Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீதி விதி முறைகளும் A9 வீதியும்.

Featured Replies

[size=3]

வீதி விதி முறைகளும் A9 வீதியும்.

கடந்தவாரம் சுமார் 30 முறை யாழுக்கும் கிளிநொச்சிக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.இதுவே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது.

A9 வீதி தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி விட்டது. இதனூடு நூற்றுக் கணக்கான வாகனங்கள் கொழும்பில் இருந்து யாழ் வழி இடங்களுக்கும். யாழ் மற்றும் வட மாகாணத்தில் இருந்து கொழும்பிற்கும் செல்கின்றன. எல்லோரும் அறிந்தபடி இங்கு நடை பெறும் விபத்துகளுக்கும் குறைவில்லை.

இது தொடர்ப்பாக எமது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் என்னால் சிந்திக்க முடிந்த பதில்களையும் உங்களுடன் பகிர்கிறேன்.

முதலில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் ஆராய்வோம்.

முதலில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் ஆராய்வோம்.

1.மஞ்சள் கோடும் பாத சாரிகளும்.

ஒரு பிரதான பாதையின் குறுக்கே இருக்கும் வரி வரி குறுக்கு நடை பாதை(zebra crossing) ஆனது பாதசாரிகளுக்கென பிரத்தியேகமாக உள்ளது. வீதி எவ்வளவு வாகன நெரிசலாக இருந்தாலும் எப்பொழுதும் மஞ்சள் கோட்டையே பயன் படுத்துங்கள். நீங்கள் வேறு பாதசாரிகளும் வரும் வரை காக்கத் தேவையில்லை. மஞ்சள் கோடு உங்களுக்கானது. வீதியை குறுக்கிடும் போது இருபுறமும் பார்த்து விட்டு வரும் வாகனத்திற்கு நிறுத்த சந்தர்ப்பம் அளித்து தயங்காமல் நேரே கடக்கவும்

சமிக்ஞை விளக்குடன் இருக்கும் குறுக்குக் கோடுகள் அற்ற பாதையில் நடக்கும் போது மிகக் கவனமாக இருங்கள். உங்களுக்கான நடக்கும் பச்சை மனிதன் விளக்கு வந்தால் மட்டுமே குறுக்கே செல்ல முடியும்.

2. மஞ்சள் கோடு இருக்கும் இடங்களில் அதனூடே கடவுங்கள். தற்சமயம் வீதி செப்பனிடும் தேவை காரணமாக மஞ்சள் கோடு இல்லை எனின் நீங்கள் மிகக் கவனமாக வீதியைக் கடக்க வேண்டும். கிளிநொச்சி A9 வீதி போன்ற இடங்களில் இருபுறங்களிலும் செல்லும் வாகனங்களை பிரித்து நடுவில் தீவுகள் உள்ளன. ஆகவே நீங்கள் ஒரு புற வீதியை கடக்கும் போது வாகனம் வரும் புறத்தையும் மறு புறம் கடக்கும்போது மீண்டும் திரும்பி அடுத்த பக்கத்தில் வரும் வாகனங்களயும் கவனித்தவாறே கடக்க வேண்டும். வீதியைக் குறுக்கிடும் போது எப்பொழுதும் வாகனங்களில் உங்கள் கண்களை வைத்திருங்கள். உங்களுக்கு உங்கள் உயிரின் தேவையை விட வாகனச்சாரதிகளுக்கு உங்கள் உயிரின் தேவை மிகச்சொற்பமே. ஆகவே ஒரு போதும் வாகனம் நிற்கும்தானே என்ற எதிர் பார்ப்புடன் வீதியைக் கடக்காதீர்கள். நின்றால் மட்டுமே கடவுங்கள்.

3.கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கு திரும்பும் போது மிக அவதானமாக இருங்கள்.

4. இருளில் பிரதான வீதியில் நடப்பதை முற்றாக தவிருங்கள்.

கட்டாயமாக செல்ல வேண்டி ஏற்படின் முடிந்தவரை வெள்ளை ஆடைகளை அணியுங்கள். முடிந்தால் உயர் காணும் திறன் (high visibility jackets- வீதித் தொழிலாளிகள் வேலையின் போது அணிந்திருக்கும் மேல் அங்கி) கொண்ட மேலாடையை பயன் படுத்துங்கள்.

5. தயவு செய்து பிரதான வீதியில் மதுபோதையில் நடப்பதைத் தவிருங்கள். இதானால் உங்கள் உயிர் மாத்திரம் அல்லாது வீதியில் வரும் அத்தனை வாகனங்களில் உள்ள பயணிகளின் உயிர்களும் ஆபத்துக்குள்ளாகும்.

துவிச்சக்கர வண்டிப் பயணிகளும் A9 வீதியும்.

