Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பாடம் கற்றுக்கொள்ள தமிழரையா பலிகொடுக்க வேண்டும்?

Featured Replies

UNO.jpg

[size=4]உலகத் தமிழினம் மிக வேதனையோடு குரல் எழுப்புகின்றது. பல நாடுகள் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன. தமிழர்களை முன்வைத்து சதுரங்கம் ஆடுகிறார்கள். அரசியலா, அங்கும் தமிழர்களை முன்னிறுத்துகிறார்கள். ஐ.நா. நிபுணர்குழு: முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைக் குறிப்பாகச் சொல்ல முடியாது. இருப்பினும் நாற்பதாயிரமாக இருக்கலாம்.[/size]

[size=4]சிறிலங்கா: (சிறிது நாள் கழித்து) சரி, உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம்… ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்…[/size]

[size=4]பி.பி.சி. தமிழர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஐ.நா. தவறிவிட்டது என ஐ.நா. ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.[/size]

[size=4]ஐ.நா. ஆய்வாளர்: சிறிலங்காவில் ஐ.நா.வின் தவறினால் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஒரு பாடமாக் கற்று இனிமேல் இதுபோன்ற இன மோதலை தவிர்க்க வேண்டும்.[/size]

[size=4]என்ன நடக்கு இங்கே…?[/size]

[size=4]என்னய்யா நடக்குது…?[/size]

[size=4]ஐ.நா. பாடம் கற்றுக்கொள்ள தமிழரையா பலிகொடுக்க வேண்டும்? உலகத்தையே பாதுகாப்பது மட்;டுமல்ல உலகிலுள்ள சகல மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பும் ஐ.நா.வினுடையது![/size]

[size=4]ஆனால், ஐ.நா. கடமை தவறிவிட்டது என மூன்றரை ஆண்டுகளின் பின் மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டு தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றது. ஒன்று இரண்டல்ல… ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் தமிழர்களை போரில் பறிகொடுத்துள்ளோம். ஓர் இனம் தாங்கக்கூடிய இழப்பா இது? மனித உயிர்களை இவ்வாறு கூவிக்கூவி வதைத்துவிட்டு, எவ்வளவு பேர் வதைக்கப்பட்டார்கள் என்பதில்கூட கருத்து மோதல்கள். முள்ளிவாய்க்கால் போரின்போது ஐ.நா. செயலற்றுக் காணப்பட்டுள்ளது. ஏன்?[/size]

[size=4]ஐ.நா. செயற்பாட்டாளர்களான 20 நாடுகள் அந்தச் சின்னஞ்சிறு யுத்தபூமியில் ஆயுதமேந்திப் போராடினார்கள். தமிழர்கள் மீது படைதொடுத்தார்கள்.[/size]

[size=4]எப்படி ஐ.நா. சபையினால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? ‘சனல் 4′ தொலைக்காட்சி ஐ.நா. தொடர்பான மிக முக்கியமான பதிவொன்றை வெளியிட்டது.[/size]

[size=4]கிளிநொச்சி ஐ.நா. பணியகத்தை மூடிவிட்டு வெளியேற முற்பட்டபோது தமிழர்கள் அவர்களை போக வேண்டாம் என்று தடுக்கும் காட்சி அது. 2008ஆம் ஆண்டு,[/size]

[size=4]செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற சம்பவம். மக்களில் பலர் அழுதவாறு காணப்படுகின்றார்கள் அதில். அன்று அவ்வாறு வெளியேறுவது என்று ஐ.நா. எடுத்த முடிவு தவறானது என்று நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது சுட்டிக்காட்டுகிறார்கள். [/size]

[size=4]மிகுந்த வேதனைக்குரிய விடயம் இது. புலம்பெயர் தமிழர்கள் உலகம் முழுவதிலும் அதி உச்சக்கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். ஐ.நா. பணிமனை முன் எத்தனை முறை கூடி உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு போராட்டம் நடத்தினார்களே…![/size]

