Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இணைப்பாட்சி நிர்வாகமே - இந்திய அரசறிவியல் பேராசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இணைப்பாட்சி நிர்வாகமே - இந்திய அரசறிவியல் பேராசிரியர் [ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 09:18 GMT ] [ நித்தியபாரதி ]

Indo-lanka%20flages.jpg

இணைப்பாட்சி [federal] நிர்வாகத்தை படிப்படியாகச் செயற்படுத்தி, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை மீளவரையறுக்கும் போது மட்டுமே சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில், டெல்லி Jawaharlal Nehru பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசறிவியல்துறைப் போராசிரியர் Anuradha Mitra Chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

போரிலிருந்து மீண்ட சிறிலங்கா, நாட்டில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. வன்முறையற்ற வழியில், அரசியல் சார்ந்த போராட்டங்களை அமைதி முறையில் முன்னெடுத்து அதன் மூலம் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகவிருந்த பலரைப் புலிகள் கொலை செய்திருந்தனர். இவர்களில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்கா அரசாங்கம் மற்றும் புலிகள் அமைப்பு ஆகிய இரு தரப்பின் பாதிப்புக்களையும் சந்தித்த ஒரு கட்சியாக காணப்படுகிறது. இந்த உண்மையை சிறிலங்கா அரசாங்கம் அடையாளங் கண்டுகொள்ள வேண்டும்.

எதுஎவ்வாறிருப்பினும், யுத்தம் முடிவடைந்ததிலிருந்து என்ன நடந்தது? சிறிலங்கா அரசாங்கமானது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. இவ் ஆணைக்குழு போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்து அவர்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்ததன் பின்னர் இறுதி அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் சரியான வகையில் பொறுப்பளிக்கப்படாமை மற்றும் எந்தவொரு நீதியையும் வழங்காமை மற்றும் அனைத்துலக சமூகம், ஊடகம், ஐ.நா அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் கூட இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.

இதேவேளை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் சில ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக நாடு முழுவதிலும் தேர்தல்களை மேற்கொண்டதன் மூலம் நாட்டில் இயல்புநிலை நிலவுவதை காட்ட முற்பட்டது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. தமிழ் மக்கள் சிறிலங்காவுக்குள் சுயாட்சியைப் பெற்று வாழக்கூடிய இணைப்பாட்சி [federal] நிர்வாகத்தை உருவாக்குமாறு கூட்டமைப்பு கோரியது.

தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவால் ஆதரிக்கப்படும் 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமாகும். இவ்வாறான கோரிக்கைகளை கூட்டமைப்பு முன்வைத்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இவற்றை தனது தீவிர கவனத்தில் எடுக்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட்டு கௌரவத்துடன் வாழக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த நகர்வுகள் மிகவும் மந்தகதியிலேயே மேற்கொள்ளப்படுவது வேதனை தரும் விடயமாகும்.

இந்த யுத்தத்தில் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் மீறல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் வீரம் மிக்க அடையாளமாகக் காணப்பட்ட பெண்கள் போரில் பாதிக்கப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளாகவும், கெரில்லா நடவடிக்கைகளிலும் பங்கு கொண்ட தமிழ்ப் பெண்கள் மாவீரர்களான அதேவேளையில் அதேசமூகத்தைச் சேர்ந்த பெண்கள் யுத்தத்தின் பாதிப்புக்களையும் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் சிறப்பு கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆட்சி அதிகாரம், இராணுவ மயமாக்கல் போன்ற பல்வேறு மாற்றங்களால் தற்போது சிறிலங்காவில் இயல்புநிலை என்பது பாதிக்கப்படுகிறது. சிறிலங்காவில் ஆட்சியிலுள்ளவர்களின் அதிகாரப் போக்கு, அரச நிர்வாக கட்டமைப்பின் எதேச்சதிகாரப் போக்கு போன்ற பல்வேறு காரணங்கள் இயல்புநிலையை குழப்புகின்றன.