A9 வீதி எப்போதுமே துவிச்சக்கர வண்டிகளுக்கு அனுதாபத்தைக் காட்டியதே இல்லை என்பது மிகக்கவலையான விடையம். சரி இதையும் தாண்டி நாங்கள் எப்படி எங்களை காப்பாறிக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

1. துவிச்சக்கர வண்டிகளில் எப்போதும் "tail lights" ஐ உபயோகியுங்கள். அது உங்களிற்கு பின் வரும் வாகனங்கள் வெகு தூரத்திலேயே உங்களை அடையாளம் கான உதவும்.

2. இரவு நேரங்களில் பிரதான வீதியை தவிருங்கள். இரவு நேரங்களில் சமாந்தரமாக இருவர் அல்லது மூவர் செல்வது விலை கொடுத்து உங்கள் உயிரைக் கொடுப்பது( சொந்தக்காசில் சூனியம்) போன்று முட்டாள் தனமானது. மின் விளக்குகள் இல்லாமல் பிரதான வீதியில் செல்லாதீர்கள்.

3. கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கு வரும்போது மிக மிக மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். கிளை வீதி முனைக்கு வந்ததும் வண்டியை நிறுத்தி, பிரதான வீதியை அவதானித்து பின் பிரதான வீதிக்குள் புகுவதே நியமமானது.

பல விபத்துக்கள் இந்த சந்தர்ப்பதில் நிகழ்ந்திருப்பது சோகமானது.

4.உயர் காணும் திறன் (high visibility jackets- வீதித் தொழிலாளிகள் வேலையின் போது அணிந்திருக்கும் மேல் அங்கி) கொண்ட மேலாடையை பயன் படுத்துங்கள்.

5. தயவு செய்து பிரதான வீதியில் மதுபோதையில் ஓடுவதை தவிருங்கள். இதானால் உங்கள் உயிர் மாத்திரம் அல்லாது வீதியில் வரும் அத்தனை வாகனங்களில் உள்ள பயணிகளின் உயிர்களும் ஆபத்துக்குள்ளாகும்.

மோட்டார் உந்துருளியும் பாதுகாப்பும்.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரித்துவிட்டது.

அதே போல் அவை தொடர்பான விபத்துக்களும் இமாலய அதிகரிப்பை காட்டுகிறது. இவ்விடயம் தொடர்பாக எம்மால் என்ன செய்ய முடியும் எனப் பார்ப்போம்.

1. A9 வீதியில் மோட்டார் சைக்கிள் பயணம் என்பது கரணம் தப்பினால் மரணம் போன்றது. இரண்டு சக்கரத்தில் அவ்வளவு மிக வேகமாகச்செல்வதென்பது உசிதமில்லை. 80 Km/h வேகத்தில் 2 வினாடி கவனம் தப்பினால் எலும்பைக் கூட பொறுக்க முடியாது.முக்கியமாக A9 வீதியில் உள்ள வளைவுகள் அதி உயர் வேகத்திற்கென design பண்ணப்படவில்லை. ஒவ்வொரு வளைவும் ஆகக்கூடியது 50Km/h ஐவிட குறைந்த வேகத்திலேயே அணுகப்பட வேண்டும்.குறிப்பாக ஆணையிறவில் இருந்து முகமாலை வரையான இடப்பகுதி அதிக வளைவுகளைக் கொண்டது. வளைவுகளில் break இனை பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

2. ஒவ்வொரு வாகனத்தை கடக்கும்போது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

சிறிது வெளியில் வந்து எமக்கு முன்னே செல்லும் வாகனத்தின் நீளத்தை அனுமானித்து , வேறும் வாகனங்கள் முன்னால் அருகருகே செல்கின்றனவா என அவதானிக்க வேண்டும். ஆகக் குறைந்தது 100m ஆவது முன்னால் உங்களால் பார்க்க முடியாதெனின் முந்திச் செல்வதை கட்டாயமாக தவிருங்கள். வளைவுகள் தொடர் வெள்ளைக் கோடுகள் இருக்கும் இடங்களில் முன்னே செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும். இது மிக மிக அபாயமானது.

பொதுவாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஒரு வாகனத்தைக் கடக்கும் போது சத்தம் செய்து அல்லது flash விளக்கை போட்டு காட்டிவிட்டு முன்னே செல்லலாம். எங்களில் பலர் தவறாக flash light ஐ பயன் படுத்துகிறோம். flash light என்பது முன்னே செல்லும் வாகனத்தை எச்சரிப்பதற்கே தவிர, முன்னே வரும் வாகனங்களை எச்சரிப்பதற்கல்ல. ஒரு போதும் வாகனம் ஒன்று முன்னே வந்து கொண்டு இருக்கும்போது முந்திச் செல்ல எத்தனிக்கக் கூடாது. பொறுமை மிக மிக மிக அவசியம். வாகனத்தின் முந்திச் செல்லும்போது முடிந்தவரை break ஐ பாவிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

3 higher beam lights அல்லது flash light இனை ஒருபோதும் சாதரணமாக பாவிக்கக் கூடாது. உங்களால் நீண்ட தூரம் பார்க்க முடியாதெனின் மெதுவாகச் செல்லுங்கள். flash light உங்கள் முன்னால் வரும் சாரதியின் பார்வைத்திறனை பாதிக்கும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.

