Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிதரன் முன்மொழிய ஈபிடிபி வழிமொழிந்தது! சந்திரகுமார் முன்மொழிய சரா வழிமொழிந்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sritharan1-100x100.jpg

[size=4]யாழ் மாவட்டத்தின் 2012ஆம் ஆண்டுடின் யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை 9.30 மணி யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இங்கு தற்போது நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், தெங்கு உற்பத்தி, பனை அபிவிருத்தி, காணி, மீள்குடியேற்றம், மீன்பிடி, நீர்ப்பாசனம், மற்றும் சிவில் பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

ஆரம்பத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வரவேற்புரையினை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிகழ்ச்சி நிரல் மற்றும் கடந்த ஆண்டுக்கான கூட்ட அறிக்கைகள் கிடைக்கப் பெறாமையினால் கூட்டத்தில் வாக்கு வாதங்கள் ஏற்பட்டன.

அதனையடுத்து கூட்டத்தை தலைமை தாங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவறு ஏற்பட்டு விட்டதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்படாது நடவடிக்கை எடுப்பதாகவும் அதன்போது மன்னிப்பும் கோரியிருந்தார்.

இக் கூட்டத்தின் போது யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற பல்வேறு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மக்களுக்கு இடையூராக அமையும் சில விடயங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி திருவடி நிலைப்பகுதியில் உள்ள மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்க விடாது கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அப்பிரதேச மக்களை தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தினை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முன்மொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வழிமொழிந்தார்.

அடுத்து இந்திய மீனவர்களது ஆதிக்கத்தினால் இலங்கை மீனவர்களது கடல்வளம் அழிக்கப்படுகின்றது. இதனைத் தடுத்து நிறுத்தி சரியான தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்மொழிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஷ்திரி அலன்ரின் வழிமொழிந்தார்.

அடுத்து யாழ். மாவட்டத்துடன் இயங்கிவந்த முல்லைத்தீவு தெங்கு அபிவிருத்தி மையத்தை யாருக்கும் தெரியாது தற்போது திருகோணமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது அதனை மீண்டும் யாழ் மாவட்டத்துடன் இணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நிதி தொடர்பில் குழப்பநிலைகள் காணப்பட்டதனால் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் கூட்டத்தில் ஏற்பட்டன.

தொடர்ந்தும் இக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தினரால் காணி சுவீகரிக்கப்படுவது தொடர்பிலும், மீன்பிடியில் தென்னிலங்கை மீனவர்களது ஆதிக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது அதன் போது உரிய திணைக்களத்தலைவர்களின் விளக்கங்களைக் கேட்டறிய விடாது அவர்களை வாய் அடைக்கும் முகமாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனது கருத்துக்களை முன்வைத்து வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் காணி சுவீகரிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பூரணமாக கலந்துரையாடுவதற்கு நேரம் போதாமையாக இருந்ததினால் கால அவகாசம் தேவை எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர்வரும் மாதம் நவம்பர் 01ஆம் திகதி விசெட கூட்டம் ஒன்றினை நடாத்தி அதன் போது விரிவாக ஆராய்வதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம், ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார் ,சில்வேஷ்த்திரி அலன்ரின் ஆகியோரும் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராசா மற்றும் விநாயகமுர்த்தி ஆகியோரரும் பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் திருமதி விஐயலட்சுமி ரமேஸ், பிரதேச சபை தலைவர்கள், திணைக்களத் தலைவர், பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

http://www.saritham.com/?p=66409[/size]

நல்ல விஷயம் இதிலாவது ஒற்றுமைப் பட்டார்களே. இப்படி தமிழர் விசயத்தில் அனைவரும் ஒண்டா நிண்டால் நிறைய சாதிக்கலாம்

கருணாவின், பிள்ளையானின் நிலை நக்கிப் பிழைப்பு நடத்துபவர்களின் கண்களை திறந்தாள் சரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.