Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை பன்னாட்டு சமூகங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்

Featured Replies

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இலங்கை சிங்களப் பேரினவாத அரசின் வன்முறைத் தாக்குதலை பன்னாட்டுச் சமூகங்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டுமென நோர்வே தமிழ் இளையோர் நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கை வரலாற்றில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத முனைப்புப் பெற்றதற்கான முதன்மைக் காரணிகளில் ஒன்று மாணவர் மீதான அடக்குமுறையும் அவர் கல்வி மீதான புறக்கணிப்புமே ஆகும்.

இலங்கையில் போர் முடிவடைந்ததாகவும் பொருளாதார நிலையில் இலங்கை முன்னேறி வருவதாகவும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் புனர்நிர்மாணம் மீள் குடியேற்றம் மற்றும் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள், வயோதிபர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகவும் இயல்பு வாழ்வுக்குள் மக்கள் திரும்பி உள்ளதாகவும் கூறி உலக நாடுகளிடம் நாட்டின் பொருளாதாரத்திற்கு என கடன் உதவிகளை பெற்று பன்னாட்டுச் சமுகம் மத்தியில் பரப்புரை செய்து வருகிறது.

 

இந்நிலையில், சிங்கள அரசின் இராணுவ அடக்குமுறையானது, கடந்த 27ம் திகதி அன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் மீதான கொடூர வன்முறை தாக்குதல் ஊடாக பன்னாட்டு சமூகத்தினருக்கு இனவாத சிங்கள அரசின் உண்மை தோற்றத்தை வெளிபடுத்தி இருக்கிறது.

 

எனவே மாணவர்கள் மீதான இப்படியான வன்முறைத் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிடின், வேறு வழியில்லாமல் மாணவர்கள் ஆயுதங்களைத் தூக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும் என்பதை புரிந்து கொண்டு, சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பாக ஐக்கியநாடுகள் மன்றமும் உடன் தலையிட்டு, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து எமது மக்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று நோர்வே தமிழ் இளையோர் ஆகிய நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 

பன்னாட்டு சமூகத்தினருக்கு சிறிலங்கா அரசின் தமிழ் மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலினை வெளிக்கொண்டுவரும் முகமாக இன்று காலை தொடக்கம் மாலை வரை துண்டு பிரசுரங்கள் கொடுக்கபட்டதுடன், நோர்வே நாட்டு மக்களுக்கு சிறிலங்கா இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை பற்றிய விளக்கங்களும் தமிழ் இளையோரால் கொடுக்கபட்டது.

 

தமிழ் இளையோர் நடுவம் - நோர்வே

 

 

151012_307031256067460_969468140_n.jpg

 

 

 

 

12568_307031176067468_618859044_n.jpg

 

 

 

 

432335_307031086067477_33365476_n.jpg

 

 

04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

 

இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின்  தலைவர் டீதøயெச உரையாற்றியபோது, முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்த சர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு, அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களை காப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபை தனது தலையாய கடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.

 

மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான சர்வகட்சி குழுவிடமும் கையளிக்கப்பட்டது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.