Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை திரும்பிய ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கருணாநிதி தலைமையில் பெரும் வரவேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stalin1-111112-150.jpg

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையில் வழங்கி விட்டு மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் இன்று காலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கடந்த மாதம் 31-ம் தேதி துபாய் வழியாக அமெரிக்கா சென்றனர். கடந்த 1-ம் தேதி ஐ.நா. துணை பொதுச் செயலாளரை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினர். 3-ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

பின்னர் லண்டனில் கடந்த 3 நாட்களாக நடந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் லண்டனில் இருந்து துபாய் வழியாக இன்று காலை 8.20 மணிக்கு சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் பலர் விமான நிலையத்துக்குள் சென்று ஸ்டாலினை வரவேற்றனர்.

விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறிய மேடைக்கு தாரை, தப்பட்டை முழங்க ஸ்டாலினை அழைத்து வந்தனர். மேடையில் அவர் ஏறியதும் திமுக முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு சால்வை, ஆளுயர மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் அளிப்பதற்காக நானும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் நியூயார்க் சென்றோம். ஐ.நா. துணை பொதுச் செயலாளரிடம் தீர்மானங்களை வழங்கினோம். அதன் பிறகு ஜெனிவாவில் நடந்த மனிதஉரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் லண்டனில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டு இலங்கை தமிழர் நல்வாழ்வு மற்றும் அவர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி பேசினோம்.

எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். மத்திய இணை அமைச்சர்கள் காந்திசெல்வன், பழனிமாணிக்கம், எம்.பி.க்கள் கனிமொழி, வசந்தி ஸ்டான்லி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வரவேற்பு மேடையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நின்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலுவுக்கு இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன், தி.க. தலைவர் வீரமணி முன்னிலை வகிக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட பலர் பாராட்டி பேசுகின்றனர்.

http://www.seithy.co...&language=tamil

[size=4]புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர தமிழக கட்சிகளால் முடியும், அதற்கு அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம். [/size]

[size=6]Indian govt. would have collapsed if it had voted for SL at UN sessions[/size]

[size=5]Q: There have been three main schools of thought regarding India’s vote in favour of the United Nations Human Rights Council resolution on Sri Lanka in March 2012: first, that it was a result of what has come to be called ‘coalition compulsions;’ second, that it is as a result of pressure from the USA particularly against the backdrop of China and India competing to becoming a superpower in a potential Asian Century; and third, that it is because of so-called ‘broken promises’ which New Delhi has taken to heart. Could you clarify for the Sri Lankan audience what the rationale was behind India’s vote in favour of a resolution on Sri Lanka in Geneva this year?[/size]

[size=5]RM: Here again, I revert to the previous point I made in response to your question on governance. The power of information for governance and foreign policy decisions cannot be exaggerated. If India had been informed that efforts at reconciliation were underway in Sri Lanka, the result would most certainly have been an abstention in Geneva in March 2012. The government of Sri Lanka has made giant strides in the areas of reconstruction, rehabilitation and resettlement which undoubtedly contribute to reconciliation. If the information had been clearly communicated the Central government in New Delhi would have convinced its coalition in Tamil Nadu that progress was being sought in one way or another, despite the challenges and impediments that trouble the process of arriving at a permanent political settlement.

The Tamil Nadu factor[/size]

http://www.dailymirror.lk/opinion/172-opinion/23401-indian-govt-would-have-collapsed-if-it-had-voted-for-sl-at-un-sessions.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

[size=5]கலைஞர் வரவேற்பு : அழகிரி புறக்கணிப்பு[/size]

[size=4]"டெசோ' மாநாட்டு தீர்மான நகலை, ஐ.நா., சபையில் அளித்து விட்டு சென்னை திரும்பிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, கலைஞர் தலைமையில், தொண்டர்கள், விமான நிலையத்தில் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் அழகிரி புறக்கணித்தார்."டெசோ' மாநாட்டு, தீர்மான நகலை ஐ.நா., சபையில் வழங்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த மாதம், 31ம் தேதி நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். அதன் பின், லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் [/size]

[size=4]பங்கேற்று விட்டு, நேற்று காலை, 8:20 மணிக்கு, ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலினை, தி.மு.க., தலைவர் கலைஞர் வரவேற்றார். தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் அழகிரி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.[/size]

[size=4]ஸ்டாலினை வரவேற்க, 300க்கும் மேற்பட்ட கார்கள் விமான நிலையத்திற்குள் வந்ததால், வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. கட்சி கொடி கட்டிய வாகனங்கள், சுங்கவரி செலுத்தவில்லை. சில இடங்களில் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதிக கூட்டம் இருந்ததால், விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.[/size]

[size=4]ஸ்டாலினை வரவேற்க வந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், விமான நிலையத்தின் வருகை முனையத்தில், காத்திருந்த நிலையில், சில தி.மு.க., நிர்வாகிகள் மட்டும், விமான நிலையத்திற்குள் சென்றனர்.தங்களுக்கு தெரிந்த விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறையினர் மூலமாக, இவர்கள் விமான நிலையத்திற்குள்ளே சென்று, ஸ்டாலினுடன் வெளியே வந்தனர். இதனால், விமான நிலைய உள்வளாகத்திலும், கட்சி கரை வேட்டி அதிகமாக காணப்பட்டது.[/size][/size]

[size=4]http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=85957[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.