Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகளைத் தப்ப ஓட வைத்து அவர்களைக் கொண்டு யாரையாவது போட்டுத்தள்ளப் போகிறார்களோ தெரியாது.. :rolleyes:

இராணுவம் என்பது அரசிற்கு கட்டுப்பட்ட ஒரு யந்திரம் ,கனேடிய கார்ப்பரின் இன்றைய கொங்கொங் உரை கேட்டேன் .கனேடிய மக்கள் இன்று இவ்வளவு சுதந்திரமாக ஜனநாயமாக வாழ்வதற்கு இராணுவம் கொடுதவிலைதான் கரரணம் என்றார் .இலங்கை இராணுவம் கூட தாம் செய்யும் இந்த அடாவடி அத்துமீரல்களை தாம் நாட்டை காக்கின்றோம் என்றுதான் செய்கின்றார்கள் .அவர்கள் அரசுக்கு எதிராக திரும்புவதென்பது சாத்தியமற்றது .அவர்கள் அரச விசுவாசிகள் .

அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள் என நான் குறிப்பிடவில்லை. பெரும்பான்மை இனத்தின்மீதே கைவைக்கத் தயங்கமாட்டார்கள் என்றே கூற விழைந்தேன்.

பிரேமதாச காலத்தில் ஏற்கனவே நடந்ததுதான். வடக்கில் சண்டைபிடிக்க ஆள் இல்லாவிட்டால் வேறு எங்கேயாவது நோண்டத்தான் பார்ப்பார்கள்..

  • Replies 60
  • Views 4.4k
  • Created
  • Last Reply

[size=6]Sri Lankan prisoners killed 'execution-style' (radio aust.)[/size]

[size=5]A Sri Lankan civil rights group says prisoners were killed "execution-style" during a riot on Friday, and has joined opposition calls for an independent inquiry into the riot that left 27 convicts dead![/size]

http://www.radioaust...onstyle/1044278

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறை வன்முறைகளை தவிர்த்திருக்கலாம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 நவம்பர், 2012 - 17:39 ஜிஎம்டி

தாம் ஏற்கனவே முன்வைத்திருந்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியிருந்தால் வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை தவிர்த்திருக்கலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் டீ.ஈ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், மனித உரிமை, கொலை, புனர்வாழ்வு, வன்முறை

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த தமது குழுவினர் சமர்பித்த அறிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளிடமிருந்து பதில் நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த கலவரம் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளின் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்த கவலைகளை அடுத்து அங்கு சென்ற தமது குழுவினர் பல பரிந்துரைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு முன்வைத்திருந்ததாக ஆனந்தராஜா சுட்டிக்காட்டினார்.

'ஆணைக்குழு விசாரணை நடத்தும்'

வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த ஆயுத வன்முறைகளில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும், அப்போது கலவரத்துக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்களில் ஒருவரான ஆனந்தராஜா தெரிவித்தார்.

இதேவேளை, கைதிகள் சிலர் சிறைச்சாலை மோதல்கள் முடிந்தபின்னர் சிறைக்கூடத்திலிருந்து கூட்டிச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக சில கைதிகளின் உறவினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பற்றி வினவியபோது, அதுபற்றி ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்றும் அதுபற்றியும் தமது விசாரணைக் குழு ஆராயும் என்றும் ஆணையாளர் டீ.ஈ. ஆனந்தராஜா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையில் சிறையில் நடக்கும் வன்முறைகளுக்கு சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

சிறைகளில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகள், ஆயுட்தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என பல தரப்பினரையும் ஒரே வளாகத்தில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை அதிகாரிகளிடம் தமது ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறைச்சாலைகளை நகரப்புறங்களுக்கு வெளியில் அமைக்கவேண்டும் என்று தான் கருதுவதாகவும் இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபரான, தற்போதைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆனந்தராஜா பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான பரிந்துரைகளும் தமது ஆணைக்குழுவின் கவனத்துக்கு வந்திருப்பதையும் ஆனந்தராஜா உறுதிப்படுத்தினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121112_welikadahumanrights.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடைச் சிறையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்

