Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணெய் வளம், இனப்படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/302713_10151074181917377_70429488_n.jpg

இல கோபால்சாமி

Subscribe · 2 hours ago

சமீபத்தில் கிருஷ்ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்ஸ் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது தங்களுக்குத் தெரியும். அது இந்தியாவின் எரிவாயு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளதும் அறிவீர்கள்.

வட இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி ´காவேரி டெல்டா பேசின்´ எனப்படுகிறது. நமது ராமர்(!) பாலத்திற்கு மேலே உள்ளது காவேரி பேசின், கிழே உள்ளது மன்னார் பேசின். இங்கே படிமப் பாறைகளில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதற்கான வேலை 1970 களில் ரசிய எண்ணை நிறுவனம் மூலமாகத் தொடங்கியது. பின் 1980 களின் தொடக்கத்தில் துளையிடப்பட்ட ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் தொடர்ந்து தோல்வியைத் தர, முயற்சி சற்றே தள்ளிப் போடப்பட்டது.

பின்னர் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் பரப்பில் ஆய்வுகள் செய்யப்பட்டன. எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் கடல் பரப்பு வகுக்கப்பட்டு பல்வேறு எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. அதில் முக்கியமான நிறுவனம் எடின்பர்கில் இருந்து இயங்கும் ´கெய்ன்ஸ்´ நிறுவனம். கெய்ன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ´கெய்ன்ஸ் இந்தியா´ என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் எண்ணெய் வளத்தைக் கண்டுபித்துள்ளது.

அதே கெய்ன்ஸ் நிறுவனம் இலங்கையில் ´கெய்ன்ஸ் லங்கா´ என்ற பெயரில் நிறுவி இயங்கி வருகிறது. கெய்ன்ஸ் லங்கா 2011 ஆம் ஆண்டில் இரண்டு ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. அதில் அதிக அளவில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தகட்ட ஆய்வுகளை 2012 -13 ஆண்டுகளில் மேற்கொள்ள ஆயர்தமாகி வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எண்ணெய் வளம் ஒரு பில்லியன் பாரல் எனக் கண்டக்கிடப்பட்டுள்ளது . இன்னும் கண்டுபிடிக்கப் படாத எண்ணெய் வளம் மிக அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது.

எரிசக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிற காரணத்தினாலும், உலகின் எண்ணெய் தேவை வளைகுடா நாட்டை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என சில சக்திகளால் எடுக்கப் பட்ட முயற்சியினாலும், தற்போதெல்லாம் எண்ணெய் வளம் எங்கிருந்தாலும் அதாவது கடலில் இருந்தாலும், எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதற்கும், எடுப்பதற்கும் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன.

ஒருவேளை அதிக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப் பட்டால் இலங்கை புருனே போலவும், ராசபக்சே புருனே சுல்தான் போலவும் ஆகிவிட வாய்ப்புண்டு! அதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை... இங்கே புதிய கோணத்தில் அணுக வேண்டிய சில விடயங்கள் உள்ளது.

1. இந்த எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தையும், ஈழப் போராட்டம் நடைபெற்ற காலத்து நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் இதன் பங்கும் ஓரளவேனும் இருக்கக் கூடும்.

2. முக்கியமாக, நமது தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர். எதனால் நட்பு நாட்டின் மீனவர்களைக் கொல்ல வேண்டும்? சிறைபிடித்து துன்புறுத்தி அனுப்பினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.. கொலை செய்தால்?? ஒருவேளை எண்ணெய் வளம் மிக்க பகுதிகளில் அத்துமீறி நுழைந்துவிடக் கூடாது, ஆய்வுப் பணிகளில் இடையூறு வரக் கூடாது என்பதற்காகவா?

மீனவர்கள் செல்வதால் எப்படி ஆய்வு பாதிக்கும் என நீங்கள் கேட்பது புரிகிறது. கடல் ஆய்வு செய்யும் முறை அறிந்தவர்களுக்குப் புரியும். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்களுக்குப் பின்னால் பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு நுன்கருவிகளை சென்சார்களைக் கட்டி இழுத்துச் செல்வர். கடல் மீதிருந்து ஒலி அலைகளை அனுப்பி பூமியின் அடி ஆழத்தில் (5 -6 கிமீ ஆழம்) இருந்து பாறைகளில் பட்டு எதிரொலிக்கும் நுண்ணிய ஒலிகளைப் பதிவு செய்வர். அப்போது கடல் பரப்பில், அருகாமையில் ஏதேனும் சிறிய மோட்டார் படகுகள் வந்தாலும் அதன் ஒலி பதிவாகிவிடும். இது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது இப்போதே தனது வளப் பகுதிகளை கடலில் வேலி போட்டு பாதுகாத்துக் கொள்கிறான் போலும். பிறகென்ன! தண்ணீர் கிணற்றிற்கே வேலி போட்டு காவலுக்கு ஆள் வைக்கிறபோது, எண்ணெய் கிணறுக்கு காவல் வைக்கமாட்டானா?

