Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 22, 2012 AT 09:42

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார்.

புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தன.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிர\ன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமர் முக்கிய \ந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுவதாகத் தெரிகிறது.

13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தான இந்திய மத்திய அரசின் கோரிக்கை, வடபகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது போன்ற விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் ஆராய்வார் என்று உயர்மட்ட இந்திய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.திர்வரும் புதன்கிழமையளவில் கோத்தபாய இந்தியா செல்வாரென தெரிவிக்கப்படுகிறது.

http://thaaitamil.com/?p=36202

[size=4]மேனன் தலைமயிலான குழு தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறினால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்கு ஆளாகலாம். [/size]

எல்லாவற்றுக்கும் காலம் தாழ்ந்து விட்டது. இதில் இந்தியா மட்டும் அல்ல. மேற்கு நாடுகளுமே அணில் ஏறவிட்ட நாய்கள் தாம்.

இனி இராணுவ நடவடிக்கை ஒன்றுதான் இலங்கையில் எடுபடும். அதை இந்தியா செய்யாமல் சர்வதேசம் செய்ய வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது

பலி ஆட்டை சாமிகிட்ட கொடுத்து வாங்க வேண்டிய வரம் என்னதெரியுமா..? 13 சட்டத்திருத்திற்கு அப்பால செல்லுறம் .. அதனால ரத்து செய்யுறம்.. அதைவிட என்ன உரிமை என்று கடவுளுக்கே தெரியாது.. அதான் சிங்களன் டேலண்ட்...

டிஸ்கி:

குச்சி மிட்டாய் சப்புறவங்க சப்பிட்டு திரியணும்.. ஐ மீன் கிந்தியா தீர்வை பெற்று கொடுக்கும் என நினைக்கிறவைங்க.... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.