Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்லச் சாகும் தமிழ் மொழி.....

Featured Replies

மார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு

 

அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும். இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் . இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ் ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.


- தினமலர் வாசகர் காயாம்பூ ராமலிங்கம்

 

http://www.dinamalar.com/nri/details.asp?id=7411&lang=ta

  • Replies 81
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் என்ற வார்த்தையைப் பாவிக்காதீர்கள். அதற்கு இணையவழி, என்ற வார்த்தையைப் போடலாம். இப்படி ஆங்கிலச் சொல்களைத் தமிழில் எழுதுவதாலும் தமிழ் தேவையின்றிப் போகின்றது... -------------------- தமிழ் வாழும் என்று காட்ட அங்கொன்றும், இங்கொன்றும் டமிழில் கதைப்பதைப் போடாமல் இலகுவாக எப்படிக் கற்க வைப்பது பற்றி யாராவது ஆராய்வினைத் தொடங்கினால் அதற்கு ஒத்துழைக்கத் தயார். ஏதிர்காலத்தில் அதை கணனிவழியாகவும் வடிவமைக்க முயற்சிக்கலாம். ----------------- இத்தலைப்பிலேயே தொடங்குகின்றேன் தமிழ் மொழி சந்திக்கும் பிரச்சனைகள். தமிழில் கற்பதில் குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். எதிர்காலத்தில் குழந்தைகளுக்குத் தமிழ் ஏன் தேவை. இப்படியான பிரச்சனைகளை இனம் கண்டு முதலில் அவற்றுக்குத் தீர்வு தேட முயற்சிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

-------------------------தமிழ் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சில.

1.தமிழுக்கு என்று ஒரு முழுமையான அகராதி கிடையாது. பெரும்பாலும் தமிழ்- ஆங்கில அகராதியே எம்மிடம் இருக்கின்றன. தமிழ்-தமிழ் என்ற அகராதி கிடையாது. இதனால் யாருக்குமே தமிழில் உள்ள சொற்கள் தெரியாது. பல சொற்கள் தமிழா என்று கூடத் தெரியாது. இது முதல், முக்கியமான பிரச்சனை.

2.தமிழ் ஒரு வர்த்தகமொழி கிடையாது. அதைப் படிப்பதால் எந்த வேலைவாய்ப்பும் கிடையாது. - இது மிகமுக்கிய பிரச்சனை. தமிழ்நாட்டில் கூட தமிழ் கற்பதை விட ஆங்கிலம் கற்றால் வேலைக்குள் இலகுவாகப் போகலாம் என்ற பெரும்குறைபாடு இருக்கின்றது.

3. தமிழ்நாட்டு அரசு தமிழுக்கு என்று எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. தமிழனுக்கு என்று தனிநாடு இல்லாததும் ஒருவகைக் காரணம். இந்தியாவில் உள்ள மொழிகளில் அதிகளவு தமிழர்கள் தான் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால் இந்திய மத்திய அரசு இந்தி கற்பதற்காக மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றதே அன்றி, மற்றய மொழி பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றய மொழிகளை அழிக்கவும் முயற்சிக்கின்றது. பிஜியில், கயானாவில் உள்ள தமிழர்கள் இந்தி கற்று, தமிழை மறந்துவிட்டார்கள். அதற்கு இந்திய மத்திய அரசு செய்கின்ற நிதியும் காரணமாகும்.

-பிஜியில் எம்ஜிஆர் காலத்தில் கோவில் கட்டப்பட்டு, ஐயர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பிற்காலத்தில் அது பிஜியின் அடையங்களில் ஒன்றாக மாறிப்போனாலும், பிற்பாடு வந்த கருணாநிதி எவ்வித உதவியும் செய்யதால், அதில் தமிழரின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. 1-2 இலட்சம் பேர் அளவில் பிஜியில் வசிக்கலாம் எனத் தமிழரின் கணக்கெடுப்பில் தற்போது 7 ஆயிரம் பேர் தான் தமிழர் எனத் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். மிகுதிப்பேர் தன்னை வடஇந்தியனாக நினைக்கின்றனர்.

4.தமிழ் மொழி தொடர்பாக எவ்வித ஒருங்கிணைப்புமில்லை. ஒவ்வொருவரும் தனித்தனித் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிச் சிந்திக்கின்றனர். அதைப் பலப்படுத்தி தேடல்கள் செய்வதற்குா, பல கலைச்சொற்கள் உருவாக்கவோ தயாராக யாருமில்லை. தவிர, பணமும் இல்லை. சினிமாவிற்குத் தமிழக அரசு கொட்டும் பணத்தில் ஒரு சிறுதுளியைத் தானும் தமிழுக்கு வழங்குவதில்லை. தமிழ் அறிஞர்களும் கௌரவிக்கப்படுவதில்லை.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

5. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் சில ஈழத்து அமைப்புக்கள், முக்கியமாகக் கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள், கல்வி முறைகள் பற்றியும் அவர்களின் பயங்கரமான செயற்பாடுகள் பற்றியும் சொல்ல வேண்டும்.

