Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்போருக்கு எதிரான அதிகாரத் தரப்பின் சினம்

Featured Replies

[size=4]அரசமைப்பு விதிகளால் ஏற்பட்ட தடைகளை நீக்கி திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்காததன் காரணமாக[/size]

[size=2]

[size=4]தற்போது ராஜபக்ஷ சகோதரர்களது கோபம் நீதித்துறை மீது பாய்ந்துள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]கோதர அரசியல் கூட்டுத் தரப்பின் விருப்புக்களுக்கு, வாய்ச் சவடால்களுக்கு, கற்பனைக் கருத்துக்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கருத்து வெளியிட்டோர், செயற்பட்டோர் நரகத்து நெருப்புக்கு நிகரான ராஜபக்ஷமாரின் கோபாக்கினி குறித்து நன்கறிவர். [/size][/size]

[size=2]

[size=4]நாட்டையே தலைகீழாக மாற்றும் ராஜபக்ஷமாரின் அரசியற் பயணத்தை எதிர்ப்பது, தொழில் இழப்பு, உயிர் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு உட்படும் நிலையைத் தோற்றுவிக்கும் என்பதை மாணவர், தொழிலாளர்கள், தமிழ்ப்பொதுமக்கள், சிங்கள விவசாயிகள், ஊடகவியலாளர்கள், இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பு மீனவர்கள் மற்றும் கொழும்பின் சேரிவாழ் வறிய மக்கள் எனப் பலரும் அனுபவபூர்வமாக கண்டனுபவித்துள்ளனர்.[/size][/size]

[size=2]

[size=4]ராஜபக்ஷ தரப்பினரின் இந்த அடிப்படை நிலைப்பாட்டை, நாட்டின் அதியுயர் நீதித்துறை அதிகாரத்தரப்பினரும் அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. ராஜ பக்ஷ சகோதரர்களது தரப்புக்கு ஆதரவாகச் செயற்படுவோர் தாம் இழைக்கும் குற்றங்களிலிருந்து விடுபட்டு முன்னேறிச் செல்ல இயலும். [/size][/size]

[size=2]

[size=4]அதேவேளை எதிராகச் செயற்படுவோர் குற்றமேதும் இழைக்காத போதிலும் அபாயத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதும் இன்று எழுதாத விதியொன்றாக ஆகிவிட்டுள்ளது. அரசமைப்பு விதிகளால் ஏற்பட்ட தடைகளை நீக்கி திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்ட மூலத்தை சட்டமாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்காததன் காரணமாக தற்போது ராஜபக்ஷ சகோதரர்களது கோபம் நீதித்துறை மீது பாய்ந்துள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]நீதித்துறை வெளிப்படுத்திய இந்தப் பாதகமான பிரதிபலிப்பை ராஜபக்ஷ சகோதரர்கள் தமது அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தலாகவே கருத்துகின்றனர். அவர்கள் தமது வழமையான போக்கின் படி தற்போது அரசமைப்பு மற்றும் நீதித்துறையின் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து அவற்றை நாசப்படுத்தும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர்.[/size][/size]

[size=2]

[size=4]பொய்களும், வெற்று வேட்டுப் பேச்சுக்களும் சகல அரசியல் வாதிகளது செயற்பாடுகளின் ஓர் அங்கமே. அதிலும் ராஜபக்ஷ சகோதரர்கள் இவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவர்கள். அரசமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தை முன்வைத்த போது பொது மக்கள் தரப்பில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய வேளை, தமது சுருதியைக் குறைத்து அரசமைப்புக்கான 18 ஆவது திருத்த யோசனையை அரசு கைவிடுவதாக உறுதியளித்தனர்.[/size][/size]

[size=2]

[size=4]அது குறித்து பொதுமக்களது அக்கறை குறைவடைந்து தீவிர எதிர்ப்பு நிலை நலிவடைந்த பின்னர், தருணத்தைப் பயன்படுத்தி அச்சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டனர். அதேபோன்று, பிரதம நீதியரசருக்கு எதிராக அரசு குற்றவியல் பிரேரணை முன் வைக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போது, அவர்கள் அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்தனர். [/size][/size]

[size=2]

[size=4]அத்தகைய திட்டமெதுவும் அரசுக்குக் கிடையாதெனவும் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையில் பிளவேற்படுத்தி நாட்டின் ஸ்திர நிலையைக் குலைப்பதற்காக சில சக்திகள் இவ்விதத் தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அமைச்சர் ஸ்ரீ பால டி சில்வா தெரிவித்தார். [/size][/size]

[size=2]

