Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறார்களின் நெருக்கடிகளை நிவர்த்திற்பதற்கு அரசாங்கம் செயற்படவேண்டும் - யுனிசெப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

unicef.jpg

[size=3][size=4]நாட்டில் உள்ள சிறார்களின் நெருக்கடிகளை நிவர்த்திற்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.[/size]

[size=4]சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சில செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரீன் ஹல்ஷொப், நேற்று அலரிமாளிகையில் சிறீலங்கா அதிபர் மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், சிறார்களுக்கான போஷாக்கின்மையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்பொருட்டு தமது அமைப்பும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுனிசெப்பின் தெற்காசிய பணிப்பாளர், தற்போது தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறார்களுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார முன்னெடுப்புகளை ஆராயும் விதமான விஜயங்களை மேற்கொண்டு வருகிறார்.

எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறார்கள் பாலியல் ரீதியாக மிக மோசமான முறையில் நடாத்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இலங்கையை பாராட்டிய யுனிசெப்[/size]

[size=2]

[size=4]01(720).jpg

கிராமிய சமூகங்களின் சமூகநல மேம்பாட்டுக்கான இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரின் ஹல்சொப், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சிறுவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக சிறுவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைத்தல் மற்றும் கிராமப்புற குழந்தைகளின் சுகாதார மேம்பாடு குறித்து அவர் ஜனாதிபதியிடம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளில் சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார முன்னெடுப்புக்களை ஆராயும் வகையில் கெரின் ஹல்சொப்பின் இலங்கைக்கான விஜயம் அமையப்பெற்றுள்ளது.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரெஸ் ஹொஸ்ஸய்னி, ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

02(587).jpg[/size][/size][size=2]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/50423-2012-10-13-13-13-29.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.