Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த குடும்பத்தால் இடம்பெயர்ந்த தமிழரின் வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்ட கதை

Featured Replies

[size=4]மகிந்த குடும்பத்தால் இடம்பெயர்ந்த தமிழரின் வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்ட கதை[/size] [size=4][ புதன்கிழமை, 28 நவம்பர் 2012, 10:22 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4]aid-kokulai.jpg[/size]

[size=4]கொக்குளாய் கிராமத்தில் வாழும் 30 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் இல்மனைட் எடுப்பதற்காக கிழக்காசிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக நாமல் ராஜபக்சவின் செயலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது.

இவ்வாறு Lakbima News இணையத்தில் S. Ratnajeevan H. Hoole எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதென்பது வன்னியில் அவ்வளவு இலகுவான காரியமல்ல. யுத்தத்தின் பிடிக்குள் பல ஆண்டுகளாக அகப்பட்டுத் தவித்த இந்த மக்கள், புலிகளின் தமது சிறார்களை ஆட்சேர்ப்புச் செய்வதை தவிர்ப்பதற்காக அவர்களை ஒழித்து வைக்க வேண்டியிருந்த அதேவேளையில், சிறிலங்கா இராணுவத்தினரின் வன்முறைகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தனர்.

இவ்வாறான துன்ப துயரங்களை சந்தித்து தற்போது முகாங்களில் வாழும் இந்த மக்கள் தற்போது புதிய வாழ்வொன்றை வாழ விரும்புகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் தமது சொந்த முயற்சி மூலம் தமது வாழ்வை மிகமெது மெதுவாக மீளக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இடிந்து விழும் நிலையிலுள்ள தமது வீடுகளில் இவர்கள் மீண்டும் வாழத் தொடங்கியுள்ளனர்.[/size]

[size=4]

Kokulai-aid.jpg[/size]

[size=4]பீற்றர் மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. [இவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தியும், புலனாய்வாளர்களிடமிருந்து இவரைப் பாதுகாப்பதற்காகவும், தொலைக்காட்சியில் மீளவும் இதனை ஒளிபரப்பும் போது முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியர்களுக்கு நடந்தது போல் எந்தவொரு ஆபத்தையும் இவர் சந்திக்காதிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இங்கே இவரது உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது] இவரது சொந்த இடம் முல்லைத்தீவிலுள்ள கொக்குளாய் எனும் கிராமமாகும்.

யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களினதும் தாக்குதல்களிலிருந்து தனது குடும்பத்தையும் தன்னையும் பாதுகாப்பதற்காக பீற்றர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தார். தற்போது மீண்டும் புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது பீற்றரின் நம்பிக்கையாகும். 1980களில் கொக்குளாயிலிருந்து இடம்பெயர்ந்த இக்கிராமத்தவர்கள் இறுதியில் 2009ல் மெனிக்பாம் முகாமைச் சென்றடையும் வரை பல இடங்களில் வாழ்ந்துள்ளனர். புலிகளினதும் அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வரையறுக்கின்ற எல்லையாக கொக்குளாய் காணப்பட்டது.

கொக்குளாயில் வாழ்ந்த மக்களின் சொந்த தொழில் விவசாயமாகும். இவர்கள் விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இடம்பெயர்ந்து வாழ்ந்த இந்த மக்கள் விவசாயம் செய்வதற்கான நிலம் இல்லாததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதுடன், தினசரி கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகினர். இவர்களின் நாளாந்த வருமானம் ரூ600 மட்டுமே.

ஒக்ரோபர் 2011ல் சிறிலங்கா அரசாங்கமானது கொக்குளாய் கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதால் மக்களை மீளக்குடியேறுமாறு அறிவித்தது. இந்நிலையில் கொக்குளாய்க்கு திரும்பி வந்த பீற்றர் தனது தந்தை தனக்கு வழங்கிய நான்கு பரப்பு காணிக்கான உறுதியை காட்டினார். ஆனால் இவரது நிலத்தை அடையாளங் கண்டு கொள்வதென்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. பீற்றர் தனது நிலத்தை அடையாளங் காட்டுவதற்காக பற்றைகளின் ஊடாக செல்லவேண்டியிருந்தது. மெனிக் பாமிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் உதவித் திட்டத்தைப் பெறுகின்றனர்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான கூரை விரிப்புக்கள், சில அடிப்படைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றை இந்திய அரசாங்கம் வழங்கும் அதேவேளையில் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டம் போன்றவற்றை அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. மாசுபடுத்தப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான நீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமப்படுகின்றனர். இவர்கள் யுத்தத்தின் போது தமது பெரும்பாலான உடைமைகளை இழந்துவிட்டாலும் கூட வறுமை என்பதை எதிர்கொள்வது சுலபமானதல்ல.

