Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறங்குகையிலும் ஒரு கண் திற!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறங்குகையிலும் ஒரு கண் திற!

cc0f5cf1338ce5d378f3b8aa45b2ceaf.jpg

நண்பன் என்பவன், சந்தர்ப்பம் தேடியபடி கூடவே இருக்கும் எதிரியே இவ்வரிகளை ஆத்மார்த்தமாக நம்பியபடி சொல்பவர் இயக்குநர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் போன்ற இவர் நடித்து அல்லது இயக்கிய படங்களில், யாரோ ஒரு கூடவே இருக்கும் எதிரியை நிச்சயம் எம்மால் பார்க்க முடியும்! சசிக்குமாரின் கருத்தும், எண்ணமும் எத்தனை சதவீத உண்மை என்பதை, அவரவர் அனுபவங்களே உரைகல்லாக நின்று தீர்மானிப்பது என்பது திண்ணம்.

பலம், பலவீனம் என்கின்ற மனிதனொருவனின் வெற்றிக்கான இரட்டைக் காரணிகளின் ஒட்டுமொத்த வரலாற்றையும், பக்கம் பக்கமாக மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள் எப்போதும் எம் நண்பர்களே! "ஒரு நாளும் எமைப்பிரியாத, வரம் வேண்டும்'' ஓருயிராக பழகுபவர்களின் எண்ணங்களில் "நஞ்சு'' நாற்றாகவோ, விதையாகவோ வீழ்ந்து துளிர்ப்பதற்கான " முளைச்சூழல்'' எமது பலவீனங்களின் தெரிவிலிருந்தே தொடங்குகின்றது.

கூட்டாளிகளினால் வீழ்த்தப்பட்ட உலக அரசுகள் யாவுமே, வலி சுமக்கும் வரலாறொன்றை சுயமாக எழுதி வைத்திருப்பதையும், அலட்சியப்படுத்தப்பட்ட மகா தவறொன்று அவைகளுக்குள் எப்போதும் மறைந்திருப்பதையும் வல்லரசுகளின் வாயில் கதவுகளின் உட்புறமாக ஒட்டிக் கிடப்பதைக் காணலாம். "தமிழ்த் தேசியம்'' என்கின்ற பிரயோகத்தை நாம் மறந்ததோ, மறுப்பதோ என்னவாயினும், இந்த வார்த்தைகளின் இந்தக் கனம் வரைக்குமான மீடிறன் பாவனையாளர்கள்'' என்கின்ற பெருமை, புலத் தமிழர்களுக்கு உண்டு.

ஆனால் "அங்கீகாரமளிக்கப்பட்ட இயக்குநர்கள்'' என்கின்ற ஓட்டுநர் இருக்கை புறப்பார்வைக்கு காலியாகவே தெரிவதும், ஒன்றுக்கு மேற்பட்ட, தெளிவில்லாத முகங்களே'' இன்றைக்கு இலங்கைக்கு புறத்தான தமிழ் பேசும் மக்களை தேசியப் புள்ளியை நோக்கி செலுத்தும் கடமையில் இருக்கின்றன. வெறும் பதினைந்துக்கு, இருபது பரப்புக் கட்டடக் கோயிலொன்றில் ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடக்கும் அலங்காரத் திருவிழாவுக்கு கூட, அடுத்தடுத்து தலைவனை அல்லது நடத்துநனை மாற்றி, மாற்றி அழகு பார்க்கும் "கூட்டுப்பொறுப்பு' "சமூக ஐக்கியம்'', பலதின் பலம்'' ஆகியனவுக்கான மோசமான உதாரணங்களாகத் தன்னை அடையாளப்படுத்திவிட்ட ஈழத் தமிழ்ச்சாதிக்கு, "ஏகத்தலைமை'' என்கின்ற வெற்றிடம் அவ்வளவு இலகுவாக நிரப்பப்படக் கூடியதொன்றா?

"மகா கௌரவ சூனியத்தை, தன் தெய்வீகசக்தி குழைத்த, கீழ்த்தர யுக்திகளால் தோற்கடித்தார் ஸ்ரீகிருஷ்ணர் என்கின்ற கோபத்தில், "உன்யாதவ குலம், தமக்குள் தாமே அடித்துக் கொண்டு அழிந்து போவதாக!'' வென, தீ நாக்குகளால் சாபமிட்டராம் முனிவர் ஒருவர். குருஷேத் திரத்தின் பின்னான நாள்களில் தன்னினத் தில் எந்தவித சிறு சலனமும் வந்து, முனிவரின் சாபம் உண்மையாகி விடாமல் "பைனாக்குலரும், பூதக் கண்ணாடியும்'' பாவித்து பார்த்துப் பார்த்து யாதவ குலத்தை வழி நடத்தினாராம் கிருஷ்ண பரமாத்மா!

