Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொழிபெயர்ப்பின் அவசியம்

Featured Replies

அறிமுகம்

[size=2][size=4]மொழிபெயர்ப்பு என்றால் என்ன? ஒரு மொழியில் குறிப்பிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் செய்முறையை மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.[/size][/size]

[size=2][size=4]இது ஒரு சிக்கலான செயல்பாடாகும். மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய செயல்பாடும்கூட.[/size][/size]

[size=2][size=4]பல இலக்கிய மேதைகள் மொழிபெயர்ப்பு பற்றி வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். தங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். வகைப்படுத்தியும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொன்றும் முக்கியமானது. ஒவ்வொன்றும் பயன்பாட்டில் உள்ளது.[/size][/size]

[size=2][size=4]ஜான் டிரைடன் (1631-1760) ஆங்கில மொழியின் மூத்த மொழிபெயர்ப்பாளர் என்று கருதப்படுகிறார். மொழிபெயர்ப்பை அவர் மூன்று வகையாக வேறுபடுத்துகிறார்.[/size][/size]

  • [size=4]மூல ஆசிரியரை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்துக்கு வாக்கியம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு வருவது.[/size]
  • [size=4]உணர்வுகளை அப்படியே கொண்டு வருவது.[/size]
  • [size=4]மூலத்தின் சாரத்தைச் சொல்வது.[/size]

[size=2][size=4]இது பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஆங்கில மொழியியலாளர் பயன்படுத்தும் சில குறியீடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.[/size][/size]

[size=2][size=4]ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். இங்கு ஆங்கிலம் என்பது மூல மொழி [size=5](Source language). [/size]இதனை S.L. என்று குறிப்பிடுவார்கள். தமிழ் என்பது இங்கு Target Language. இதனை T.L. என்று குறிப்பிடுவார்கள். டிரைடன் மூலத்திலுள்ள உணர்வுகளைக் கொண்டு வரும் இரண்டாவது வகையையே கொண்டார். அது மட்டுமில்லாமல் தன் காலத்தில் பேசப்பட்ட ஆங்கில மொழி நடையையே பயன்படுத்தினார்.[/size][/size]

[size=2][size=4]அவருடைய சம காலத்தவரான அலெக்சாண்டர் போப் என்பவரும் இதே வகையைக் கையாண்டார். பதினெட்டாம் நூறாண்டின் பிற்பகுதியில் வந்த ஏ.எஃப். டைலர் என்பவர் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் என்ற நூலை எழுதினார். அதில் மூலத்தில் எத்தகைய நடை, பாணி கையாளப்பட்டிருக்கிறதோ அதுவே கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.[/size][/size]

[size=2][size=4]ஒரு மொழியின் கட்டுமானத்துக்கும் அதில் மொழிபெயர்க்கப்பட்ட விஷயத்தின் அடிநாதமான பொருளுக்கும் இடையே ஒரு அமைதியின்மை இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனை எப்படிப் போக்குவது என்ற கேள்வி, டிரைடன் – டைலர் காலத்திலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டு வருகிறது.[/size][/size]

NSRW_John_Dryden-150x150.jpg

  • தொடங்கியவர்

[size=5]மொழிபெயர்ப்பின் அவசியம்[/size]

[size=2][size=4]மொழி பல பயனுள்ள பணிகளை நமக்குச் செய்கிறது. [/size][/size]

[size=2][size=4]
1. தகவல் பெற,
[/size][/size]

[size=2][size=4]
2. கேள்வி கேட்க,
[/size][/size]

[size=2][size=4]
3. ஆணையிட,
[/size][/size]

[size=2][size=4]
4. மறுக்க,
[/size][/size]

[size=2][size=4]
5. அழுத்தம் கொடுக்க,
[/size][/size]

[size=2][size=4]
6. சம்பவங்களை வரிசைப்படுத்த,
[/size][/size]

