Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயாவின் வெருட்டலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும்;

Featured Replies

[size=5]கோதபாயாவின் வெருட்டலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும்;[/size]

[size=4](ஐ.தி.சம்பந்தன்)[/size]

[size=4]அண்ணன் அளவு மீறிய அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக ஆட்சிபுரிகிறார் என்ற் மமதையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பொறுப்பான அரச ஊழியரான பாதுகாப்புச்செயலாளர் கோதபாயாவின் பேச்சுக்களும் செயலும் தமிழ் மக்களை அச்சத்திற்குட்படுத்தியுள்ளது. இவர் பதவியின் அடிப்படையில் ஒரு அரச ஊழியர். அரச ஊழியர் என்ற நிலையிலிருந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூறும் அதிகாரம் இவருக்கு இல்லை. அதுவும் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருப்பவர் அரசியல் கருத்துக்கள்கூற உரிமை இல்லை.[/size]

[size=4]அரச ஊழியராகவிருந்த திரு. ரி.;பி.இலங்கரத்தினா அரச லிகிதர் சேவைச் சங்கத்தில், 1948ல் மிக முக்கிய பதவியில் பணியாற்றியவர்;. அரசியல் கருத்துக்களை கூறியதால் அன்று வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அன்று சட்டமும் ஒழுங்கும் ஓரளவு இருந்தது. அது ஆங்கிலேயர் ஆட்சி முற்றாக அகலாத காலம்.[/size]

[size=4]இன்று நடைபெறுவது ஒரு சர்வாதிகார குடும்ப ஆட்சி. எனவே இராஜபக்ஷ சகோதரர்கள் எது பேசினாலும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.[/size]

[size=4]பல்லினமக்கள் வாழ்கின்ற நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றுபவர் சகல மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஆனால் கோதபாயா பாதுகாப்புச் செயலாளராக இருந்து கொண்டு தமிழ்ப்;பேசும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசிவருவதை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.[/size]

[size=4]இன்று பாதுகாப்புப் படiயில் 98 வீதமானவர்கள் பௌத்த சிங்களவர்கள்;. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு 40,000க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் தமிழ் மக்களை முள்ளி வாய்க்காலில் இராணுவம் படுகொலைசெய்தது. இன்று வடகிழக்குப் பகுதிகளில் குடிகொண்டு தமிழ் மக்களின் பூர்வீக மண்ணை அபகரித்து சிங்கள் மக்களைக் குடியேற்றி வருகின்றனர்..[/size]

[size=4]யாவும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளையின் பெயரில் நடைபெற்றுவருகிறது. இவரது ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு, முப்படைகளுக்கும் தளபதியாகவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மௌனமாயிpருப்புதும் அவரது சகோதரரின் கெடுபிடி நடவடிக்கைகளை மறைமுகமாக அக்கீகரிப்பதாகும். இதனால் பாதுகாப்பு படைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.[/size]

[size=4]பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் தேவையற்ற முறையில் தலையிட்டு இந்திய - இலங்கை அரசினால் ஒப்பமிடப்பட்டு அரசியல் சட்டத்தில் எழுதப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை தூக்கி எறியவேண்டும் என்று கோஷம் எழுப்பி சிங்கள மக்களுக்கும் இராணுவத்திற்கும் இனவாத உணர்வைப் பாய்ச்சி வருகின்றார்.[/size]

[size=4]இவரது இந்தக் கருத்துக்கு ஜனனாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசன் அவர்கள் 'அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தடைபோடுவதன் மூலம், அரசாங்க ஊழியரான பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்ஷ தனது அதிகார வரம்புகளை மீறி நடக்கிறார்.' ஏனக் கருத்து வெளியிட்டுள்ளார்.[/size]

[size=4]புhதுகாப்புச் செயலாளரின் சர்வதிகாரப் போக்கை அரசியல் கட்சித் தலைவர்கள் பலமாக கண்டித்துள்ளனர்.[/size]

[size=4]இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தனிநபர் ஒருவரால் தீர்மனங்களை அறிவிக்கவோ யோசனைகளை முன்வைக்கவோ முடியாது. சட்டவாக்க சபையின் நடவடிக்கைகளில் தனி நபரால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண கருத்துத் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]சட்டரீதியாக உரிய பாதுகாப்பை தமிழ் மக்களுக்கு வழங்காவிடின் மற்றுமொரு கிளர்ச்சி ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அதனை நிராகரிக்க முடியாது என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எச்சரித்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். தனது பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் சுதந்திரமான முறையில் இக்கருத்தை வெளியிட்டார். நீதித்துறையிலிருந்த நீதியரசருக்கு பல அனுபவங்கள் உண்டு. அந்த அடிப்படையில் அவர்வெளியிட்ட கருத்தையும் உதாசீPனம் செய்யமுடியாது. இதைப் பாதுகாப்புச் செயலாளர் கருத்தில் கொள்வாரா?[/size]

