Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினரின் இந்திய விஜ(ய)த்தால் உடனடிப்பலன் பெற்றவர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினரின் இந்திய விஜ(ய)த்தால் உடனடிப்பலன் பெற்றவர் யார்?

[sunday, 2012-10-14 10:23:03]

தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்த போது முதலில் வெளி வந்தது ஆல கால விஜமே. அதன் பின்னரே அமுதம் கிடைத்தது. அதையும் மாறு வேஜதார அசுரன் ஒருவன் பெற்று உட்கொண்டதால் கிருஸ்ணாவின் அகப்பை வெட்டால் இருவர் தோன்றினரென கிழக்கின் அன்றைய அந்தப் புராணம் விரிந்து செல்கிறது.

புராணம் என்பது புராதன காலத்தில் இது நடந்தது என்பதாகும். இவ்வாறே இதிகாசம் என்றால் இது தான் கதை என்ற பொருள்படும். இது ஒரு புறமிருக்க இந்த இந்தியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை கூட்டமைப்பினரும் மகிந்த அரசும் இந்தியப் பயணங்கள் என்ற மத்துக்களால் கடையும் இன்றைய 'பேச்சு வார்த்தைப் புராணம்' தொடர்கையில் இன்றைய இந்தியக் கிருஸ்ணா பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றுரைத்துள்ளார். இவர் கூறும் இந்த எல்லையில் தோன்றியதே இளைஞர்களின் ஆயுதத் தற்காப்புப் போராட்டம்.

அதற்கு அனுசரனையும் பயிற்சியும் வழங்கியதும் இதே இந்தியா என்பதும் பழைய புராணந்தான். அடுத்தபடியாக சிறீ லங்கா அரச தலைவர் இந்தியா செல்லும் போது இந்தியா கறுப்புக் கம்பளத்தையா விரிக்கப்போகிறது? அல்லது மனமே மோகனமான சங்கம் மகிந்தவைப் பார்த்து கர்ஜ்சிக்கவா போகிறது. தனக்கு சத்தம் போட்டுப் பேசக் கூடத் தெரியாதென்ற டாக்டர் மன் மோகன் சிங் கூட்டமைப்பினரை பிரணாப் முகர்ஜியை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நம்பலா எனவே சிறீ லங்காவின் ஒருமைப்பாட்டிலும் இறைமையிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது என்ற சிறப்புத் தூதர் ஜி பார்த்தசாரதிக் காலப் புராணத்தைத் தானே இந்தியா மீண்டும் பாடவுள்ளது.

உங்கள் 1972 இல் மாற்றப்பட்ட குடியரவு அரசியலமைப்பு முறையற்றது. அதையொட்டி எழுந்த இன்றைய சிறீ லங்கா அரசியலமைப்பும் நியாயமற்றது என்று இந்திய அதிகாரிகள் கூறவா போகிறார்கள்? எனவே இந்த பழைய மகா வம்ச கால அரசியலமைப்பின் உள்ளோ அன்றில் அதன் அரசியல் அமைப்பு பாராளுமன்றம் சிஙகள மக்களின் சம்மதம் என்ற இந்த நாற் கோட்டுப் பெட்டிக்குள்னோ எந்த முடிவையும் எட்டவே இயலாது என இந்தியா கூறவா போகிறது? ஆக இந்தியா சிறீ லங்கா தமிழர் கூட்டமைப்பு என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் இந்த முக்கோண ராஜ தந்திர நகர்வினால் தனது முதற் தேவையை உடனடியாக நிறைவேற்றிக் கொண்டது இந்தியா மட்டுந் தான்.

ஈழத் தமிழர் இனப்பிரச்சனையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக உள்ள கூட்டமைப்பினர் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் நின்று அதனுடன் ஒத்தியங்கி ஒரு சுமுகமான முடிவை சென்றடைய இணக்கம் தெரிவித்துள்ளனர் என்பது மகிந்தவிற்கு போதுமானதாகும். அவர் இதை வைத்தே உலகெலாம் சென்று இந்தியா உத்தரவாதத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் தொடர்கையில் மேற்குலக மற்றும் ஐ நா தலையீடு அவசியமில்லை என்று வலியுறுத்துவார். ஐ நா இதற்கிடையில் மூக்கை நுழைத்து இந்த இந்திய அனுசரணை நகர்வை குழப்பக்கூடாது என்றும் அவர் கூறக் கூடும். இதற்கு சமாந்தரமாக சீனாவும் இதனை உள்ளக அல்லது பிராந்திய மயப்படுத்தினால் மேற்குலக ஐ நா நகர்வை பலவீனமாக்கலாம் என மகிந்த சிந்திக்க வழியேற்பட்டுள்ளது.