[size=2][size=4]
7. தர்க்க ரீதியாக உறவுகளைக் குறிப்பிட,
[/size][/size]

[size=2][size=4]
8. பங்கு பெறுபவர்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த (ஒரே மொழி பேசுபவர்),
[/size][/size]

[size=2][size=4]
9. ஒன்றுபட்ட நடவடிக்கை தொடர,
[/size][/size]

[size=2][size=4]
10. வேறுபடுத்திக் காட்ட.
[/size][/size]

[size=2][size=4]ஆதி மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டான். விலங்குகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தன. மனிதன் இயற்கையோடு வாழ்ந்து கொண்டே இயற்கையிலிருந்து தனித்து நிற்கவும் முற்பட்டான்.[/size][/size]

[size=2][size=4]இயற்கையை எதிர்க்கவும், அழிக்கவும் மறு உருவாக்கம் செய்யவும் முயன்றான். இந்த முயற்சியில்தான் மற்ற உயிரினங்களுக்குக் கிடைக்காத உழைப்பு என்ற மாபெரும் கருவி அவனுக்குக் கிடைத்தது.[/size][/size]

[size=2][size=4]உழைப்பு அவனுக்கு புதிய புதிய அனுபவங்களைத் தந்தது. இந்த அனுபவங்களின் சாறு அவனுடைய அறிவாக மாறியது. தன் அனுபவத்தையும் அதன் சாறான தன் அறிவையும் தன் சக மனிதனோடு பகிர்ந்து கொள்ள அவனுக்குக் கிடைத்த ஊடகம்தான் அவனுடைய பேச்சு.[/size][/size]

[size=2][size=4]பேசிப் பேசி அவை உளியால் செதுக்கப்பட்ட வார்த்தைகளாக, வாக்கியங்களாக உருவான போது கிடைத்த சாதனம்தான் அவனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் கிடைத்த மொழியாகும்.[/size][/size]

[size=2][size=4]பல்வேறு மொழி பேசும் பல்வேறு மனிதக் குழுக்கள் இணைந்தும், புரிந்தும் வாழும்போது அவர்களுக்கிடையே பரிவர்த்தனை நடந்தது. இதற்குத் தடையாக மொழி இருக்கலாகாது என்று கருதி, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்வது அவசியமாயிற்று.[/size][/size]

[size=2][size=4]மனித குலத்தின் தேவையிலிருந்து உருவானதுதான் மொழிபெயர்ப்பு. பே சும் மொழி வளர்ந்து செம்மொழியான போது புதிய புதிய இலக்கியங்கள் அந்தந்த மொழிகளில் தோன்றின. கருத்துப் பரிமாற்றத்திற்கும் இலக்கிய பரிமாற்றத்திற்கும் இவை மொழிபெயர்க்கப்பட்டன.[/size][/size]

[size=2][size=4]உலகம் பூராவும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் நடந்தன. மொழியியல் வல்லுனர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்று நான்கு நூல்களைச் சிறப்பிக்கின்றனர். அவை:[/size][/size]

  • [size=4]ஷேக்ஸ்பியரின் பதினேழு ஆங்கில நாடகங்களை ஜெர்மன் மொழிக்கு ‘ஸ்வீகல்’ என்பவர் மொழிபெயர்த்தது.[/size]
  • [size=4]கோதேயின் ஃபாஸ்ட் (Faust) என்ற ஜெர்மனிய படைப்பை Bayard Taylor ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.[/size]
  • [size=4]உமர்கயாமின் Rubaiyat, Edward Fitzgerald என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[/size]
  • [size=4]சமஸ்கிருத்ததில் இருந்த கீதையை சுவாமி பிரபாவனந்தாவும் கிறிஸ்டோபர் ஈஸ்வர்வுட் என்பவரும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தனர்.[/size]

