Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றுப்பெறாத தொடர் கதையாய்......அரசியல் கைதியின் உள்ளத்திலிருந்து....

Featured Replies

[size=4]தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்கும் சக்தியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரச தரப்பினரும் அதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகமும் முன்னிலைப்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது.[/size]

[size=4]இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தமிழர் தரப்புக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தருமா? என்ற வினாவுக்கு சிறைக்குள் இருந்து ஒரு கைதியின் எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்தக்கட்டுரை அமைகிறது.[/size]

[size=4]இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் போது,[/size]

[size=4]வரையப்படும் திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைமுறைச் சாத்தியமானதாகவும் உலக ஒழுங்குக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினரின் காயங்களை ஆற்றத்தக்கனவாகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். [/size]

[size=4]பெரும்பான்மை சமூகத்தவர்களால் சந்தேகத்துக்கு இடமின்றித் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பெறும் போது தமக்கு அநீதி இழைக்கப்படவில்லை என உணரவேண்டும்.[/size]

[size=4]மேலும் அநீதி நடைபெறாமல் இருக்க வகை செய்வதுடன் நடை பெறுகின்ற அநீதிகளுக்கு உடனடியான தீர்வும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம் புரிந்தவர்கள் மீதும் நடவடிக்கைகளும் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் இன வன்மம் தூண்டும் கருத்துக்களை பகிர்தல், செயற்பாடுகளை தூண்டுதல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.[/size]

[size=4](உ+ம்): குடியேற்றம், பௌத்த விகாரைகள் அமைத்தல், வேலைவாய்ப்பு, இன விகிதாசாரத்தை மாற்றுதல், முதலீடுகளுக்கான வாய்ப்பு, வளங்களை சூறையாடுதல்.இது வரையான காலப்பகுதியில் காலத்துக்கு காலம் ஏற்படுத்தப்பட்ட தீர்வுத் திட்ட முயற்சிகள் மேற்குறிப்பிட்ட முன் ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினாலேயே தோற்றுப் போயின. இந்த நிலையில் தற்போது பேசப்பட்டுவரும் தெரிவுக்குழுவின் நிலை பற்றி பார்ப்போம்.[/size]

[size=4]இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலப்பகுதியில் "சர்வகட்சிக்குழு'' என்று தீர்வுத் திட்டத்துக்கான ஓர் அமைப்பை ஏற்படுத்தி அக் காலத்தில் இருந்து சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில் தமிழர் தரப்பின் ஆயுத பலம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் "சர்வகட்சிக்குழு'' விவகாரமும் மறைந்து போனது. அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் 18 சுற்றுக்கள் அடிப்படைப் பேச்சுகள் நடைபெற்ற போது அதில் வழங்கப்பட்ட சாதாரண உறுதி மொழிகள் கூட நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்தும் படி வந்த அழுத்தங்களை சமாளித்து கால இழுத்தடிப்பு செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டதே "நாடாளுமன்றத் தெரிவுக் குழு''.[/size]

[size=4]இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அங்கத்தினர் யாவர் எனின் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கட்சி விகிதாசாரப்படி உறுப்பினர்கள் ஆள்சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது.[/size]

[size=4]இந்த குழுவில் இனவாத வாக்கு வங்கியின் காரணமாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அரசுக்குப் பலம் சேர்ப்பவர்கள் அரச அடிவருடிகளாகச் செயற்படுபவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உதிரிகளும் உள்ளடக்கம். குறிப்பிட்டு சொல்லப்போனால் சம்பிக்கரணவக்க, அத்துலியரத்தினதேரர், விமல்வீரவன்ஸ போன்றவர்களும், தமிழர்கள் இலங் கையின் பூர்வீககுடிகள் என ஏற்றுக் கொள்ளாதவர்களும் தமிழர்களுக்கு உரிமை தொடர்பான பிரச்சினைகள் எதுவுமே இல்லை, அபிவிருத்தியின் தேவை மட்டுமே உள்ளது என கூறும் டக்ளஸ் தேவானந்தா, வி.முரளிதரன் போன்றவர்களும் ஒரு சில உதாரணங்கள் ஆவார். [/size]

[size=4]இந்த நிலையில், குழுவில் உள்ளீர்க்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு இனப்பிரச்சினை தொடர்பான சீரிய பார்வை இல்லாமல் குறுகிய அரசியல் நோக்கங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறானவர்களின் மீது எப்படி தமிழர் தரப்பு நம்பிக்கை கொள்ளும். இதற்கு இந்த அரசின் பதில் என்ன? [/size]

  • [size=4]18.05.2012 அன்று தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் போது அவர்களது நிலைப்பாட்டை விளக்கி நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஓர் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தி இருந்தார். அதற்கு பதில் அளித்த சபை முதல்வர், "புலிகளுடன் அரசியல் தீர்வு தொடர்பான'' பேச்சுக்கு அரச தரப்பின் தலைவராக செயற்பட்ட அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா, புலிச்சந்தேக நபர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் சித்திரித்திருந்தார். அப்படியானால் அவர்கள் முன்னர் 2006 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பாக சர்வதேசத்தின் முன்னிலையில் பயங்கர வாதிகளிடம் பேசியது ஏன்?[/size]

  • [size=4]கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் மனிதாபிமானத்தை அதில் உள்ள நியாயத் தன்மையை விளங்கிக் கொள்ள முயற்சிக்காது அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். இது நல்லிணக்க செயற்பாட்டை கட்டி எழுப்பி தீர்வுத் திட்டமொன்றை பெற்றுத் தரக்கூடிய பொறுப்பான அமைச்சரின் பதிலா? [/size]