13 நவம்பர் 2012

கைதிகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளது :

வெலிக்கடைச் சிறையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறையில் இருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலையில் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தப்பிச் சென்றவர்களில் பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறைகளில் இருந்த அலுமாரிகள் மற்றும் லாச்சுகளை உடைத்து அதில் இருந்த பணம் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கைதிகள் ஓய்வு அறைகளில் இருந்த அதிகாரிகளின் சாதாரண உடைகள் மற்றும் சீருடைகளை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சீருடைகளை அணிந்து தப்பிச் சென்றவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி சம்பவத்தை அடுத்து, அதிகாரிகளில் பலர் நேற்று பணிக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனால் கைதிகளின் எண்ணிக்கையை உரிய முறையில் கணக்கிட முடியாது போயுள்ளது. அத்துடன் அதிகாரிகள் கடமைக்கு திரும்பாததன் காரணமாக கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

கைதிகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளது :

வெலிக்கடை சிறையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக கைதிகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதுடன், விலங்குகள், சங்கிலிங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதால், கைதிகள் எவரையும் நேற்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த முடியாது போனதாக வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் கொழும்பு நீதவான் நீதிமன்ற உள்ளிட்ட பல நீதிமன்றங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாததால், நீதிமன்றங்களுக்கு நேற்று எற்பட்ட அசௌகரியங்களுக்கு அத்தியட்சகர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், நுகோகொட நீதவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டிய கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் பெயர் விபரங்களுடன் இந்த கடிதத்தை சிறைச்சாலை அத்தியடசகர் அனுப்பி வைத்துள்ளார்.

சிறைச்சாலையில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடமும் அழிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில், இன்றைய தினம் கைதிகளையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நிலைமையினை கவனத்தில் கொண்டு கைதிகளை வேறு ஒரு தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் அத்தியட்சகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85371/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை வன்முறையினை கட்டுப்படுத்வே படையினர் அனுப்பப்பட்டார்கள்-கோட்டபாய.

நவ 13, 2012

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே சிறப்பு படையினர் அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் சிவில் நிர்வாகம் இடம்பெற்று வரும் நிலையில் காவல்துறை மற்றும் படையினரின் தலையிட்டினாலேயே கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முண்ணனி குற்றம் சுமத்தியிருந்தது.

அத்துடன் இது தொடர்பான அறிக்கையொன்றையும் மக்கள் விடுதலை முண்ணனியின் நாடாளுமன்றகுழு தலைவர் அனுர திஸாநாயக்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே சிறைச்சாலைகளில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து திடீர் பிரசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை வழமை.அது போலவே குறித்த சிறைச்சாலையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இங்கு இடம்பெற்ற வன்முறையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்தே படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலுங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

http://www.sankathi24.com/news/24410/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வெலிக்கடை சிறை கலவரத்தை தடுத்திருக்கலாம் - டீ.ஈ. ஆனந்தராஜா[/size]

[size=3]

[size=4]வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை தடுத்திருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் டீ.ஈ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். சிறைச்சாலை நிலைமைகள் தொடர்பில் முன்வைத்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size][/size]

[size=3]

[size=4]பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்தியிருந்தால் இந்த உயிர் பலிகளை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=3]

[size=4]மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நிலைமைகளை நேரில் அவதானித்து இது குறித்து அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்திருந்த போதிலும் துரதிஸ்டவசமாக இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.[/size][/size]

[size=3]

[size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த ஆயுத வன்முறைகளில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கலவரத்துக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3]

[size=4]இதேவேளை, மோதல்களின் பின்னர் கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்பட்;டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size][size=3]

[size=4]http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85368/language/ta-IN/article.aspx[/size][/size]