william-shakespeare-150x150.jpg

  • தொடங்கியவர்

தமிழில் மொழிபெயர்ப்புகள்

[size=2][size=4]கம்ப ராமாயணத்தைப் படித்தவர்கள் அதன் மூலம் சமஸ்கிருத மொழியில் உருவான வால்மீகியின் ராமாயணம் என்பதை ஒப்புக் கொள்வார்கள். வால்மீகியின் மொழிபெயர்ப்புதான் கம்பன் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. கம்பனின் கற்பனை நயம், சொற்கட்டு, கவித்துவம் ஆகியவை வால்மீகியை மிஞ்சியதாக இருக்கும். பேராசிரியர் சீனிவாசராகவன் கம்பனையும் மில்டனையும், கம்பனையும் வால்மீகியையும் ஒப்பு நோக்கி விளக்கிப் பேசுவார். எஸ்.ஆர்.கே. என்று அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பொதுவுடைமை கட்சியின் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் கம்பனில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்தவர்கள்.[/size][/size]

[size=2][size=4]லார்ட் லிட்டன் அவர்களால் எழுதப்பட்ட ‘தி சீக்ரட் வே’ என்ற நூலை ‘மனோன்மணீயம்’ என்ற நாடகமாக எழுதினார் பேராசிரியர் சுந்தரம்.[/size][/size]

[size=2][size=4]உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் வரிசையில் முதல் இடத்தில் நிற்பவன் காளிதாசன். அவனுடைய ஒப்பற்ற படைப்பகளில் ஒன்று சாகுந்தலம். மறைமலை அடிகள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.[/size][/size]

[size=2][size=4]ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகமாக ‘ஆஸ் யூ லைக் இட்’ பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.[/size][/size]

[size=2][size=4]நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து அறுபதாம் ஆண்டுகள் வரை, தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்கள் கணக்கில் அடங்கா. இது விஷயத்தில் அன்றைய சோவியத் யூனியனும், அதன் அங்கமான Novosti மற்றும் முற்போக்கு பதிப்பகங்களும் ஆற்றிய பணி மகத்தானதாகும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தத்துவ நூல்கள், அரசியல் கட்டுரைகள், டால்ஸ்டாய், கார்க்கி, செகோவ் போன்றவர்களின் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழுக்கு வந்ததும் இதே காலத்தில்தான்.[/size][/size]

[size=2][size=4]சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே பிரெஞ்சு Les Miserables என்ற அற்புதமான நாவல் தமிழில் வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓ.வி. அழகேசன் மொழிபெயர்த்தார்.[/size][/size]

[size=2][size=4]ஹெர்மன் ஹெஸ்ஸே என்பவர் பிரபல ஜெர்மன் எழுத்தாளர். சித்தார்த்தா என்ற நாவலுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. திருச்சியைச் சேர்ந்த திரிலோக சீதாராமன் என்ற தேச பக்தர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.[/size][/size]

[size=2][size=4]ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்லாது ஏனைய இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு ஏராளமான படைப்புகள் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. குமாரசாமி, சேனாபதி ஆகியோர் வங்க இலக்கியங்களைத் தமிழில் தந்தனர்.[/size][/size]

[size=2][size=4]கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராட்டிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வந்தார். மராட்டியம், தமிழும் தெரிந்த வாசகர் ஒருவர், Kraunchawadh நாவலைப் படித்து விட்டு, தமிழ் மூலம் மாதிரியும், மராட்டி மொழிபெயர்ப்பு மாதிரியும் தோன்றுவதாக காண்டேகரிடம் சொன்னதாக குறிப்பிடுவார்கள்.[/size][/size]

[size=2][size=4]ரா. வீழிநாதன், சரசுவதி ராம்னாத் ஆகியோர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு பல படைப்புகளைக் கொண்டுவந்தனர். இதில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் இவற்றைத் தொடராக வெளியிட்டன என்பதாகும். குறிப்பாக, கலைமகளும், கல்கியும் இதில் முன்னணியில் நின்றன.[/size][/size]