3. அடுத்தது, எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்த கெய்ன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை லண்டனில் இருந்து இயங்கும் வேடான்த்தா நிறுவனம் 8 .7 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி இந்திய ரூபாய்! இது இலங்கையின் ஓராண்டு எண்ணெய் இறக்குமதி செலவை (3 பில்லியன் டாலர்) விட மூன்று மடங்கு அதிகம் எனலாம்.

இத்தகைய அசுர பணபலம் கொண்ட வேடாண்டா நிறுவனம் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தையும் நடத்துகிறது. அதை எதிர்த்துதான் எந்தவித சமரசமும் இன்றி வைகோ நீதிமன்றத்தில் போராடி வருகிறார். இதே நிறுவனம் தான் ஒரிசாவில் அலுமினிய ஆலை அமைத்தது, அதை எதிர்த்து டோங்க்ரி பழங்குடியினர் போராடி வருகின்றனர்.

4. ஒருவேளை அதிக எண்ணெய் எடுக்கப்பட்டால் இந்தியாவின் எண்ணெய் தேவைக்கு இலங்கை உதவ வேண்டி நிலை வரும். அதுகூட இன்றைய அரசு இலங்கைக்கு ஜால்ரா அடிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலே உள்ள வரைபடத்தில் சீனாவுக்கும் சில உரிமங்கள் வளங்கப்படுள்ளதைக் காணலாம். சீனா இங்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எண்ணெய் வளங்களை சூரத்தனமாக குத்தகைக்கு எடுத்து வருகிறது. டைகர் எகனாமி சீனா என்றால் சும்மாவா?

## சரி இப்போது, எண்ணெய் வளம், இனப்படுகொலை, இலங்கையிடம் அளவுக்கு அதிகமாகவே அனுசரித்துப் போகும் இந்தியாவின் நிலை, சீனா ஊடுருவல் கதை, நடுக்கடலில் இந்திய மீனவர்கள் படுகொலை, வேதாந்தா நிறுவனம், வைகோ இருட்டடிப்பு , தமிழக தேர்தல் அரசியல், பொருளாதாரப் போட்டி, சர்வதேச அரசியல் என அனைத்தையும் தொடர்புபடுத்தி யோசித்துப் பாருங்கள். முடிவை உங்களுக்கு விட்டுவிடுகிறேன்! —

thanks-facebook

[size=4]

சரி இப்போது, எண்ணெய் வளம், இனப்படுகொலை, இலங்கையிடம் அளவுக்கு அதிகமாகவே அனுசரித்துப் போகும் இந்தியாவின் நிலை, சீனா ஊடுருவல் கதை, நடுக்கடலில் இந்திய மீனவர்கள் படுகொலை, வேதாந்தா நிறுவனம், வைகோ இருட்டடிப்பு , தமிழக தேர்தல் அரசியல், பொருளாதாரப் போட்டி, சர்வதேச அரசியல் என அனைத்தையும் தொடர்புபடுத்தி யோசித்துப் பாருங்கள். முடிவை உங்களுக்கு விட்டுவிடுகிறேன்!
[/size]

[size=4]மகிந்தா சுல்தான் ஆவாரா?, இல்லை. கடாபி போலாவார்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc6/178968_10151075346207377_1238060029_n.jpg

தஞ்சை தமிழானந்தன் @@ விளக்கம் நீண்டுவிட்டதால் பதிவாகவே பகிர்கிறேன். பின்வருவனவற்றில் பலவும் பலருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் ஒரு முழுமையும் தொடர்ச்சியும் வேண்டி தொடக்கத்தில் இருந்து துவங்குகிறேன்.

பூமிக்கு ஆற்றல் கிடைப்பது சூரிய ஒளியில் இருந்துதான். Primary source of energy. ஒளி ஆற்றல்தான் பல்வேறு ஆற்றல்களாக உருமாறுகிறது. உலகில் உயிரனங்கள் தோன்றிய யுகத்தில் முதலில் தோன்றியது கடல் வாழ் தாவரங்களே. அவைகள் கடல் நீரில் கரைத்துவிடப்பட்ட நீர்ப் பாசிகள், மிதவியம் போன்ற நுண்ணுயிர்கள் (phyto planktons). By then, ocean water was a primeval soup. அவைதான் கடல் நீரில் சூரிய ஒளி கிடைக்கும் மேல் மட்டத்தில் மிதக்கின்றன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை (photosynthesis) மூலமாக எளிய கூறுகளாகிய கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன் முதையவற்றை இணைத்து சங்கிலித் தொடர் ஹைட்ரோகார்பனாக மாற்றுகின்றன. அந்த சேர்மம் தான் எரிபொருளின் மூலம்.

பெட்ரோலின் சேர்மம் C10H22 . இந்தக் கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட உதவிய சூரிய ஆற்றல் தான் அந்த பிணைப்பில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. எரிபொருள் எரியும் பொழுது அவைகளுக்கு இடையில் உள்ள பிணைப்பு உடைகிறது. அதிலிருந்து ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தாவரங்கள் இறந்ததும் கடலுக்கு அடியில் படிமமாக படிகின்றன. இவ்வாறு கோடிக்கணக்கான கணக்கான ஆண்டுகள் தொடர்கிறது. படிமம் மேல் படிவமாக ஹைட்ரோ கார்பன்கள் குவிகின்றன.