[size=5]வெலிக்கடை சிறையில் இந்திய அதிகாரிகள் ஆய்வு[/size]

[size=4]இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர்ப்பகுதியான வெலிக்கடையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறைக்காவலர்களுக்கும், கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியாகினர். [/size]

40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வெலிக்கடை சிறையில் உள்ள இந்தியர்கள் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெலிக்கடை சிறையில் 38 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-085100849.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட கைதிகளின் விபரம்.. [/size]

welikade-death-27-150.jpg

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தில் தமிழ்க்கைதி ஒருவரும் முஸ்லிம் கைதிகள் மூவரும் உயிரிழந்துள்ளனர். வெலிக்கடைச் சிறையில் பலியான கைதிகளின் விரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமான் என்ற தமிழ்க்கைதியொருவரும் அடங்குகின்றார்.அத்துடன் முஸ்லிம் கைதிகள் மூவரும் பலியாகியுள்ளனர்.

இதே வேளை இந்த 27 பேரினதும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 22 பேரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளின் பின்னர் அச்சடலங்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களின் விபரங்கள் வருமாறு,

01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)

02. கமகே சமந்த பெர்ணான்டோ

03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)

04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)

05. ரணசிங்க ஆராச்சிகே ஜனக வசந்த (ஹொரண)

06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)

07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிசை)

08. ராமநாதன் பாலபெருமான் (பண்டாரவளை)

09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)

10. மலிந்த நிலேத்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)

11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜூ ஸ்ரீ (பிலியந்தலை)

12. நிர்மல அத்தபத்து (பிலியந்தலை)

13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)

14. சுசந்த பெரேரா (ரத்மலானை)

15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)

16. மலித் சமீர பெரேரா எனும் கொன்ட அமித் (தெஹிவளை)

17. திஸ்ஸ குமார (கேகாலை)

18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)

19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)

20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார

21. வல்லகே லலத்த விஜேசிறி (காலி)

22. ரத்னவீர படபெதிகே வெஸ்லி (காலி)

23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)

24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)

25. மொஹமட் ரம்சதீன் தௌபர் (அக்கரைப்பற்று)

26. கன்னலு பெருமாராச்சிகே பிரியந்த (கரத்தெனிய)

27. லியனாராச்சிகே அநுர (பொரலஸ்கமுவ)

இதே வேளை சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறைஅதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வார்ட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டி விட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் இந்த முயற்சிகள் தோல்வி கண்டன. கலவரத்தின் தப்பி சென்றவர்களில் ஏழு பேர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். அத்துடன் தப்பிச் சென்றவர்களை தேடும் நடவடிக்கைகளை பொரளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

எல்மண்டபத்திலிருந்த கைதிகள் சுவரில் துவாரத்தையிட்டு அதனூடாக தப்பி போனதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இதுவே ஆயுத மோதலுக்கு வழி வகுத்துள்ளது என கூறப்படுகின்றன. இங்கிருந்து கடுங்குற்றமிழைத்த பலர் தப்பி சென்றுள்ளனர். அதே சமயம் இவர்கள் றைபில் ரக துப்பாக்கிகள் 82 யையும் அரை தன்னியக்க துப்பாக்கிகளையும் கைப்பற்றினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=70082&category=TamilNews&language=tamil

சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

100-150க்கு மேலை முடிஞ்சுது போலை கிடக்குது. வலு கூலாய் ஓடிவிட்டாங்கள் என்று புறூஃப் வக்கிறாங்கள். செத்த தமிழரை வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டர்கள் என்று கணக்கு காட்டிய சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கம் என்று வாய் திறக்காமல் இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பில் HRCSL விசாரணை

14 நவம்பர் 2012

வெலிக்கடைச் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த வாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் வெலிக்கிடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்ய உள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் தமது ஆணைக்குழுவிற்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க பரிந்துரைகள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்ற விசாரணையாக இதனைக் கருத முடியாது என்ற போதிலும் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வகையில் இந்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85398/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.