[size=4]1979ல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து ஆறு மாதத்தில் யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆணயிட்டு தனது உறவிணர் இராணுவ தளபதி வீரதுங்காவை அங்கு அனுப்பிவைத்தார். அந்த இராணுவத் தளபதியால் இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியவில்லை. மாறாக ஒரு பலமான ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்ற வரலாற்றை நினைவில் கொள்ளுதல் வேண்டும். [/size]

[size=4]ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆட்சியை வைத்திருக்கலாம் ; என்ற நம்பிக்கையில் 1978 இல் திரு. ஜே.ஆர்;. கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆக்கும் அரசியல் சட்டம் இன்று ஐக்கிய தேசியக் கட்சியை நிரந்தர எதிர்;க்கட்சியாகக் கொண்டு வந்துள்ள வரலாற்றையும் அதிகாரத் திமிரில் இருப்பவர்கள் நினைவில் கொள்ளுதல் நல்லது. [/size]

[size=4]இராணுவம் வடகிழக்கில் தான்தோன்றித்தனமாக நடப்பதற்குப் பாதுகாப்புச் செயலாளரின் பொறுப்பற்ற சர்வாதிகார நடவடிக்கையே காரணம். எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்புச்செயலாளர் அரசியல்பற்றிக் கருத்துக் கூறுவது அனுமதிக்கப் படுவதில்லை.[/size]

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகலமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர் இனரீதியாக கருத்துக்களை வெளியிடுவது அரச பயங்கரவாதமாகவே நோக்கப்படும்.

[size=4]ஒரு அரச ஊழியரான பாதுகாப்புச் செயலாளர் நாட்டின் ஜனாதிபதிபோல் அரசியல் கருத்தக்களைக் கூறித் தமிழ்த் தேசிய இனத்தை வெருட்டுவதை சர்வதேசம் பாhத்துக்கொண்டிராது. எந்தவித பாதுகாப்பும் அற்ற தமிழர்களுக்கு சர்வதேசமே பாதுகாபபு வழங்pக்கவேண்டும்.[/size]

வடகிழக்கில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்களப் படைகள் நிலை கொண்டிருப்பதனால் தமிழ் மக்கள் ஜனனாயக வழியில் எதிர்ப்புகளைத் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.

[size=4]நல்;லூர் பிரதேச சபைத் தலைவர், நல்லூர் பிரதேச சபைக்;குச் சொந்தமான காணி அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்ததற்கு இராணுவத்தினரால் தாக்கப்பட்டார். வடகிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினர் இதுபோன்று பல அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[/size]

[size=4] மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக த.தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள்; கூட இராணுவத்தின் அச்சுறுத்தலில் வாழ்ந்து வருகின்றனர். இப்படியான நிலை வேறு எந்த ஜனனாயக நாட்டிலும் இல்லை.[/size]

ஊள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அளவெட்டிக் கிராமத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது இராணுவத்தினர் சீருடையில் சென்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை பொல்லுகளால் துரத்தித் துரத்தித் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இத் தாக்கதல் பற்றி ஆதாரத்துடன் பொலிசாருக்கு முறையீடு செய்து இரண்டு வருடங்களாகியும் தாக்கிய இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

[size=4] பாதுகாப்பு விதிகளுக்கு அப்பால் தான்தோன்றித்தனமாக நடக்கும் கோதபாயாவின் நடவடிக்கைகளே இரராணுவத்திற்கு எல்லாவித தென்பையும் அளித்துவருpறது. அவர் எதைச் செய்தாலும் ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்தினால் ஜனாதிபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்ற துணிவு அவருக்கு இருக்கிறது.[/size]

[size=4]அத்தகைய ஒரு குடும்ப ஆட்சி தமிழ் மக்ளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.[/size]

[size=4]இலங்கையிலுள்ள இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் இராணுவத்தில் 25 வீதமான தமிழ் பேசும் மக்கள் படையில் சேர்க்கப்பட்டிருந்தால் ஓரளவு பாதுகாப்பு தமிழ்பேசும் மக்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழலாம்.[/size]