  • [size=4]பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாத கால அவகாசத்தினுள் ஒரு தீர்வை பெற்றுத் தருவதாக அறிவித்திருந்தார். இருந்தும் மாதம் மூன்று கடந்தும் அந்த உயரிய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நேர்ந்தது? இதற்கான பொறுப்புக் கூறுவது யார்?[/size]

  • [size=4]4வவுனியா சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பின்னர் காவலர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் மரணமடைந்த நிமலரூபன் என்ற அரசியல் கைதி தொடர்பாக மன்றில் கேள்வி எழுப்பிய போது, சிறைச்சாலை அமைச்சர் கஜதீர மாரடைப்பால் மரணமானதாக அதற்குப் பதில் கூறினார். பின்னர் அவரின் மரண விசாரணை இன்னமும் முடியவில்லை என்று தெரிவித்தார். ஒரு பொறுப்பான அமைச்சின் பொறுப்பற்ற பதில்களை வழங்கும் ஓர் இடமாக நாடாளுமன்றை மதிப்பிட்டுள்ளாரா? ஆனால் இதுவரை அந்தச் சம்பவம் தொடர்பாகவோ அவரின் மரணம் தொடர்பாகவோ எதுவித விசாரணைகளும் இடம்பெறவில்லை. இதற்கு யார் பொறுப்புக் கூறுவது?[/size]

  • [size=4]இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிறிதொரு நாளில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிமலரூபனின் மரணம் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்டபோது, அரசின் பிரதி கல்வி அமைச்சர், பயங்கரவாதி தொடர்பாக கதைப்பதற்கு இந்த மன்றில் நேரம் ஒதுக்க முடியாது என்று பதிலளித்து இருந்தார். எனினும் குறித்த கைதி நிமலரூபன் மூன்று வருடங்களாக வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிமன்ற தடுப்புக் காவலில் வவுனியா சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தனது கைதும் தடுத்து வைப்பும் சட்டத்துக்கு முரணானவை என ஓர் அடிப்படை உரிமை மீறல் வழக்கையும் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு பயங்கரவாதி என்ற முடிவை பிரதி அமைச்சர் எவ்வாறு எடுத்தார்? நீதிமன்றத்தின் வேலையை, தற்போது அமைச்சர்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்களா? அவர் சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமையை சரி என்று பிரதி அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரா? அப்படியாயின் நீதிமன்றங்களின் தேவை ஏன் நாட்டில் உள்ளது? இவரின் இந்தப் பதிலை சபாநாயகரும், ஏனைய அரச தரப்பினரும் வாய்மூடி மௌனியாக ஏற்றுக் கொண்டதால் அரசு இந்த நிலைப்பாட்டைச் சரி என்று ஏற்றுக் கொள்கிறதா? பின்னர் இந்த நாட்டின் நீதித்துறையின் தேவையும், சட்ட ஒழுங்குகளின் தேவையும் ஏன்?[/size]

  • [size=4]நிமலரூபனின் மரணத்தை தொடர்ந்து ஒழுங்கற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக கோமாநிலையில் இருந்த டெல்ருக்சன் என்பவரும் மரணமடைந்தார். இந்த நிலையில் அரசின் தமிழர் தரப்பு பிரதிநிதி என்று கூறிக் கொள்ளப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தில் ஜனாதிபதி மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்றும் இருவரது கொலைச் சம்பவங்களும் சரியானதே என்ற கருத்துப்பட தெரிவித்திருந்தார். இவர் தமிழர்களுக்கான பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் மனிதாபிமானம்மிக்க மனித உரிமைகளைப் பேணும் ஒருவராக செயற்படலாம் அல்லவா?[/size]

  • [size=4]மரணமடைந்த நிமலரூபனின் சடலத்தை யா எல பிரதேசத்தில் இருந்து எடுத்துச் செல்ல முடியாது என மஜிஸ்ரேட் நீதிமன்றால் தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விவாதிக்கப்பட்ட போது அவரின் உடலைப் பொறுப்பேற்க எவரும் வரவில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் வகையிலான உப்புச் சப்பற்ற பதில்களே நாடாளுமன்றில் அமைச்சர் கஜவீரவால் வழங்கப்பட்டது. இது எதை நோக்காகக் கொண்டு சொல்லப்பட்டது?[/size]

  • [size=4]வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் நடைபெற்று ஒரு சில தினங்களில் கருத்து தெரிவித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, 550 புலி உறுப்பினர்கள் சிறைச் சாலைகளில் ஈழக் கனவுடன் இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து வெளியிடப்பட்ட ஒரு சில தினங்களுக்கு முன்பே கைதிகள் தாக்கப்பட்டதுடன் அதில் இருவர் இறந்தும் பலர் அங்கவீனம் அடைந்தும் உள்ளனர். எனவே இந்தத் தாக்குதல் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. அமைச்சரின் பொறுப்பற்ற கூற்று தற்போதும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உலை வைப்பதாக அமையாதா? அல்லது அவ்வாறான தாக்குதலுக்கான தூண்டுதலா? இதை யாரிடம் எங்கே முறையிடுவது?[/size]

[size=4]போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நல்லிணக்க முயற்சிகளை தாம் அர்பணிப்புடன் செயற்படுத்துவதாக சர்வதேசத்திடம் பீற்றிக் கொள்ளும் அரசும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டிய உயர் சபையான நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாக முன்வைத்த கருத்துக்களில் சிலவே மேற்கூறப்பட்டவை.[/size]

[size=4]இவற்றை விட இயல்பு நிலையை தோற்றுவிக்க காணாமல் போனோர், மீள்குடியமர்வு, இராணுவ மயமாக்கல்..[/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8199338612117651[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.