Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதானால் ....அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் இந்தியா பொறுப் பேற்க வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tna_india_CI.jpg

[size=3][size=4]இந்தியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை நாட்டுக்குத் திருப்பியனுப்புவதானால் அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் இந்தியா பொறுப் பேற்க வேண்டும். இவ்வாறு பொறுப்பேற்பது தொடர்பான ஒரு விசேட அறிவித்தலையும் இந்திய அரசு விடுக்க வேண்டும். அதற்கான ஒரு செயற்திட்டம் உருவாக்கப்பட்டு உறுதி மொழி வழங்கப்பட்ட பின்பே ஈழ அகதிகள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட வேண்டும் என இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தள்ளது.[/size]

[size=4]கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை மிக நல்ல செயற்திட்டம் எனக் கூறிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன், இது குறித்து இந்திய மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுடன் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றனர். இவர்கள் நேற்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்துக் கலந்துரையாடினர். [/size]

[size=4]இந்தச் சந்திப்பு நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை நீடித்தது. இந்தியாவில் முகாம்களில் வசிக்கும் ஈழ அகதிகள் விவகாரம் குறித்து இந்தச் சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.[/size]

[size=4]இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் ஒரு முறையான செயல்திட்டம் தேவை. அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதானால் அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம், வாழ்விடம் உட்பட அனைத்து வசதிகளையும் இந்தியா பொறுப்பெடுத்து செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும். [/size]

[size=4]இதற்கென செயல்திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து உருவாக்கி செயற்படவேண்டும். செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அது தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படவேண்டும். [/size]

[size=4]அதன்பின்னரே அங்குள்ள அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பாதுகாப்பு ஆலோசகர் மேனனிடம் வலியுறுத்தினார்[/size]

[size=4]'இதற்கு மேனன், இது ஒரு நல்ல செயல்திட்டம். இது பற்றி நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். இந்திய மத்திய அரசுடனும் தமிழக அரசுடனும் கலந்து பேசி இது குறித்து சாதகமாக ஆராய்வோம் என்று பதிலளித்தார்'' இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் உதயனிடம் மேலும் கூறினார். [/size]

[size=4]'இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்தும் அக்கறை செலுத்தப்பட்டது. இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இது குறித்து பேசுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு ஆலோசகர் எம்மிடம் கூறினார்.[/size]

[size=4]அத்துடன் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு, காணி அபகரிப்பு பிரச்சினைகள் குறித்தும் மேனனிடம் எடுத்து விளக்கினோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டமைப்பும் இந்தியாவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏற்கனவே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எம்மிடம் கோரியிருந்தார். [/size]

[size=4]அந்தக் கோரிக்கையை நேற்று மேனனும் முன்வைத்தார். அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்தோம் என செல்வம் அடைக்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.