அதே சமயம், பெருநிலத் தட்டுக்கள் (continental plates) இடம் பெயர்கின்றன, ஒன்றோடொன்று மோதுகின்றன, அழுத்துகின்றன, பிரட்டிப் போடுகின்றன. இதனால் கடல் தரையில் இருந்த படிமங்கள் பாறை தட்டுகளுக்கு இடையில் சிக்குகிறது. அழுத்தங்களுக்கு ஆளாகிறது. அழுத்தம் காரணமாக திடமான ஹைட்ரோ கார்பன் தொகுதி உருவாகிறது. அவைதான் பெட்ரோலியமாகவும், அழுத்தத்தில் வெளியாகும் ஆவி எரிவாயுவாகவும் உருப்பெறுகிறது.

அத்தகைய தொகுதி, மேலேயும் கீழேயும் நுண்துளை அற்ற கல் பாறைகளால் (non porous rocks) சூழப் படும்பொழுது, அவை எங்கேயும் கசிந்து செல்ல இயலாது (called Hydrocarbon Traps). இத்தகைய தொகுதிகள் நிறைந்த அடிஆழ நிலப்பரப்பு எண்ணெய் வயல் எனப்படுகிறது. இவை சராசரியாக 3- 4 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும். அவற்றை கண்டுபிடித்து துளையிடும் பொழுது எண்ணெய் ஊற்றாக வெளிவரும். பெரும்பாலான எண்ணெய் வயல்கள் கடலிலோ அல்லது ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு பின் நிலத்தட்டுப் பெயர்வு ஏற்பட்ட இடத்திலேயே அமையப் பெரும்.

As per law of conservation of energy, energy can neither be created nor be destroyed. It can only be transferred from one form to another. ஒரு விறகை எரிக்கிறோம் என்றால் அது வாழ்த்த காலத்தில் சேமித்த சூரிய சக்தியை வெளியேற்றுகிறோம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் பலகோடி ஆண்டுகள் சேமித்த ஆற்றல் எத்தன்மையுடன் இருக்கும்? சுருக்கமாக சொல்வதெனில் பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்துவைக்கப்பட்ட சூரிய ஆற்றல்தான் நாம் நினைத்தவுடன் எளிதில் எரித்துப் பயன்படுத்தும் எரிபொருள் !

அதேபோல்தான் நிலத்தில் உள்ள தாவரங்கள் புதைந்து அழுந்தி நிலக்கரியாக மாறுகின்றன. குறுகிய காலத்தில் இத்தகைய ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றுவதால் ´உலக வெப்பமயமாதல்´ நிகழ்கிறது.

எண்ணெய் வளம் தோன்றிய காலத்தை ஒப்பிடுகையில் மனித குல நாகரீகம் தோன்றி வளர்ந்த காலம் என்பது கண்ணிமைப் பொழுது கைநொடிப் பொழுது. ஆகவே ஒரு இனம் வாழ்த்து பயன்படுத்திய பகுதி எரிபொருள் உருவாக்கத் திற்குக் காரணம் என்பது பொருந்தாது. நவீன யுகத்தில் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின் உருவாகியதுதான் நாடு, தேசிய எல்லைகள் எல்லாம்.

ஆகவே தற்போது நமக்கு வகுக்கப்பட்ட , விதிக்கப்பட்ட தேசிய எல்லைகளுக்குள் உள்ள வளங்களையே உரிமை கோர முடியும். வரலாற்றின் அடிப்படையில் அல்லது பூர்வ குடிமக்கள் என்கிற அடிப்படையில் இன்றைய நமது எல்லைக்கு அப்பால் உள்ள கனிம வளங்களைக் கோர முடியாது. எண்ணெய் வளத்தை மையாமாக் கொண்டு எழுகிற சிக்கல்களில் இருந்து மீள்வதே பெரும்பாடு... சிந்தித்து செயல்பட்டால் அதை வேண்டுமானால் செய்யலாம்.

மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழில்புரட்சிக்குப் பின் தான் எரிபொருள் தேவை அதிகமாகி விட்டது. உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முனைகின்றன. அதற்கு எரிபொருள் அத்தியாவசியம் ஆகிறது. அதனை மையமாகக் கொண்டே இன்றைய பூகோள அரசியல் அமைகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தோன்றி வளர்ந்த கலாசார, நாகரீக பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் இந்த பூகோள அரசியல் என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. தமிழர்களாகிய நாமும் இதற்கு விதிவிலக்கல்ல!

‎//////////////////////////

தஞ்சை தமிழானந்தன் அண்ணா எனக்கு முன்பிருந்து ஒரு சந்தேகம் இருந்ததுண்டு..இப்போது இந்த பதிவை பார்த்ததும் அது முழுமை பெற்றுவிட்டது..

thanks-facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.