[size=4]அவர் அவ்விதம் கருத்து வெளியிட்ட வேளையில் குறிப்பிட்ட பிரேரணையின் சட்ட நகல் தயாரிக்கப்பட்டிருந்திருக்கக் கூடும். புதிய "கோப்' அறிக்கை சில "தவறான கொடுக்கல் வாங்கல்கள்'' குறித்து தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்திருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மில்லியன் ரூபா பெறுமதியான 1137 பங்குகள் மக்கள் வங்கியால் கொள்வனவு செய்யப்பட்டமை, 15.6 மில்லியன் டொலர் பெறுமதியான பணமுறி களில் மத்தியவங்கி முதலீடு செய்தமை போன்றவை இவற்றுள் அடங்கும். [/size][/size]

[size=2]

[size=4]பிரதம நீதியரசர் அரசமைப்பு விதிகளைக் கணக்கில் எடுக்காது "திவிநெகும' சட்ட மூலத்தை அனுமதிக்க இடமளித்திருப்பாரானால் அவரது கணவரான பிரதீப் காரியவாசம் தேசிய சேமிப்பு வங்கியின் சகல சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தினாலும் அதற்காகத் தண்டிக்கப்படமாட்டார். இந்த முறையற்ற கொடுக்கல் வாங்கல்களில் ராஜபக்ஷ பரம்பரையைச் சேர்ந்தோர் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையெதுவும் எடுக்கப்பட்டிருக்காது என்பதைத் தெரிந்து கொள்ள விசேட அரசியல் ஞானம் தேவைப்படாது. [/size][/size]

[size=2]

[size=4]ராஜபக்ஷ தரப்பினரின் செயற்பாடுகளுக்கு இடமளித்திருந்தால் பிரதம நீதியரசர் சகல சட்ட விதிகளையும் புறந்தள்ளி பூரண சுதந்திரம் அனுபவிக்க வாய்பிருந்திருக்கும். சிலவேளை "தேசபந்து' அல்லது "தேசமானிய' கௌரவப்பட்டங்களையும் சிரமமின்றிப் பெற்றிருக்கலாம். [/size][/size]

[size=2]

[size=4]முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தாலும் எத்தகைய தவறைச் செய்திருந்தாலும் எவரைக் கொலை செய்திருந்தாலும், வாழ்நாள் பூராகவுமே ஓய்வூதியத்துடன் சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம்.[/size][/size]

[size=2]

[size=4]"எம்மை மிஞ்சி எந்தத்தலைவர்களும் கிடையாது. அரசமைப்புச் சட்டமோ, மனச்சாட்சியோ பெறுமதியற்றவை, நீங்கள் எங்களுக்குக் கீழ் பணிந்து நடந்தால் உங்களால் சகல சௌகரியங்களையும் அனுபவிக்க இயலும். அவ்விதம் நடக்கத் தவறினால் உங்களுக்கு எதுவும் கிட்டப் போவதில்லை'' என்பதே ராஜபக்ஷ தர்ம உபதேசத்தின் ஆரம்ப வாக்கியம். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது மிகச் சுலபம். [/size][/size]

[size=2]

[size=4]ஆனால் சட்டத்தையும், அதே சமயம் அரசமைப்பையும் மதிக்க வேண்டுமானால், மேற்கண்ட நிலைப்பாட்டின் முடிவு என்னவாகும்? ராஜபக்ஷ தரப்பின் கோபத்துக்கு ஆளாகாதிருப்பதற்காக நீதித்துறை தனது சுதந்திரத்தைக் கைவிட இயலுமா? அவ்வாறு அமையுமானால் நாட்டின் ஜனநாயக வாதம் அற்றுப் போக நேரிடும். நீதித்துறை கீழ்படியுமானால் திவிநெகும சட்ட மூலம் சுலபமாக நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடும். [/size][/size]

[size=2]

[size=4]அரசமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தின் மூலம் 17 ஆவது திருத்தம் ஒழிக்கப்பட்டமை போன்று, 19 ஆவது திருத்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தத்தின் பயன்பாடு இல்லாதொழிக்கப்படலாம். அதிகாரப் பரவலாக்கலை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அரச தரப்பிலுள்ள இடதுசாரி மற்றும் சிறுபான்மைத் தமிழ்க்கட்சிகள் எதிர்க்குமா என்பது தெளிவாக இல்லை. [/size][/size]

[size=2]

[size=4]வெளிப்படையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டு வரும் அவை சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களிக்கவும் கூடும். அதிகாரப் பகிர்வு நடைமுறையை ஒழிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளது கோரிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும். இலங்கைப் பிரதிநிதிகள் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை இங்கு முன்வைக்கப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவின் கோபத்தையோ, மேற்குலக நாடுகளின் கருத்துக்களையோ ராஜபக்ஷ தரப்பு கொஞ்சமேனும் கணக்கில் எடுப்பதில்லை. தாம் சீனாவின் ஆதரவைக் கொண்டிருக்கும் வரை தாம் எவருக்கும் அஞ்சப்போவதில்லை என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கக்கூடும். நிலவும் பிராந்திய அதிகாரப் போட்டியில் இலங்கை தானாக விரும்பி தூண்டில் முள்ளின் இரையாகப் போகிறதா?[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3165641520802648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.