எனவே அடுத்த கட்ட வெற்றி மகிந்தவிற்கு என்றால் கூட்டமைப்போ தமிழரோ பெற்ற நன்மை தான் என்ன? கூட்டமைப்பின் விளக்கத்தை கேட்டு இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டது என்றால் அது தமிழர் தரப்பின் வெற்றியாகலாம். அதாவது கூட்டமைப்பினர் சிறீ லங்காவில் 1972 இல் இடம் பெற்றது அரசியலமைப்பு மோசடி ( Constitution Fraud) என்பதை விளக்க முயன்றிருந்தால்க் கூட அது அர்த்தமுள்ள பேச்சாக இருந்திருக்கும். மாறாக கூட்டமைப்பினர் ஜனநாயக வழியில் புலிகளின் இலக்கை எட்டப் பாரக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அஞ்சி மௌணித்து வந்திருந்தால் அதாவது தனிவழி என்ற முடிந்த முடிவு புலிகள் எடுத்த முடிவல்ல அது வட்டுக் கோட்டையின் வழி என இவ்வளவு காலமாக யாரும் சரியான முறையில் உலகிற்கு தெரிவிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இந்த இடத்தில் பதிற் கருத்தாக மின் அஞ்சல் வழி வந்த ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். எனது கடந்த கூட்டமைப்பை சு10னியத்துள் தள்ளுகிறதா இந்தியா? ஏன்ற கட்டுரை தொடர்பாக அனுப்பப்பட்டிருந்த அந்த அஞ்சல் உங்கள் கருத்தக்களை புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்காத போதும் இந்திய பத்திரிகை ஒன்று அதையொட்டி பதில் எழுதினாற் போல் தலையங்கம் தீட்டியிருந்தது என எழுதியிருந்தார்.

நல்லிணக்கத்திற்கு அழைக்கப்பட்ட அரசியல் அமைப்பை ஏற்று எம் பீக்களாக இருக்கும் எவரும் நாங்கள் எழுதுவதைப் போல் பகிரங்கமாக அரசியலமைப்பிற்கும் பாராளுமன்றத்திற்கும் எதிராக எழுதவோ பேசவோ முடியாது தான். பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு போக மாட்டோம் என்று விட்டு பாராளுமன்றத்திற்கு மட்டும் போவது அர்த்தமுள்ளதாகவும் இராதல்லவா. எனவே இப்படியான பணிகளைச் செய்து அழுத்தம் கொடுப்பதும் ஒரு தேசத்தின் அல்லது இனத்தின் ஊடகத்தின் கடமையாகும். தவிர இது கூட்டமைப்பினரிற்கான எதிர்வாதமல்ல. முதலில் விஜம் வந்தாலும் பின்பு வருவது அமுதமாக இருந்தாற்சரி. இதனுடாக எனது தலைப்பு கூட்டமைப்பின் இந்திய விஜயத்தை இந்திய விஜம் என்று கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதாவது மௌணம் சம்மதம் என்று கருதப்படாதவரை...