மாறாக சிங்கள இனவாத அரசின் கீழ் சிங்களப் படைகளின் இராணுவ ஆட்சியில் தமிழ் மக்கள் எப்படிப் பாது காப்பாக வாழ முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி த.தே. கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள் தலை ஓங்கிவருகின்றன . பயங்கரவாதத்தை ஒழிக்கவென்று கூறி உலக நாடுகளிடமிருந்து இராணுவ உதவிகளைப்பெற்று தமிழ் மக்களை இனப் படு;கொலை செய்தது அரசு, இன்று தேசிய பாதகாப்பு என்று கூறி சிங்கள இராணுவத்தை தமிழ் மண்ணில் நிலைகொள்ளவைத்து, தமிழ் மண்ணை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றி வருகிறது. ஜனநாயக வழியில் தங்களது பேராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் மண்ணில் குடிகொண்டுள்ள இனவாத இராணுவம் அனுமதி மறுக்கிறது. இந்தக்கொடுமையைத் தமிழ் மக்கள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இலங்கையில் சகல மக்களும் எந்தப்பகுதியிலும் சம உரிமையுடன் வாழலாம் என்று ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு கூறிவருகிறார். ஆனால் நடைமுறையில் அவரது சகோதரர் கோதபாயா ராஜபக்ஷ சிங்கள இனவாத பயங்கர வாதத்தை அரங்கேற்றி வருகின்றார்.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு படையின் உதவியைக் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்தக் கோரிக்கையை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. இதற்குப் புலம்பெயர் தமிழ் மக்களது அமைப்புகளும் முன்வர வேண்டும்.

வரலாறு படைத்த ஈழத் தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு தொடாந்தும் அகிம்ஷை வழியில் போராடுவார்கள் என்பது உறதி.

  • கருத்துக்கள உறவுகள்

கரட்டி ஓணானிட்டை, டியூசன் எடுத்திருப்பார் என நினைக்கிறேன்! :unsure:

  • தொடங்கியவர்

[size=4]இதே கோத்தா பல தடவைகள் புலம்பெயர் மக்கள் தான் இன்று சமாதானத்திற்கு தடையாக இருப்பாதாக கூறி வருவர். [/size]

[size=1]

[size=4]எனவே இவர்கள் புலம்பெயர் தேசங்களில் உள்ள செயல்பாடுகளை தடுக்க பல வழிகளிலும் முயற்சித்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பது உண்மை. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=6]Sri Lankan born Irish citizen detained for five years without any charges[/size]

[size=5]Mr. Gunasundaram Jeyasundaram (57), an Irish citizen was arrested and detained upon arrival in Katunayake International Airport on September 5, 2007 accused of helping the Liberation Tigers of Tamil Elam (LTTE) and has since been arbitrarily detained without charge. [/size]

[size=5]A Writ of Habeas Corpus was filed but had been continuously delayed as has a Fundamental Rights Application. Despite urgent appeals by The UN Working Group on Arbitrary Detention, tremendous ongoing support from the Irish government and members of the European Parliament the government of Sri Lanka has failed to take any action. [/size]

[size=5]Mr. Gunasundaram Jeyasundaram has now been in detention for over five years without being charged or, in fact, produced before any court of law. At present he is detained at the Magazine Remand Prison in Colombo. This case is yet another illustration of the exceptional collapse of the rule of law in the country.[/size]

http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=2669:sri-lankan-born-irish-citizen-detained-for-five-years-without-any-charges&catid=1:general&Itemid=29

  • தொடங்கியவர்

[size=6]Gota’s Secret Mission to South Africa Revealed[/size]

GOTA.jpg

[size=5]( November 04, 2012, Cape Town, Sri Lanka Guardian) The Secretary of Defence, Gothabya Rajapaksa has secretly concluded a mission to the Republic of South Africa just few days before a team from the Rajapaksa regime started an official visit to the African nation, a reliable source in the Sri Lanka's External Affairs exclusively told the Sri Lanka Guardian. [/size]

[size=5]Following this susccessful mission by Gothabaya, on October 27th, Saturday Vinayagamoorthi Muralidaran, Nimal Siripala de Silva, Anura Prayadarshana Yapa, Neomal Perera, Faizer Musthapa and Janaka Bandara were in South Africa for a whole week.[/size]

[size=5]This visit to the Mandela Nation was timed before Gothabaya's recent visit to India. It is increasingly visible that India has been sidelined by the Rajapaksa regime in search of an alternative within the non-aligned movement. One will have to wait and see how this strategy will play out in the coming months especially at the UNHRC in March 2013.[/size]

http://www.srilankaguardian.org/2012/11/gotas-secret-mission-to-south-africa.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.