Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானே கள்வன்

Featured Replies

[size=4]நீங்கள் இருக்கிற படியாலதான் ஆமி ஓரளவுக்கு இடம் வலம் பார்த்துக் குண்டு போடுறான். நீங்களும் இல்லையெண்டால் அவங்கள் கண் மண் பாராமல் எங்களையும் குழந்தை குஞ்சுகளையும் குதறிப் போடுவாங்கள் என்று ஒப்பாரி வைத்தனர்.[/size]

[size=2]

[size=4] வீதிகளுக்குக் குறுக்கே படுத்திருந்து, வெள்ளை வாகனங்களை நகர முடியாதபடி மனிதப் போராட்டத்திலும் இறங்கினர். ஈடிப்பஸ், கிரேக்கப் புராணங்களின் பக்கங்களை கண்ணீரில் தோய்த்தெடுத்த துயர் நாயகன். நாட்டின் அதிமேன்மை மிக்க சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட பின்னர், வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடத் தொடங்கின.

இதற்கு என்ன காரணம் என்று அறிந்துவரத் தனது மைத்துனனான கிரியோனை வானுலகுக்கு அனுப்பி வைத்தான். கடவுளர்களிடம் விசாரித்ததில் மாபாவி ஒருவனாலேயே இவ்வாறு நாட்டில் பஞ்சம் தோன்றியுள்ளது என்பது தெரியவந்தது. இதை மன்னனிடம் சொன்னான் கிரியோன். குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது.

கடைசியில் மன்னனான ஈடிப் பஸ்ஸே அந்த மாபாவி என்பது தெரியவந்தது. விதி வசத்தால், தனது தந்தையைக் கொன்று, தாயையே தனது மனைவியாக்கியும் கொண்டிருந்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

ஆனால் இந்தப் பாவங்களைத் தான் செய் திருந்ததை ஈடிப்பஸ் உணர்ந்திருக்கவில்லை. இறுதியில் தனது பாவங்களுக்குப் பரிகாரமாக தனது கண்களைப் பிடுங்கி எறிந்து, தற்கொலை செய்து கொள்கிறான் ஈடிப்பஸ். (தனது தாயையே மணந்தவன் ஈடிப்பஸ் என்பதாலேயே, தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பை "ஈடிப் பஸ் சிக்கல்' என்றழைப்பர்).

கிரேக்கப் புராணத்தின்படியும், சோபோ கிளிஸின் நாடகப் பிரதியின்படியும் ஈடிப்பஸ் இறந்திருந்தாலும், வெவ்வேறு வடிவங்களில் யுகங்கள் தோறும் அவன் பிறப்பெடுத்துக் கொண்டே வருகின்றான் போலும்.

அந்த வரிசையில் ஈடிப்பஸ்ஸின் இப்போதைய பிறப்பு வடிவம் ஐ.நா.சபை. இலங்கையில் நடைபெற்ற, இறுதிக்கட்டப் போரின்போது, நிகழ்ந்த மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட சகல விடயங்களையும் ஆராய்வதற் காக ஐ.நா. சபை ஒரு உள்ளக விசாரணையை நடத்தியது.

புலிகளா? படையினரா? அதிகளவான குற்றங்களைப் புரிந்துள்ளார்கள் என்பதையும் இதன் போது, ஐ.நாவின் செயற்பாடு எவ்வாறு இருந்தது என்பதையும் பிரேத பரிசோதனை செய்து பார்ப்பதே இந்த விசாரணையின் முக்கிய கூறாக இருந்தது.

ஆனால், விசாரணையின் முடிவில் ஐ.நா. கலியுகத்து ஈடிப்பஸ்ஸாகத் தனது கண்ணை தானே பிடுங்கிக்கொண்டு, சாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா. சபையின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம் என்று "மையிட்ட பின்னரும்'' ஐ.நாவின் உள்ளக அறிக்கை உண்மையை கக்கி இருக்கிறது (இந்த அறிக்கையின் அநேக பக்கங்கள் கறுப்பு மையிடப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டுள்ளன)

இந்த விடயம் உலக நாடுகளுக்கும், ஐ.நாவின் பொதுச் செயலருக்கும் ஏற்கனவே தெரிந்திராத அதிர்ச்சி தரக்கூடிய விடயமாக இருக்கலாம். ஆனால், தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு ஐ.நாவும் காரணம் என்பது வன்னி மக்களுக்குப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே நன்கு தெரியும்.

வன்னி மக்களின் மீட்பர்கள் தாமே என்பதுபோல, சமாதான காலத்தில் புழுதியைக் கிளப்பிய படி வெள்ளை வாகனங்களில் அறம்புறமாக ஓடித்திரிந்தன ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள். போர் தன்னுடைய உக்கிர மூச்சால் தமிழ்ப் பகுதிகளைச் சுட்டெரிக்கத் தொடங்கிய போது, அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

"சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே, அவர்கள் போர் நடக்கும் இடங்களிலிருந்து வெளியேற வேண்டும்'' அரசின் இந்த அறிவிப்புக்கு மறுபேச்சுப் பேசாமல், இதற்காகவே இத்தனை நாளும் காத்திருந்தவர்கள் போல தமது பெட்டி படுக்கைகளோடு, ஐ.நா. நிறுவனங்களும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் வன்னியிலிருந்து கழன்றுவிட்டன.