[size=4]தமிழர்கள் பெருந்தொகையாக அழியப் போகிறார்கள். அவர்களை உடன் காப்பாற்றுங்கள் எனக் கோரி முருகதாசன் என்ற வாலிபர் ஜெனிவா ஐ.நா. பணிமனைக்கு எதிரே தீக்குளித்து உயிர் நீத்தாரே…![/size]

[size=4]இந்தியாவின் தமிழ்நாட்டில் பதினேழு பேர் போர்நிறுத்தம் உடன் செய்யுங்கள் எனக் கோரித் தீக்குளித்து மாண்டார்களே…! [/size]

[size=4]இவ்வளவும் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருந்த ஐ.நா. கண்திறந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டவை. [/size]

[size=4]ஆனால், ஐ.நா. இறுதிவரை கண்களை இறுக மூடிக்கொண்டே இருந்து விட்டது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போகுமா? இறுதியில் ஐ.நா.வும் தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டது என்ற முடிவு இப்போது வெளியாகியுள்ளது.[/size]

[size=4]அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் ஏன் இன்னமும் முழுமையாக வெளியிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஐ.நா. அமைதியாக இருந்ததினால்தான் சிறிலங்கா அரசு தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது. பொதுமக்களைக் கொன்றொழித்தேனும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற வெறி அப்போது ஏற்பட்டிருந்தது என்கிறார் ஐ.நா. அதிகாரி ஜோன் ஷோம். நடந்த தவறுக்கு ஐ.நா.வை மாத்திரம் குறைகூற முடியாது. அந்தப் பொறுப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]யார் அந்த ‘எல்லோரும்’ என்பது எமக்குப் புரியவில்லை. ஐ.நா.வுடன் யார் யாரெல்லாம் கூட்டுச் சேர்ந்து சதி செய்து ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் தமிழர்களைக் கொலை செய்தார்கள்? ஜோன் ஷோம் சூசகமாகக் குறிப்பிட்டவர்களை அடையாளம் காட்டுங்கள்.[/size]

[size=4]மூன்றரை ஆண்டுகளின் பிறகேனும் அந்த நாசகார சூத்திரதாரிகள் யார் என்பதை ஐ.நா. அடையாளம் காட்டியே தீரவேண்டும். [/size]

[size=4]மகிந்தவின் அரசு தமிழர்களை கொலை செய்யும்போது அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சண்டாளர்கள் யார்?[/size]

[size=4]தமிழர்களை தக்கசமயத்தில் பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது என்பதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ஐ.நா. உள்ளகத் தவறுகள் தொடர்பாக அவரால் வெளியிடப்பட்டுள்ள 128 பக்க அறிக்கையில் முக்கிய விபரங்கள் அடங்கிய பகுதி கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விஜய் நம்பியாருக்கும் இடையே நிகழ்ந்த வெள்ளைக் கொடி விவகாரம் ஏன் அறிக்கையில் இடம்பெறவில்லையென ‘இன்னர்சிட்டி பிரஸ்’ கேள்வி எழுப்பியுள்ளது. அந்த விவகாரத்தில் மிகப் பெரிய போர்க்குற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை ஐ.நா. பொதுச்செயலர் ஏன் மறைக்க வேண்டும் என்றும் அது தொடர்ந்தும் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.[/size]

Ban-Ki-moon-vijay-nambiar1.jpg

[size=4]தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறியதைப் போன்று இனிமேலும் நடக்காமலிருப்பதற்காக, அவ்வாறான சந்தர்ப்பத்தில் மூவர் கொண்ட குழுவொன்றை பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்துள்ளார். அதற்கு முன்பாக அவர் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். உலகத் தமிழர்கள் அதனை எதிர்பார்க்கின்றார்கள்.[/size]

[size=4]தமிழகத்தின் முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. அதனைத் தடுத்து நிறுத்தும் வழிவகையும் அவருக்குத் தெரியும். ஆனாலும், அதனைச் செய்ய அவர் முன்வரவில்லை.[/size]

