Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தலைவர் பிரபாகரனின் பிறந்ததின கொண்டாட்டங்கள்! :பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

army-jaffna-seithy-150.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று யாழ்ப்பாணத்தில் பெருமளவான இராணுத்தினரும் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். பல்கலைக்கழக சூழலில் நேற்று மாலை தொடக்கம் பெருமளவான புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழக ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்னால் 20 மேற்பட்ட புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அவ் வீதியால் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில், அவரை வழிமறித்து புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் இம்முறை மாவீரர் தினத்தை யாழில் மக்கள் கொண்டாடுவதற்கும் விடுதலைக்காக விதையாகிப்போன தங்கள் பிள்ளைகளுக்கு தீபம் ஏற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் வழங்கியுள்ளதால் மக்கள் விளக்கேற்ற தயாராகி வருகின்றனர். இதனை எவ்வாறு நிறுத்துவது என்று அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவீரருக்கு வணக்கம் செலுத்த தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது.

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் இராணுவம் வீடு வீடாகச் சென்றும், ஆலயக் பூசாரிகளுக்கும் கார்த்திகை தீபத் திருநாளில் ஒரு சிட்டி விளக்குத் தவிர வேறெதுவும் ஏற்றக்கூடாது என சொல்லி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் சாவகச்சேரி இளைஞர்கள் தலைவரது பிறந்ததினத்தை இனிப்புக்கள் கொடுத்து கொண்டாடியதாக தெரிய வருகிறது.

http://www.seithy.co...&language=tamil

[size=5]//[/size]ஒரு சிட்டி விளக்குத் தவிர வேறெதுவும் ஏற்றக்கூடாது என சொல்லி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் சாவகச்சேரி [size=6]இளைஞர்கள்[/size] தலைவரது பிறந்ததினத்தை இனிப்புக்கள் கொடுத்து கொண்டாடியதாக தெரிய வருகிறது[size=5].//[/size]

இளஞர்கள் ............இவர்களால் தான் முடியும் .............இவர்களுக்கு இந்த உணர்வு இருக்கும் வரை ...........போராட்டத்தை யாராலும் சாகடித்து விட முடியாது .........இவர்களுக்குள் அடங்கிப்போய் இருக்கும் உணர்சிகளை ஒருங்கிணைக்க என்றோ ஓர் நாள் [size=5]கதிரவன்[/size] உதயமாகுவான்

அது வரை இவர்கள் பார்வை கீழ்த்திசை நோக்கியதாகவே இருக்கும் ...................

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.