தொண்டு நிறுவனங்கள் தம்மைக் கைவிட்டுச் செல்லும் செய்தி கேட்டதும் மக்கள் கதறி அழுது "எங்களை விட்டுப் போகா தைங்கோ. நீங்கள் எல்லாரும் போனால் இஞ்சை நடக்கிற அநியாயங்களை உலகத்துக்குச் சொல்ல ஒருத்தரும் இருக்க மாட்டினம்.[/size][/size][size=2]

[size=4]நீங்கள் இருக்கிற படியால தான் ஆமி ஓரளவுக்கு இடம் வலம் பார்த்துக் குண்டு போடுறான். நீங்களும் இல்லையெண்டால் அவங்கள் கண் மண் பாராமல் எங்களையும் குழந்தை குஞ்சுகளையும் குதறிப் போடுவாங்கள்'' என்று ஒப்பாரி வைத்தனர்.

வீதிகளுக்குக் குறுக்கே படுத்திருந்து, வெள்ளை வாகனங்களை நகர முடியாதபடி மனிதப் போராட்டத்திலும் இறங்கினர். குழந்தைகளின் கேவலும், உதவி கேட்டு அழும் ஓர் இனத்தின் ஒப்பாரியும் ஐ.நாவுக்கு கேட்கவே இல்லை.

இப்போது, பெரிய சட்டம்பி போல, இலங்கையை ஜெனிவாவில் இருந்தி எழுப்பும் இதே ஐ.நாதான் அப்போது அரசு வன்னியில் இருந்து ""வெளிக்கிடச் சொன்னதும்'' களிசானால் சிறுநீர் வழிந்தோடப் பயத்தோடு, கொழும்புக்குப் பறக்கச் சொன்னது தனது பணியாளர்களை.

"போர் நடக்கும் இடத்தில் இருந்து எங்களை போகச்சொல்ல என்ன காரணம்?'' என்று இலங்கையின் சட்டைக் கொலரைப் பிடித்து, கொஞ்சம் "உறுக்கி' ஐ.நா. கேட்டிருந்தால் இலங்கை வெலவெலத்துப் போயிருக்கும். போரின் போது தம்மைக் கண்காணிக்கச் சர்வதேசப் பிரதிநிதிகள் போர்ப் பூமியில் இருக்கிறார்கள் என்ற பயத்தில் தன்னால் நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரழிவுகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியிருக்கும்.

வெள்ளைக் கொடிப் படுகொலைகளில் இவ்வளவு குருதி பாய்ந்திராது. கும்பல் கும்பலாக நிர்வாணமாக்கப்பட்டு, கண்களும் கைகளும் கட்டப்பட்டு, இத்தனை பேர் ஈரநிலத்தில் வெடிவாங்கிச் செத்திருக்கமாட்டார்கள். மிகக் குறைந்தோருக்கே அந்தப் "பேறு' கிடைத்திருக்கும். தம்மை ஐ.நா. கைவிட்டுப் போனாலும் மக்கள் கடைசியில் தம்மை மீட்க அவர்கள் வருவார்கள் என்று நம்பினர்.

"இந்த நரகத்திலிருந்து மீட்டுச்செல்ல ஐ.நாவின் கப்பல் முள்ளிவாய்க்காலுக்கு வரும்'' என்று நம்பியபடியே ஷெல்லுக்கும் குண்டுக்கும் இரையாகி மூச்சிழந்து போனவர்கள் பலர்.

ஆனால் பூம் பூம் மாடுபோல இலங்கை சொல்வதெற்கெல்லாம் தலையாட்டி, மக்களை உதறிவிட்டு, சென்ற ஐ.நா.வுக்கு மனச்சாட்சி இப்போது உறுத்தத் தொடங்கிவிட்டது.

யேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைவித்த பாவம், தன்னைச் சார்ந்து விடக்கூடாது என்பதற்காக கைகளைக் கழுவிக் கொண்டான் பிலாத்து மன்னன். அவனைப் போலவே, தனது பாவங்களையும் கழுவி, எப்போதும் கரங்கள் கறைபடாத ஒன்றுதான் என்று நிரூபிக்கப் பாடுபடுகிறது ஐ.நா.தன்னை வன்னியில் செய்த ஊழ்வினை வந்து உறுத்தக் கூடாது என்பதற்காகவே, "தருஸ்மன்', "பெற்றிக்' என்று நிபுணர்கள் தலைமையில் குழுக்களை நியமித்து, அறிக்கைகளை வெளியிடுகிறது.

இந்த அறிக்கைகளில் பெரும்பகுதி, மையிடப்பட்ட பின்னும் எஞ்சிக்கிடக்கும் சொற்கள் "குற்றவாளி நீயே'' என்று ஐ.நா. நோக்கியே தமது சுட்டு விரல்களைப் பலமாக நீட்டுகின்றன. வேறு வழியின்றி, கண்ணகி முன் தலைகுனிந்த பாண்டிய மன்னனைப்போல, பான் கீ மூனும் "யானே கள்வன்'' என்று உண்மையை முதன் முறையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

தவறை காலங்கடந்து உணர்ந்து கொள்வதால், முள்ளி வாய்க்காலில் மரித்துப் போனவர்களின் உயிர்களோ, சிதைந்துபோன ஆயிரம் ஆயிரம் குடும்பங்களின் ஆனந்த மயமான வாழ்வோ திரும்பப் போவதில்லை. ஆனாலும் ஐ.நாவும், போரின் பிரதான குற்றவாளிகளும் தமக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது இனிமேல், வேறொரு நாட்டில் இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தோற்றுவிக்காதிருக்க வழிவகுக்கும்.

ஈடிப்பஸ் மானமுள்ளவன். மாபாவி தானேதான் என்று தெரிந்ததும் கண்களைப் பிடுங்கி எறிந்து உயிர் விட்டான். பாண்டிய மன்னனும் அவனைப் போலத்தான். தவறு தன்னுடையதே என்று அறிந்த கணத்திலேயே ஆவி துறந்தான். ஐ.நாவுக்கு மானம் இருக்கிறதா இல்லையா என்பதனை இனிவரும் காலங்களே சொல்ல வேண்டும்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5098241318796652

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.