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்த இடத்தை மனதிற் கொண்டே அன்றே தமிழர் சுய நிர்ணய உரிமையையும் தேசிய இனம் என்ற அங்கீகாரத்தையும் கேட்டார் என்ற அளவிற்கு தமிழர் தரப்பு உடனடியாகப் போகாவிடினும் அரசியல் அமைப்பு பாராளுமன்றம் போன்றனவற்றின் பெட்டிகளிற்கு வெளியே கிடக்கும் நியாயமான ஒரு தீர்வு என்ற தொணியில் கூட்டமைப்பினர் பேசியிருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தான் வேறு வழிகளிலும் தீர்வை எட்டலாம் என்று கூறியிருந்தால் அது பராட்டிற்குரியது. அல்லாது இந்தியா மீது அதீத விசுவாச நம்பிக்கையை யாராவது வெளியிட்டிருந்தால் அது மடமை நிறைந்ததாகும். பாராளுமன்றத் தெரிவிக் குழுவிற்கு இந்தியா உத்தரவாதம் அளித்தால் செல்வோம் என்று அதே பழைய புராணத்தை மட்டும் பாடியிருப்பதாக தெரிகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தமே இந்தப்பாடு படும் போது ஆயிரம் உத்தரவாதங்களை யார் வேண்டுமென்றாலும் வழங்கலாம். அதனை நம்பி கூட்டமைப்பு பேசச் செல்லது அதாவது ஐ நா கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வர முன் பேசச் செல்வது ஆரோக்கியமான முடிவல்ல. வேண்டுமானால் சிறீ லங்காவின் பிரதிநிதி ஐ நா மன்றில் பிரேரணை வரும் போது வேண்டுமானால் இதே உத்தரவாதத்தை உத்தியோக ப10ர்வமாக உலகிற்கே வழங்கலாம். ஏனென்றால் "போர் முடிந்து விட்டது" என மாநில முதல்வர் ஒருவரிற்கு பொய் உரைத்த ஒரு மத்திய அமைச்சர் ஒருவர் தான் இன்றைய இந்திய ஜனாதிபதியான உள்ளார். இந்த ஜனாதிபதி தான் ராகுலோ அன்றில் வேறு யாராவது ஒரவரோ பிரதமராகும் போது பொம்மையை ஆட்டும் பின் புலப் பிரதானியாக இருக்கப் போகிறார். எனவே உத்தரவாதம் என்பது ஐ நா வில் வழங்கப்பட்டால் ஏற்கலாம் என மதிப்பிற்குரிய திரு சுமந்திரன் அவர்கள் மாற்ற மாட்டார்களா என்பதே இனறைய இந்தக் கட்டுரையின் பணிவான கோரிக்கையாகும்.

இதன் மூலம் உத்தரவாதத்தை இந்தியாவிற்கும் வெளியே வைத்திருப்பது பல வழிகளிலும் ஓரளவாவது ஆரோக்கியமானதாக இருக்கும் அல்லவா? நம்பியார்களையும் அசோகன்களையும் வைத்திருக்கும் இந்தியாவை இனியும் அதுவும் உடனடியாக நம்பி மீண்டும் கூட்டடைப்பும் சு10னியத்துள் செல்ல வேண்டுமா என்பதை கூட்டணி அபிமானிகள் தலைமைகளிடம் கேட்பார்களாக. இதற்கிடையில் அரசியல் அமைப்பிற்கு எதிராக பேச கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை என்று சிறீ லங்கா அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டமைப்பிற்கு மட்டுமல்ல பாராளுமன்றத்திற்கும் அரச தலைவரிற்கும் உயர் நீதி மன்றத்திற்கும் கூட அதிகாரம் இல்லைத் தான்.

அப்படியாயின் சுதந்திர இலங்கையின் சோல்பரி அரசியல் அமைப்பில் மாற்ற இயலாத சரத்துக்களை எதிர்த்து நீக்கியவர் யார்? அதற்கு தேர்தல் வாயிலாக சிஙகள மக்கள் 1970களில் ஆணை வழங்கியிருந்தார்கள் என்பது பதிலாயின் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணை செல்லுபடியற்றதா? எனவே சிலரின் பிரமைப்படி இந்தியாவை ப10ரணமாக நம்பாது இந்திய உத்தரவாதத்தை ஐ நா வில் சிறி லங்கா உத்தரவாதம் வழங்கிய பின் பேச வருகிறோம் என கூட்டமைப்பினர் இரகசியமாக இந்தியாவிற்கு சொல்லியிருப்பார்கள் என்றும் பகிரங்கமாக அழுத்தங்களைக் கொடுங்கள் என்று சிறு பிள்ளைகளைப் போல் பகிரங்கமாகக் கூறியிருக்க மாட்டார்கள் என்றும் நம்பினால் கொஞ்ச நாட்களிற்காவது நிம்மதியாக தமிழராகிய நாங்கள் தூங்கலாம் தமிழ்த் தாயே. முடிவாக எங்கே தமிழர் நிம்மதியாக வாழ இயலுமோ அங்கே தமிழர்களிற்கு ஒரு இடம் வேண்டும்.

-Poonakaran Kuhathasan -

http://seithy.com/breifNews.php?newsID=68353&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Louise Arbour* of ICG: speaks about tens of thousands of Tamil civilians killed deliberately and intentionally. Evidence this would implicate top government  and military leaders. Calls for International investigation but says Tamils should remain in Sri Lankan state & renounce LTTE methodology & separatism. http://www.colombotelegraph.com/index.php/louise-arbour-on-sri-lanka-and-tamil-eelam-2010/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.