கொக்குளாயில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களை பெப்ரவரி 2012ல் நாமல் ராஜபக்ச சந்தித்த போது, அக்கிராமத்து மக்கள் தமது உடனடித் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் என நம்பினர். ஆனால் நாமல் ராஜபக்ச இந்த மக்களுக்கு வாக்குறுதிகளைத் தவிர வேறெதனையும் வழங்கவில்லை. கொக்குளாய் கிராமத்தைப் பார்வையிட்ட நாமல் ராஜபக்ச தம்மிடம் இரக்கத்துடன், அன்புடன் உரையாற்றி தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார் என பீற்றர் போன்ற பலர் நம்பினர்.

இவர் கொக்குளாயைப் பார்வையிட்டுத் திரும்பிய அடுத்த நாள், இவரது செயலகத்திலிருந்து பிரதேச செயலருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. கொக்குளாய் கிராமத்தில் வாழும் 30 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் இல்மனைட் எடுப்பதற்காக கிழக்காசிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக நாமல் ராஜபக்சவின் செயலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது.

இந்தத் தகவலை குறித்த குடும்பத்தினர் அறிவதற்கு முன்னர், கிழக்காசிய நிறுவனத்தினர் அத்துமீறி நுழைந்து கட்டடங்களை கட்டத் தொடங்கினர். தமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை உணர்ந்த கொக்குளாய் வாழ் மக்கள் தமது பிரதேச செயலரிடம் முறையீடு செய்த போது, இந்த விடயத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

"நாங்கள் எம்மிடமிருந்த காணி உறுதிகளை பிரதேச செயலரிடம் காண்பித்தோம். இது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிகள் அல்ல என அவர் எம்மிடம் தெரிவித்தார்" என பீற்றர் விபரித்தார். பிரதேச செயலர் தனது மக்களின் பிரச்சினைகளை ஆராயாது இந்தக் குடும்பங்களை எதிர்க்க முடியுமா? தற்போது நாட்டில் நிலவும் வன்முறை காரணமாக, அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு அனைவரும் அச்சமடைகின்றனர்.

தனது மூதாதையரின் நிலம் பறிக்கப்பட்டதை எண்ணி பீற்றரின் கண்களில் கோபம் தெரிகிறது. இது தொடர்பில் அநியாயம் மேற்கொள்ளப்பட்டது பீற்றர் போன்றவர்களின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு பறிக்கப்படுவது எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கொக்குளாய் கிராமத்திற்கு அருகிலுள்ள கொக்குத்தொடுவாய் எனும் கிராமமானது உயர் பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், சட்ட ரீதியற்ற முறையில் சிங்கள விவசாயிகள் சிறிலங்கா இராணுவத்தினரின் உதவியுடனும் பாதுகாப்புடனும் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று திருகோணமலையில் நிலக்கரி அகழ்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் 4000 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலங்கள் அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு சட்ட ரீதியற்ற வகையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இவ்வாறான நில அபகரிப்புக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு இழப்பீடோ அன்றி ஆதரவோ வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மாற்று வழிகள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான சட்டரீதியற்ற நில அபகரிப்புக்களும் அவற்றை விற்பனை செய்தலும் நாட்டில் உயர் பீடத்திலுள்ள அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பது மிக வேதனைக்குரிய விடயமாகும். இதனால் சிறிலங்கர்கள் உண்மையில் எதிர்பார்த்திருக்கின்ற சமாதானம் என்பது நீண்ட காலக் கனவாகவே காணப்படும்.

இது தொடர்பாக அறிவதற்காக இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நான் அணுகினேன். பீற்றர் போன்ற கொக்குளாய் வாழ் மக்களின் நில அபகரிப்பு தொடர்பாக சட்டவாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை அணுகி நான் வினவியபோது இது அரச தலையீடு என்பதால் தம்மால் தீர்வெதனையும் முன்வைக்க முடியாது என அவர்கள் கூறினர். இவ்வாறான பிரச்சினைகளை அறிவதில் இவர்கள் எவரும் அக்கறை காட்டவில்லை. நாட்டில் நிலவும் அச்சநிலையே இதற்கான பிரதான காரணமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய வடுக்களை நினைவுபடுத்தக் கூடாது என்பதற்காக நாட்டில் தற்போது புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பீற்றர் போன்றவர்கள் புதிய பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். தமது சொந்த நிலங்களை இழந்த இந்த ஏழை மக்கள் வேலை தேடி பல மைல்கள் தூரம் செல்ல முடியாதவர்களாக காணப்படுகின்றனர். தமது குடும்பத்தவர்களையும், இளைய பெண்பிள்ளைகளையும் தனிமையில் விட்டு விட்டு வேறிடங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தான் வாக்குறுதி வழங்கியதை செய்து முடிப்பேன் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பூநகரி பால திறப்பு நிகழ்வின் போது தமிழ்மக்களிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் அதிபரின் 'மகிந்தசிந்தனையால்' கொக்குளாய் கிராமத்தில் நிலவும் இடைவெளியை நிரப்ப முடியாதுள்ளது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்[/size].

http://www.puthinappalakai.com/view.php?20121128107358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.