பாதுகாப்புக்காக மரங்களிலேயே தூங்கும் வழக்கமுடைய யாதவ குலத் தோன்றலின், செவ்வலரிப் பாதங்களை பறவை என்று நினைத்த வேடன் ஒருவன் தொடுத்த விஷ அம்பு, கிருஷ்ணரின் கால்களைத் தைத்து மகா சமாதியடைந்தாரம் (பாதம் நிறம் பறவை அம்பு சாவு நம்புங்கள் மக்களே! நம்புங்கள்)

அடுத்த காட்சியில், யாதவ குலம் முழுவதும் கருத்து முரண்பாடொன்றுக்குள் சிக்கியபோது, ஆற்றங்கரையிலிருந்த புற்கள் யாவையும், "இரும்பு உலக்கைகளாக'' மாறியதனால் (சாபம்! சாபம்!!!), அவற்றைப் பிடுங்கி தங்களுக்குள் அடித்துக் கொண்டு, ஒட்டுமொத்த இனமுமே செத்தே போனதாம்! அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டும், தேநீர் "அசிட்' ஆக மாறினால் இந்த நாட்டின் அதனை உயிர்களும் அந்த முனிவரை வாழ்த்துமே!

உலக அரசியலில் அரங்குகளில் இன்னமும் எழுந்து நிற்கக்கூடத் தெம்பில்லாமல், தவழ்ந்து நகரும் தமிழ்த் தேசிய அபிலாசைகளை "குழந்தைக் கொலை" செய்யும் கொடூர முனைப்புடன் எம்முள்ளே வளர்க்கப்படுகின்ற இரும்பு உலக்கைகள் தொடர்பில், புலத் தமிழர்களின் அதீத மௌனமும், அலட்சியமும் ஏனோ நம்புகின்ற நெஞ்சங்களில் பீதியையே பரிசளிக்கின்றன.

இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவின் வாய்மொழி மூலம், "ஜனாதிபதி புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் பேசுவதன் மூலம், தமிழர்களின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகின்றார்'' என்கின்ற அறிவிப்பு மரவள்ளிக்கிழங்காக அடுக்கப்பட்ட ஒலி வாங்கிகளின் ஊடாக, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி, நிரவி வாழ்கின்ற தமிழர்களிடம் மொழிபெயர்ப்பில்லாத மனக்கிலேசம் ஒன்றை விதைத்துச் சென்றுள்ளதை மேலோட்டமாக மறந்துவிட முடியாது!

மறுதரப்பில், "இலங்கைத் தமிழர்களுக்கு தேசிய அரசியல் பிரச்சினை ஒன்று உள்ளது'' என்பதை மீண்டும் ஒரு முறை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமிக்க பூரணாத்மா ஒப்புக் கொண்டுள்ளதை தவிர வேறேதும் அணுவள வேணும் உண்மையில்லாத பேய்க்காட்டுத் தான் என்பது, எதிரிலிருக்கும் எல்லோராலும் அறியப்பட்டதொன்று!

"பிராந்தியவல்லாதிக்கச்'' சுழலிடமாக, வல்லரசு போட்டிக்கான பந்தயத்தடமாக தன்னைத்தானே மாற்றிக் கொண்டு கொடுத்த விலைக்காக இலங்கை என்கின்ற தீவுக்கும் ஆள் மக்களுக்கும் சர்வதேசம் கொடுத்த கவர்ச்சிகரமான பரிசுப்பொதி தான், "தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கான நசுக்கல்'' கடலில் மிதந்து வந்த சாடியை திறந்த, கோபாலன் அதனுள் இருந்த பூதத்தைக் கண்டு திடுக்கிட்டதை போல, மஹிந்தவாதிகளின் பேண்தகு ஆட்சிக் கனவில் அடிக்கடி மிரட்டுபவர்களாக ஐரோப்பிய, அமெரிக்க வாழ் தமிழர்கள் செதுக்கப்பட்டார்கள்.