4. இரவு நேரப்பயணங்களின் போது அதிக வேகத்தைத் தவிருங்கள். அதிகாலை வேளையிலும் இரவு வேளைகளிலும் கட்டாக்காலி நாய்களும் வேறு மிருகங்களும் வீதியில் அலையக்கூடும். ஒரு நாய் அல்லது மாடு மேல் வேகமாக அடி பட்டால் எமக்கு உயிரிழப்பு வருமளவுக்கு அபாயம் உள்ளது. மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

அடுத்தது வீதிச் செப்பனிடும் இடங்கள் தொடர்பான இடர்பாடுகள்.

சில காரணங்களுக்காக வெளி நாடுகளில் சென்று நன்றே சட்டத்திற்கு உற்பட்டு உழைக்கும் எமது சக குடி சார் பொறியியலாளர்களால் உள்ளூரில் எம்மக்களின் உயிரை மதிக்கத் தெரியவில்லை. மேலதிகாரியின் உத்தரவுக்கு அப்பால் அவர்களிற்கென ஒரு சமூகப் பொறுப்பு இருப்பதை உணர்வது வெகு சிலரே. ஒவ்வொரு நாள் வேலை முடிந்தவுடனும் வீதி சமிக்ஞைகள் மீள வைக்கப் படுவதில்லை. நடு வீதியில் ஒரு பெரிய குழியை வெட்டி விட்டு குழியின் விளிம்ம்பில் ஒரு plastic band ஐ கட்டி விடுவதால் அவர்களால் என்னத்தை செய்ய முடிகிறதோ இல்லயோ பல சாரதிகளை அவர்களின் கண்ணியில் வீழ்த்த முடிகிறது. இது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை அவர்கள் முன்பே அதுபற்றி படித்ததில் இருந்து அறிவார்கள். அவற்றை சரியாகக் கடைப் பிடிப்பார்கள் எனின் பல உயிரிழப்புகளையும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.

இனி மகிழூந்து (car) தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வோம்.

பொதுவாக நான்கு சில்லில் செல்லும் வாகனங்கள் அதிக பாதுகாப்பு உடையவை. ஆனால் அவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு வாகனத்துடன் போட்டிக்கு ஒடுவதாலோ அல்லது மோட்டார் சைக்கிள் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களை

அனுசரித்து செல்லாமல் விடுதலால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மோட்டார் காரில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மோட்டார் சைக்கிள் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதால் அடுத்த பகுதிக்கு செல்வோம்.

பொதுவாக எமது சாரதிகளின் பொதுப் பிரச்சனைகளை ஆராய்வோம்.

1. சாரதிகள் வீதிக்கு வந்ததுமே ஒரு tension உடனே செல்கிறார்கள். வீதியில் வாகனம் ஒடுவதை அனுபவித்து ஒடுவதில்லை. மற்றையவர் பிழையாக ஒடினால் நானும் பிழையாக ஓடுவேன் எனபது மிகத்தவறான கூற்று. இதனால் வீதி ஒழுங்கு பாதிக்கப் படுவதோடு சாரதிகளும் வீண் மன அழுத்ததிற்கு உள்ளாகிறார்கள். அதன் தாக்கம் சக பயணிகளையும் இதர வாகனங்களையும் பாதிப்பதை ஏனோ அவர்களால் உணரமுடியவில்லை.

2. ஒரு நல்ல சாரதி என்பவர் எவ்வளவு வேகமாக அவரால் செல்ல முடியும் என்பதால் தீர்மானிக்கப் படுவதில்லை. தனது விவேகத்தால் எத்தனை விபத்துக்களை அவர் தவிர்த்திருகிறார் என்பதாலும் எவ்வளவு வீதி ஒழுங்குகளை அனுசரித்து நடக்கிறார் என்பதிலேயும் மாத்திரமே தங்கி உள்ளது. சாரதிகள் வேகமாக செல்ல விரும்பினால் அவர்கள் செல்ல வேண்டிய இடம் racing track ஏ தவிர பொது வீதி அல்ல.

3. ஒரு சாரதி மெதுவாகச் செல்வதால் கிடைப்பதாக நினைக்கும் மரியாதைக் குறைவை விட அவர் வேகமாகச் சென்று விபத்தில் ஏற்படும் இழப்பு அல்லது மரியாதைக் குறைவு எபது பல மடங்கு அதிகம்.

4.எப்போதும் அடுத்த சாரதியை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு விட்டுத் தந்தால் நன்றி சொல்லுங்கள். சிரித்த முகத்துடனே வண்டி ஓட்டுங்கள். அவர்கள் தவறு செய்தாலும் உங்களால் முடிந்தவரை கோபப் படுவதைத் தவிருங்கள். [/size][size=3]

வல்லுனர் வட்டத்திற்காக( for profesional forum) மகேந்திரன் பிரதீபன்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.