அ. தங்கவேலு என்கின்ற நக்கீரன், அவர்களுக்கும் தமிழ்ப் புத்தகங்கள் வடிவமைத்ததில் உள்ள பங்கு பற்றி அறிகின்றேன். பலர் அதைப் படித்திருப்பின் தெரிந்திருக்கும். அப்புத்தகங்கள் ஈழத்தில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு ஏற்ற சூழலில் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டது. கனடாவில் உள்ள சூழல் தொடர்பாக எந்தப் பொது அறிவும் கிடையவே கிடையாது. ஏன் இதற்குள் திராவிடத்தைப் பற்றியும், பெபரியார் பற்றியும் கற்கக் குழந்தைகள் வற்புறுத்தப்படுகின்றார்கள். தலைவரை விட அதற்கே பெருமுக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

ஏன் தங்கவேலு பற்றிச் சொன்னேன் என்றால் ஒரு மதிக்கக்கூடிய பெரியார், எவ்வளவு தரம் குறைவாகவும் கீழே சென்று கதைக்கக்கூடியவர் என்பதற்கு அவர் ஒரு ஒரு உதாரணம் என்பதைப் பதிவு செய்ய. குகதாசன் அவர்களும் துாயதமிழில் தான் கதைக்கின்றார். ஆனால் ஒரு குழந்தையின் மனநிலையை வைத்துப் புத்தகம் வடிவமைக்க வேண்டாமா?

2.தமிழ்ப் பள்ளிகளில் குழந்தைகளிடம் ஏன் போகவிருப்பமில்லை என்று கேட்டால் சொல்லும் என்னுமொரு காரணம். அடிக்கின்றார்கள், காதை முறுக்குகின்றார்கள் என்று. நிச்சயம் இப்படியான செயற்பாடுகள் ஒருகாலத்தில் சட்டநடவடிக்கை ஊடாக தமிழ்ப்பள்ளிகளை நிறுத்தி விடும் என்பதை இவர்கள் உணரவில்லையா?

3.தமிழ்மொழி பற்றிய நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் தான் செய்கின்றார்கள். பல எதிர்காலச் சந்ததியினருக்குத் தமிழ்தெரியாத தமிழ் உணர்வு உள்ளதும் காரணமாகும். நீதன் சான், தையில் நடத்தும் தமிழர் மாதம் நிகழ்ச்சி பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நடத்தப்படும் என்பதும் ஒரு உதாரணம்.

அகூதாவுக்காகச் சொல்வது, NCCT கிருஸ்ணா இவ்வளவு தேசியத்துக்காகக் குரல் கொடுத்தாலும், தேசிய விடுதலைக்காக பாடுபட்டாலும், அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது. அதை ஒரு நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தியிருந்தார். நீங்களும் வந்திருக்கக்கூடும். தமிழில் பேச முற்பட்ட ஒரு பெரியவரை இடைநிறுத்தி தனக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தினார். தவிர அவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் பொறுப்பாக இருந்தகாலத்தில் இருந்தும் அறிவேன். இது அவரைக் குறைகூற அல்ல. அதற்கு அவரது பெற்றோர்கள் எடுக்காத முயற்சி தான் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த நிலைமை தான் எதிர்காலச் சந்ததியினர் சந்திக்கின்றனர்.

நீங்கள் 10 தமிழ் தெரிந்த குழந்தைகளின் காணோளிகளை இணைக்கும்போது, என்னால் ஆயிரம் தமிழ்த் தெரியாத குழந்தைகளின் செயற்பாடுகளை இணைக்க முடியும். இது தான் இன்றைய சமூக வேதனையுமாகும்.

Edited by தூயவன்

  • 2 weeks later...

ஒரு காலத்தில் உலகத்தில் ஒரு மொழியே பேசப்பட்டது - அது தமிழ்தான்

 



483735_581764618508459_1219473102_n.png



”தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா ”

ஏன் மதிப்பு இல்லை? அவர் அவ்வாறு கூற என்ன காரணம்?

 

முதல் காரணம் ;- தாழ்வு மனப்பான்மை. தமிழில் பேசினால் படிப்பறிவு அற்றவர்கள் என்ற எண்ணம்.

 

இரண்டாவது காரணம் ;- ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே பெரிய படிப்புப் படித்தவர்கள் என்று சித்தரிக்கும் தமிழ்த் திரைப்படங்கள்.


மூன்றாவது காரணம் ;- ஏழ்மை. ஏழைகளின் மொழி தமிழ், செல்வம் படைத்தவர்களின் மொழி ஆங்கிலம் என்றால் முட்டாள்தனம்.

 

நான்காவது காரணம் ;- ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கட்டளையிடும் தனியார் பள்ளிக்கூடங்கள்.


ஐந்தாவது காரணம் ;- ஆங்கிலம் பேசும் நாடுகள் உலக அளவில் பணக்கார நாடுகளாய் இருப்பது.

 

ஆறாவது காரணம் ;- கேவலமான, முறையற்ற தமிழில் பேசித் திரிவது.


ஏழாவது காரணம் ;- இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ்ப் பேசப் படுகிறது என்ற தவறான எண்ணம்.

 

எட்டாவது காரணம் ;- தமிழில் பணிவாகக் கூறினால் கேட்காமல், ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டியவுடன் கையைக் கட்டி கும்பிடுப் போடும் மூடத்தனம்.


ஒன்பதாவது காரணம் ;- தமிழில் பேசுபவர்களை, “பழம், புலவர், கவிஞர், திருவள்ளுவரின் பேரன்” என்றெல்லாம் விமர்சிப்பது.

 

பத்தாவது காரணம் ;- ஆங்கிலம் தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற வதந்திகள்.


இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் இருந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க அன்றொருவர் வந்தார், இந்த மூடர்களின் நம்பிக்கைகளை ஒழிக்க யார் வருவார்?


via - Semmozhi ( செம்மொழி )

லண்டன் ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள, ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் & ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் என்னும் கல்வி நிறுவனத்தில்...

 

 

வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது...!

 

534145_557831104251295_1191768748_n.jpg

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.