எதிரில் நின்று பார்த்துப் பார்த்தே எதிரிக்கு அஞ்சுவதை விடுத்து, பக்கத்தில் வைத்து பல்லுத்துலக்கி, பாற்சோறூட்டி விடும் பக்குவக் கொலைத் தத்துவத்தை பஞ்சசீலத்தின் பிற்சேர்க்கையாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள பேரினவாதிகளின் பசப்பு வார்த்தைகளுடன், தமிழினத்தின் "தெளிவாக குழம்பும்'' தேர்ந்த பெருங்குணமும் சேர்ந்துவிட்டால், பிறகென்ன? பேசவும் வேண்டுமா?

இன்றைக்கு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் வெளியிடப்படும் அறிக்கைகளின் பிறப்பிடம் எது? தமிழீழ நாடு கடந்த அரசின் உத்தியோகபூர்வ செயலகம் எது? போன்ற 2009 இற்கு பின்னான வெறுமைகளுக்கு அந்தப் புலம்பெயர் தேசங்களில் உள்ள தேசப்பற்று மிக்க உண்மை உணர்வாளர்களிடமே போதுமான சுட்டறிவு இல்லாதவிடத்தில், முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் முதுகைப்பிளந்து, இதயம் துளைத்த குருதி குடித்தவனின் மீது கொலை வெறியுடன், ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிர்ப்பு கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் கண்டன நிகழ்வுகளுக்கும் இரத்தப் கொதிப்புடன் உள்ளிருந்து கொல்லும் தீவிரப்பற்றுடன் திரழ்கின்ற இளைஞர்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு வீறுநடைபோடவைக்க யாரைக் கைகாட்டி இருக்கின்றோம்?

எச்சிலை மென்று விழுங்கியபடி "இல்லை'' என்று தானே இறுகும் எம் நாவுகள் !

பிரபகாகரன் கைகள் உயர்ந்து ஆயுதம் செய்த போது, புலம்பெயர் தமிழர்கள் அரசியல் செய்யவில்லை புலம்பெயர்ந்தவர்கள் அதீத அரசியல் செய்யும் போது, பிரபாகரன் கைகளில் ஆயுதம் எதுவும் இல்லை'' என்கின்ற இரட்டை முரணுக்கு காரண, காரிய, கர்த்தா எல்லாமுமே ஈழத் தமிழர்கள் மட்டும் தானே!

"ஏற்கனவே மடியில் விழுந்து விட்ட, அழுகிய பழங்களைப் போலத்தானே மீதியான புலத்தமிழனும் அவனது கற்பனைத் தலைமைகளும்'' என்கின்ற இலங்கை அரசின் எண்ணம் தவறு என்று நிரூபிப்பதற்கு இவர்கள்தான் "இன்றைய தமிழினத்தின் வழிகாட்டிகள்'' என்ற கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு 3x365 இற்கும் அதிகமான நாள்களை செலவிட்டும் முடிவு காணாத நம்மில் முட்டாள்களே இல்லையா?

வலுவான விம்பமொன்றுடன் இருக்கும் புலத்தமிழர்கள் மத்தியில், "தலைமை'' எனும் பெயரில்லாத பூசல் ஒன்றை தூண்டி விடுவது''. "இறுகி வரும் சர்வதேச விசாரணைப் பின்னல்களுக்கான பிற்போடும் உத்திகளுக்கு வலுச்சேர்க்க புலத்தமிழர்களின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை எனும் வரைவுகளை பயன்படுத்துவது'', "இந்தியாவுடன் கடும் நெருக்கம் காட்டும் இலங்கைகுள்ளான தமிழர் ஏகபிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமாந்தரமான தமிழ் பிரதிநிதிகள் என்ற மாயையை உலகச் சந்தைகளில் விற்பது "போனதெல்லாம் வரும் என்று இன்னமும் கொஞ்சமேனும் இழக்காத நம்பிக்கைகளுடன் இலங்கைக்கு உள் வெளியேயான தேசிய மக்கள் கூட்டத்தின் பற்றுதலை, சிறுவர் சிறுகப் பிடுங்குவது'' போன்ற சில முதன்மைக் காரணங்களுடன் எண்ணிலடங்காத சுய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இலக்காகக் கொண்டு எய்தப்பட்டதே இந்த அம்பு! "பேசத் தயார் என்று அறிக்கையிடுபவன்'', "பேச முடியாதென்று முகத்தை திருப்புவன்'', "தன்னையும் சேர்த்துக் கொள்ள கெஞ்சுபவன்தானே சரியென்று கை நீட்டுபவன்'', பேசித்தான் "பார்ப்போமேயென்று பிணங்குபவன்'', "பேசினாலும் ஆகாதென்று தீர்க்க தரிசிப்பவன்'', பேசினால் பிளப்பேன் என்று பார்ப்போமேயென்று பொருமுபவன்'' என நவரசக் கலைஞர்களுக்கானதொரு உலகளாவிய தேடலாக, இலங்கை அரசின் தமிழ்த்தேசிய வெறுப்பாளர்களின் மும்முரத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பை எப்படி, மறுதாக்கப் போகின்றாய் சர்வதேசத் தமிழா?