[size=4]தமிழ்நாட்டு, தாயக, புலம்பெயர் தமிழர்களிடையே அவர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய மத்திய அரசில் கூட்டணி வைக்கும் கட்சி. தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்தவர்.[/size]

[size=4]முள்ளிவாய்க்கால் வரை போரை முன்னின்று நடத்தியது இந்தியா என்பது அவருக்கும் தெரியும். இந்நிலையில் குறைந்தபட்சம் போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர இந்தியாவை – மத்திய அரசை – கட்டுப்படுத்தும் நிலையிலேயே அவர் இருந்தார். அதனை அவர் செய்யவில்லை என்பதே உலகத் தமிழரின் கவலையாகும்.[/size]

[size=4]அதனை அவரின் புதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுக்கு வந்தபோது புலம்பெயர் தமிழர்களின் வாயிலாக அறிந்துகொண்டார். தமிழீழ ஆதரவு அமைப்பின் மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு வழங்குவதின் மூலம் மாத்திரம் இழந்த ஆதரவை அவர் பெற்றுக்கொள்ள முடியாது.[/size]

[size=4]அப்படியானால், தி.மு.க.வும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியும் இழந்த ஆதரவை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்வியை ஸ்டாலின் தம்மைச் சந்தித்த புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கேட்டார்.[/size]

[size=4]இந்தக் கேள்விக்குரிய பதில் உங்களிடம்தான் இருக்கிறது என்பதே புலம்பெயர் தமிழர்களின் பதிலாக இருந்தது. இந்திய மத்திய அரசுக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. 18 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டது. அதில் தொல் திருமாவளவனின் தொகுதியும் அடங்கும். அவரும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டுத் தெரிவானவர்.[/size]

[size=4]அந்தப் 18 தொகுதிகளையும் முக்கிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த கலைஞர் அன்று தவறிவிட்டார். கிளிநொச்சியை இலங்கை-இந்திய இராணுவத்தினர் கைப்பற்றுவதற்கு முன்பே போர்நிறுத்தத்துக்கு இந்தியாவைப் பணியவைத்திருக்க முடியும் என தமிழ்நாட்டின் பல ஊடகங்கள் தெரிவித்திருந்தன.[/size]

[size=4]ஆனால், இன்றும் அதே 18 தொகுதி துருப்புச் சீட்டை அவரால் பயன்படுத்த முடியும் என ஸ்டாலினைச் சந்தித்த பல தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவின் நிலையில் மாற்றம் தேவை. அந்த மாற்றம் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட வேண்டும்.[/size]

[size=4]அதிலும் குறிப்பாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் வரை வந்து பெரும் அவதிக்குள்ளான தமிழர்களை ஆதரிக்கும் கொள்கை மாற்றமாக அமைய வேண்டும். 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாட்டை சோனியா காந்தி எடுக்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்த வேண்டும்.[/size]

[size=4]இந்திய மத்திய அரசிலிருந்து திருநாமூர் காங்கிரஸ் கட்சி விலகியதன் பின் அந்தக் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. [/size]

[size=4]இந்நிலையில் கலைஞர் தனது துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு நன்மை செய்வாரா?[/size]

[size=4]கலைஞரின் மகன் ஸ்டாலின் தமிழரின் கருத்தை உள்வாங்கி தனது தந்தையிடம் தெரிவித்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக ஒரு முயற்சி வெளிக்கொணரப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழருக்கு உறுதுணையாக இல்லாவிட்டால், நாங்கள் மத்திய அரசுக்குத் துணையாக இருக்க முடியாது என கலைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.[/size]

[size=4]www.worldtamils.com[/size]

Edited by akootha

எல்லா நாடுகளும் தமது சுயநலன்களுக்காக ஈழ தமிழர்களை கைவிட்டிட்டார்கள். :(

தொடர்ந்தும் எமக்காக குரல்கொடுத்து வரும் இன்னெர்சிட்டி பிரஸ் க்கு நன்றி. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.