[size=2][size=4]திலீபன்[/size][/size]

http://www.tamilpaper.net/?p=7031

  • தொடங்கியவர்

[size=5]http://translate.google.com/[/size]

[size=4]பல மொழிகளில் இருந்த தமிழிற்கு ஓரளவு ஆர்த்ததுடன் விரைவாக மொழிபெயர்ப்பு செய்ய இந்த தளம் உதவுகின்றது.[/size][size=1]

[size=4]பின்னர் வாசித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]உலக இலக்கியத்தின் முக்கியப் புத்தகங்கள் மற்றும் சர்வதேச இலக்கிய இதழ்களை ஆன்லைனில் வாசிக்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவும் இணைய தளங்கள்[/size]

[size=5]http://www.aldaily.com/[/size]

[size=5]http://wordswithoutborders.org/?gclid=CNvD4NraqrMCFYh66wodBxcAOw[/size]

[size=5]http://www.drunkenboat.com/[/size]

[size=5]http://www.readprint.com/books-1/Non-Fiction[/size]

[size=5]http://www.doubleroomjournal.com/[/size]

[size=5]http://www.granta.com/[/size]

[size=5]http://www.classicreader.com/[/size]

[size=5]http://www.literaturecollection.com/[/size]

[size=5]http://www.thefreelibrary.com/[/size]

[size=5]http://www.free-book.co.uk/[/size]

[size=5]http://www.online-literature.com/[/size]

[size=5]http://www.gutenberg.org/[/size]

[size=5]http://www.victorianweb.org/[/size]

[size=5]http://www.kstrom.net/isk/stories/stories.html[/size]

[size=5]http://www.poetrysociety.org.uk[/size]

[size=5]http://www.bookforum.com/[/size]

[size=5]http://therumpus.net/[/size]

[size=5]http://www.themillions.com/[/size]

[size=5]http://bookslut.com/[/size]

[size=5]http://maudnewton.com/blog/[/size]

[size=5]http://www.roalddahlfans.com/[/size]

[size=5]http://www.tolkiensociety.org/[/size]

[size=5]http://infomotions.com/alex/?cmd=names[/size]

[size=5]http://jacklondons.net/[/size]

[size=5]http://www.literature.org/authors/[/size]

[size=5]http://www.bibliomania.com/[/size]

[size=5]http://robaroundbooks.com/shortfiction/[/size]

[size=5]http://www.sensitiveskinmagazine.com/[/size]

[size=5]http://www.archipelago.org/[/size]

[size=5]http://www.recirca.com/[/size]

[size=5]http://www.tol.org/client/[/size]

[size=5]http://www.abalonemoon.com/[/size]

[size=5]http://absinthe-literary-review.com/[/size]

[size=5]http://www.inkandashes.com/issue2/index.php[/size]

[size=5]http://jacketmagazine.com/00/home.shtml[/size]

[size=5]http://www.janushead.org/[/size]

[size=5]http://thebestamericanpoetry.typepad.com/[/size]

[size=5]http://www.literarysalt.com/issue1.html[/size]

[size=5]http://webdelsol.com/tpp/[/size]

[size=5]http://www.pulp.net/fiction/[/size]

[size=5]http://www.theotherpages.org/poems/poem-ab.html[/size]

[size=5]http://www.slowtrains.com/index.shtml[/size]

[size=5]http://www.salon.com/[/size]

[size=5]http://www.poetryloverspage.com/poets/akhmatova/akhmatova_ind.html[/size]

[size=5]http://www.poetryarchive.org/poetryarchive/singlePoet.do?poetId=1392[/size]

[size=5]http://www.sappho.com/poetry/sappho.html[/size]

[size=5]http://www.ibiblio.org/ipa/milosz.php[/size]

[size=5]http://www.coffeeconnectionpoets.com/[/size]

[size=5]http://cafeirreal.alicewhittenburg.com/index.htm[/size]

[size=5]http://epc.buffalo.edu/authors/[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.