பிரித்தானிய தமிழர் பேரவையினது மாநாட்டுக்காக பல்வேறு தேசத் தமிழர்கள் திரண்டு நிற்பது'' "ஐ.நாவின் கண்காணிப்பு பார்வையில் இலங்கை அரசுக்கு எதிரான மேகங்கள் திரண்டு வருவது,'' "ஐக்கிய நாடுகளின் பூகாள காலக் கிரம மீளாய்வு' கூட்ட அமர்வுகளில் எதிர்க்குரல்களின் வீரியம் அதிகரிப்பது'' போன்ற நடைமுறை உலக ஒழுங்குகளின் மீது, புலம் பெயர் தமிழர்களினால் ஏற்படுத்தப்படக்கூடிய பலமான அழுத்தங்களை குறைப்பதற்கான உளவியல் ஏவலாகவும் இந்நிலைமையினை எதிர்பார்க்க முடியும்.

கார்கட்டி, கண் சொரிகின்ற கார்த்திகை மாதத்தின் மீதமிருக்கின்ற தீப ஒளியில் எம் கண்மணிகளை நிறைவேற்றுகின்ற கலைக்கடமையின் நீளக் கட்டளையை நெருக்குவாரம் கொடுத்து நிறுத்துதல் '"ராஜ ராஜ சோழனுக்குப் பிறகு சிங்களக் கொண்டைகளை சிதைத்து ஆட்டிப்படைத்த பெருமைக்குரிய ஏகத் தலைவனின் ஜனன தினத்தின் எண்ண எழுச்சிகளை உடைத்தல்'' போன்ற வருடாந்திர கார்த்திகை மாத கடமைக்கும் ஆட்சியாளர்களின் விரல்களில் பதினொன்றாக இணைத்து விட்டிருக்கும் இந்த நேரமே. தமிழர்களின் உறுதியில் மீது இயற்றப்பட்டிருக்கும் சத்திய சோதனைக் காலம்!

வருட வித்தியாசங்களால் தொலைத்து விட முடியாத "தமிழ்த் தேசியம் மீதான இதய சுத்தியுடனான பற்றுதல்களை'' வெளிப்படுத்துவதன் மூலமும், ஆய்ந்து தெளிந்து வேகமும், விவேகமும் வெளிக்கூர்மையும் கலந்த முடிவுகளை உலகத் தமிழர்கள் தெரிவு செய்வதற்கு வேண் டிய அமைதியான ஒப்புதல்களுடன் கூடிய அவகாசங்களை வழங்குவதன் மூலமும் பொது எதிரியினால் பாகம் பாகமாக ஏவி விடப்பட்ட இறுக்கமான சிக்கல்களைக் கூட பிளந்து தோள்களில் சூடிய பெருமை எமக்கும் கிடைக்கட்டுமே! பொறுப்பதெல்லாம் பூமியாளவே, என்னினமே!

செந்தூரி

நன்றி - உதயன் இணையம்

Edited by nochchi

[size=4]

பிரித்தானிய தமிழர் பேரவையினது மாநாட்டுக்காக பல்வேறு தேசத் தமிழர்கள் திரண்டு நிற்பது'' "ஐ.நாவின் கண்காணிப்பு பார்வையில் இலங்கை அரசுக்கு எதிரான மேகங்கள் திரண்டு வருவது,'' "ஐக்கிய நாடுகளின் பூகாள காலக் கிரம மீளாய்வு' கூட்ட அமர்வுகளில் எதிர்க்குரல்களின் வீரியம் அதிகரிப்பது'' போன்ற நடைமுறை உலக ஒழுங்குகளின் மீது, புலம் பெயர் தமிழர்களினால் ஏற்படுத்தப்படக்கூடிய பலமான அழுத்தங்களை குறைப்பதற்கான உளவியல் ஏவலாகவும் இந்நிலைமையினை எதிர்பார்க்க முடியும்.
[/size]

[size=4]இவற்றுக்கான உதவிகளையும் முடிந்தவர்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.