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகப் பலமாக எதிர்த்தன திராவிடக் கட்சிகள், திரு வைக்கோ கூட இந்த விசயத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தேசியக் கட்சிகளால் நிர்பந்தப்படுத்தப்பட்டார் என்றால் மிகையில்லை.

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறிய தமிழ் தேசியக் கட்சிகளின் குரல் கூட, மிக பலகீனமான குரலாகவே வெளிவந்தன. இவையெல்லாம் கடந்த காலங்களில் அதாவது 2009 யுத்தத்திற்குப் பிறகு என்பது தான் உண்மை. சுருக்கமாக கூறின், இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் இலங்கை திரும்ப வேண்டும். தங்களது சொந்த கிராமங்களில் இடங்களில் தங்க வேண்டும். அதற்கான புறச் சூழலை உருவாக்க வேண்டும். இந்தியாவும் சர்வதேசமும், இல்லையென்றால் இலங்கையின் மிகச் மிகச் சிறிய இனமாக இலங்கை தமிழ் தேசிய இனம் சிதைக்கப்படும் என்கிறார் மனோ கணேசன் அவர்கள்.

வரும் நவம்பர் மாத ஐ.நா.சபையின் அழுத்தங்கள் மகிந்தா அரசை ,தமிழர்களுக்கு சம அந்தஸ்து, என்ற நிலையை நோக்கி நகர்த்தும் என்றாலும், மகிந்தாவின் ஆட்சியாளர்களும் சிங்கள பெளத்த இன வெறி கொண்டவர்களும் இந்த சம உரிமை நிலையை மறுக்கவே செய்வார்கள். அதன் மூலம் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பே செய்வார்கள். அல்லது ஆட்சியில் இருந்தே மகிந்தாவை நிரந்தரமாக அகற்றுவார்கள்.

மகிந்தாவின் நன்மையைக் கருதியும், சிங்கள பெளத்த இனவெறியாளர்கள் நன்மை கருதியும், ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் நலன் கருதியும், தனி ஈழம் தான் தீர்வு என்ற ஒரு முடிவை அமெரிக்க அரசு எடுத்து விட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. இதையெல்லாம் நினைவில் கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் ஏன் கூறி இருக்கக்கூடாது..? கண்டிப்பாக இந்திய அரசு குடியுரிமை அந்தஸ்து கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே ரவி சங்கர் குருஜி சொல்லி இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்றாலும் மனோ கணேசன் சரியான திசையில் தான் பயணிக்கிறார் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.