சிறுபான்மை தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அதிபர் மகிந்த ராஜபக்ச விருப்பங் கொண்டிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் இடத்தை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்க வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் விமர்சிக்கிறது. இதில் உண்மையில்லை. தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு, தற்போது அதிகாரப் பரவலாக்கலை கோரி நிற்கின்றனர்.

அதேவேளையில், புலிகள் அமைப்பால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் அங்கீகரிக்க வேண்டும். பன்முக, மதச்சார்பற்ற, இணைப்பாட்சி நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால், சிறுபான்மை மக்களின் உரிமைகளை அடையாளங் கண்டுகொள்வதுடன், தமது சிறுபான்மை மக்களின் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியா பெரும் பங்களிப்பு வழங்க முடியும் என்பதை அதிபர் ராஜபக்ச நன்கறிந்துள்ளார். அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை காட்டிவருகிறது. சிறிலங்கா அரசாங்கம் மீது இந்திய அரசாங்கம் அழுத்தம் வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலிலதா தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறார். சிறிலங்கா இராணுவத்தினனுக்கு இந்தியா இராணுவப் பயிற்சியை வழங்குவதை எதிர்த்து அண்மையில் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் இதனை மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக தொடர்ந்தும் முன்வைக்கிறார். கத்தியின் விளிம்பில் நடப்பது போன்றே தற்போது இந்தியாவும் சிறிலங்கா விடயத்திலும் செயற்பட வேண்டியுள்ளது. பல்லின, இணைப்பாட்சி [federal] நிர்வாக கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய, சிறுபான்மை மக்களினதும் மனித உரிமைகளையும் மதிக்கக் கூடிய சிறிலங்காவையே இந்தியா விரும்புகிறது.

மறுபுறத்தில், சிறிலங்காவின் உள்ளக அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவால் தலையீடு செய்ய முடியாது. இந்தியா சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால், சிறிலங்காவானது சீனாவின் உதவிகளைப் பெறுவதுடன், சீன இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் வழங்கி விடும் என்பது தொடர்பில் இந்தியா அச்சம் கொள்கிறது. ஆனால் அதேவேளையில், சீனாவானது சிறிலங்காவின் புவிசார் அரசியலில் இந்தியாவின் இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது.

இவ்வாறான சூழலில், இந்தியா, சிறிலங்கா விடயத்தை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கி அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அழுத்தத்தை வழங்கும் அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகள் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டியுள்ளது.

இணைப்பாட்சி [federal] நிர்வாகத்தை படிப்படியாகச் செயற்படுத்தி, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை மீளவரையறுக்கும் போது மட்டுமே சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இராணுவமயமாக்கல் தடுக்கப்பட்டு, பெண்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, புனர்வாழ்வு மற்றும் பங்களிப்பு வழங்கப்படுதல் உள்ளடங்கலான ஆட்சி சீர்திருத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். சிறிலங்காவின் தாராளவாதிகளும், சிறுபான்மையினரும் இந்தியா தமது பிரச்சினையில் சாதகமான பங்களிப்பு ஒன்றை வழங்கும் என நம்புகின்றனர். இந்தியா இந்த விடயத்தில் முழு முயற்சியை எடுப்பதுடன், இதனை நிறைவேற்ற வேண்டும்.

*Anuradha Mitra Chenoy is professor at the School of International Studies, Jawaharlal Nehru University.

http://www.puthinapp...?20121125107340

[size=5]to: chenoy@gmail.com

Subject: re:Ethnic rights in Sri Lanka[/size]

[size=5]Dear Prof. Anuradha Mitra Chenoy, [/size]

[size=5]The School of International Studies, Jawaharlal Nehru University.[/size]

[size=5]The history demonstrates that Sri Lanka's Sinhala majority leaders have disrespected many treaties with Tamils. Therefore, any political solution in Sri Lanka that involves devolution, has to come from outside. Knowing well that fact Sri Lanka has swayed into China - Russia axis in recent time that does not concern about rights of minorities. [/size]

[size=5]Thus, it is up to New Delhi and Washington to act to bring not only a political solution to the island, but also to have foot in the island for their national interests. They must continue to use UNHCR as one of the avenues to exert pressure on Colombo. [/size]

[size=5]Sincerely,[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.