Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.[/size]

நேசக்கரம் முன்னெடுக்கும் திட்டங்களில் எமது மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் வகையிலான திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். தற்போது கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் கிழக்குமாகாணத்தில் 8ஆயிரம் மாணவர்களுக்கானதும் வடமராட்சி கிழக்கில் 150 வரையான மாணவர்களுக்குமான முன்னோடி பயிற்சிகளை நடாத்திக் கொண்டிக்கிறோம்.

ஓவ்வொரு பாடங்களுக்குமான வினாவிடை மற்றும் இலகுவான குறிப்புகள் அடங்கிய பிரதிகளைத் தயாரித்துள்ளோம். அதிகமான இடங்களில் தனியார் கல்விநிலையங்கள் சென்று படிக்க முடியாத அல்லது மின்சார வசதிகள் அற்ற இடங்களைச் சேர்ந்த மாணவர்களை மாலை நேரங்களில் பாடசாலைகளிலும் குறித்த சில இடங்களிலும் அழைத்து சமூக ஆர்வம் மிக்க ஆசிரியர்கள் மூலமும் உயர்தரம் கற்கும் மாணவர்களையும் இணைத்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இம்மாணவர்களின் நன்மை கருதி தொலைபேசி மூலம் பிள்ளைகளுக்கான பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் தெளிவின்மைகளை கற்பிக்க ஆசிரியர்களையும் ஒழுங்கு செய்து அதற்கானதொரு இடவசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். இதுவரையில் இலங்கையில் இத்தகையொரு வழிமுறை இல்லை. எங்கிருந்தும் மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுவதற்காக இத்திட்டத்தை ஒருங்கமைத்துள்ளோம்.

குறிப்பாக பரீட்சைகாலங்களில் 24 மணிநேரமும் இச்சேவையைத் தொடரும் முதல் முயற்சியாக அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர சதாரணதரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு முதற்கட்ட ஒழுங்குகளை ஆரம்பித்துள்ளோம்.

இவ் ஒன்லைன் கல்விக்கு 10தொலைபேசி இணைப்புகளுக்கும் 55ஆயிரம் ரூபாவும் (அண்ணளவாக 350€) ஒருமாதத்திற்கு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 25ஆயிரம் ரூபாவும் (160€) உதவியாக தேவைப்படுகிறது. தொலைபேசி இணைப்புக்காக ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஆசிரியர் கொடுப்பனவு மட்டும் மாதாந்த வழங்க வேண்டும். இத்திட்டம் மூலம் எப்பாகத்திலிருந்து எங்கள் தமிழ் மாணவர்கள் தமக்கான கல்வியுதவியை பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினை வழங்க விரும்பும் மனிதநேயர்களை இத்திட்டத்தில் இணையுமாறு வேண்டுகிறோம்.

ஓன்லைன் கல்வித்திட்டத்திற்கான திட்டஅறிக்கை வருமாறு :-

DSCF3262.jpg

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Skype ID – Shanthyramesh

Mobile – 0049 1628037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினை வழங்க விரும்பும் மனிதநேயர்களை இத்திட்டத்தில் இணையுமாறு வேண்டுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.